Monday, February 8, 2010

07/02/1999 ல் திண்டுக்கல்லில் சுமார் மூவாயிரம் பேர்முன்னிலையில் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆரம்பித்து இன்று 11 வருடம் ஆகிறது அதன் அமைப்பு தினமானது தமிழக மெங்கும் வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது.
கோவை மாவட்டத்தில் அனைத்து கிளைகளுக்குட்பட்ட மெயின் தொலைபேசி
நிலையங்களில் வெகு விமர்சையாக இன்று (08/02/2010)கொண்டாட பட்டது.விழாமுடிவில் அனைவ‌ருக்கும் இனிப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

கோவை :
--------------
கோவை மெயின் தொலைபேசிநிலையத்தில் தோழர் பாரதி தலைமையில் தோழர் மனோகரன்கோசமிட நமது சங்கத்தின் மூத்த தோழியர் மரகதம் அவர்கள் கொடியேற்ற மாவட்ட செயலர் தோழர் ராஜேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார்,அவர் பேசுகையில் இரண்டு சங்கங்களுமே ஒப்பந்த ஊழியர்களின் நலனில் அக்கரை கொண்டு செயல்பட்டு வருகின்றதுஇருந்தாலும் சம்பளத்தினை அதிகம் பெருவதே நமது தலையாய நோக்கமாக கொண்டு செயல்படவேண்டும் ,உண்மையான உணர்வோடு சங்கவேலைகளில் நாம் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை!.போராட்டம் இல்லாமல் யாராட்டமும்இல்லை என்பதை புரிந்துகொண்டு நாம் செயல்படவேண்டும் என உள் உணர்வோடு பேசியதுநெகிழ்ச்சியாக இருந்தது. மேலும் BSNLEUமாவட்ட முன்னாள் செயலர் தோழர் வெங்கட்ராமன்,தோழர் ஜேசுதுரை ,தோழர், பாலசண்முகம் அகியோர் கலந்து கொண்டு விழா வினை சிறப்பித்தனர் இறுதியில் மாநில நிர்வாகி தோழியர் ராஜாமணி நன்றி கூறி விழாவினை முடித்து வைத்தார் .பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

செய்தி தோழியர் ராஜாமணி
---------------------------------------------



திருப்பூர் :
------------
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய‌த்தில் தோழ‌ர் வாலீச‌ன் முன்னிலையில்
தோழ‌ர் சாமிய‌ப்ப‌ன் த‌லைமையில் தொழ‌ர் முத்துமாணிக்க‌ம் கோச‌மிட தோழ‌ர்.ர‌மேஷ்
கொடியேற்றினார்.அத‌ன்பின் தோழ‌ர் ராம‌சாமி,தோழர் அண்ணாத்துரை,சிற‌ப்பு அழைப்பாள‌ர் கோவை தோழ‌ர் மாரிமுத்து அவ‌ர்க‌ள் ப‌ல்வேறு விச‌ய‌ங்க‌ளை விள‌க்க‌மாக‌வும் சுருக்க‌மாக‌வும்,தெளிவாக‌வும்
எடுத்திய‌ம்பிய‌து பாராட்ட‌த்த‌க்க‌து!, தீண்டாமை ஒழிப்பு முன்ன‌ணி தோழ‌ர்.பி.ராம‌மூர்த்தி அவ‌ர்க‌ள் சிற‌ப்புரை யாற்றிய‌து மிக‌வும் சிற‌ப்பாக இருந்த‌து!அர‌சின் த‌வ‌ரான‌ பொருளாதார கொள்கை ப‌ற்றியும் ஒப்ப‌ந்த‌ம் என்றும் ப‌திலிஎன்றும் ப‌ல்வேறு பெய‌ர்க‌ளின் ஏழை ம‌க்க‌ளின்
உழைப்பு சுர‌ண்ட‌ப்ப‌டுவ‌தை தெள்ள‌த்தெளிவாக எடுத்துரைதார். தோழ‌ர்
ர‌மேஷ் ந‌ன்றி உரையோடு விழா இனிதே நிரைவடை‌ந்த‌து,இறுதியில் அனைவ‌ருக்கும் இனிப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து!