Saturday, February 27, 2010

பிஎஸ்என்எல் மாநில மாநாடு துவங்கியது

தூத்துக்குடி, பிப்.27-சனிக்கிழமையன்று தொடங்கிய பிஎஸ்என்எல் மாநாட்டில் காலை 9 மணிக்கு ஒட்டப்பிடாரத்தி லிருந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் கொண்டு வந்த வ.உ.சி. நினைவு ஜோதியை துணைப் பொதுச்செயலா ளர் பி.அபிமன்யு பெற்றுக் கொண்டார். அதன் தொடர்ச் சியாக எட்டையாபுரத்தி லிருந்து வந்த பாரதி நினை வுக் கொடியை பொதுச் செயலாளர் வி.ஏ.என்.நம்பூ திரி பெற்றுக் கொண்டார். மாநில உதவித் தலைவர் கே.மாரிமுத்து தியாகிக ளுக்கு அஞ்சலி அறிக் கையை சமர்ப்பித்தார். மாநாட்டிற்கு வந்திருந்தவர் களை வரவேற்புக்குழு பொதுச்செயலாளர் வர வேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து மாநில உதவிச் செயலாளர் எஸ்.முத்துக் குமாரசாமி வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலை வர் டி.ஏ.அம்புரோஸ் குழந் தைசாமி தலைமையுரை யாற்றினார். வி.ஏ.என்.நம்பூ திரி துவக்கவுரையாற்றினார். பின்னர் நடந்த கருத் தரங்கத்தில் மாநிலச் செய லாளர் செல்லப்பா, தமிழக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் டி.வரத ராஜன், அபிமன்யு ஆகி யோர் சிறப்புரையாற்றினர். அதன் பின் மாலை 5 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத் தொலைத் தொடர்பு அலுவலகம் முன் பிருந்து மாநாட்டு அரங்கம் வரை ஊழியர்களின் பேரணி நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலாளர் வி.ஏ.என். நம்பூ திரி மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:-இன்று விலைவாசி உயர் வுக்கு காரணம் மத்திய அர சின் முரண்பாடான கொள் கைகள் தான், தேவைக்கு அதிகமான சர்க்கரை கையி ருப்பு உள்ளது என்று கூறி வெளிநாடுகளுக்கு குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் மூலம் ஏற்றுமதி செய்து விட்டு, இப்பொழுது அதிக மான விலை கொடுத்து இறக்குமதி செய்கிறது. மேலும் அத்தியாவசியப் பொருட்களின் ஊக வர்த் தகம் என்ற பெயரில் பண முதலாளிகள் சூதாட்டம் நடத்துகின்றனர். இன்று பிஎஸ்என்எல் ஊழியர் நிலைமையை எடுத் துக் கொண்டால் ஊதிய மாற்றம் குறித்த பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது கலையப்பட வேண்டும். இதற்காக நாம் ஐஎன்டியுசி, பிஎம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு உள் ளிட்ட 9 சங்கங்களுடன் இணைந்து வரும் 5-ம்தேதி நாட்டின் கவனம் நம் பக்கம் திரும்பும் வண்ணம் சாலை மறியல், ரயில் மறியல் மூலம் சிறை நிரப்பும் போராட் டம் நடத்திட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறு வனத்தை கார்ப்பரேசன் ஆக மாற்ற முயன்றபோது, சில தொழிற்சங்கங்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற போது, நாம் உறுதியாக நின்று எதிர்த்தோம். இன்று இந்தியாவின் நம்பர் ஒன் ஏர்டெல், இரண்டாவதாக ரிலையன்ஸ் என்று சொல் லிக் கொள்ளத்தான் முடிகி றதே தவிர பிஎஸ்என்எல் என்று சொல்லிக் கொள் ளும் நிலைமை இல்லை. இதற்கு காரணம் அரசின் முறையற்ற செயல்பாடுகள் தான். அதுபோல் மத்திய அர சானது பன்னாட்டு முதலா ளிகளின் கைப்பாவையாக செயல்பட்டு, தொழிலாளர் சட்டங்களை முறையாக பயன்படுத்தாமல் 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். எனவே மார்ச் 5-ல் நாம் நடத்தும் போராட்டம் என்பது ஒரு பெரிய மாற்றத் திற்கான வழிகோலாக அமைய வேண்டும்.

செய்தி தீக்கதிர்