Friday, December 3, 2010

" பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சிபிஎம் வாழ்த்து "

"தீக்கதிர் செய்தி"
சென்னை, டிச. 3-

பொதுத்துறை பிஎஸ் என்எல் நிறுவனத்தை பாது காக்க வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய ஊழி யர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:-

பொதுத்துறை நிறுவன மான பி.எஸ்.என்.எல். பங்கு களை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடவும், 3 ஜி அலைவரிசைக்கான உரிமக்கட்டணமாக பெற்ற ரூ.18,500 கோடியை மீண் டும் பி.எஸ்.என்.எல் நிறுவ னத்திற்கு திரும்ப வழங்கிட வும், கட்டாய ஓய்வூதியத் திட்டம் எனும் பெயரில் 1 லட்சம் ஊழியர்களை வீட் டுக்கு அனுப்பும் முயற்சி யை கைவிடவும், விரிவாக் கப் பணிகளை துரிதப்படுத் திடவும், லாபத்தில் இயங் கிடவும் அரசு உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள் ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் அடங்கிய பி.எஸ்.என்.எல். தேசிய கூட்டுப் போராட் டக்குழு டிசம்பர் 1லிருந்து 3 நாட்களுக்கு வேலை நிறுத் தம் மேற்கொள்ள அறை கூவல் விடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந் தனர்.

இந்நிலையில் நிர்வாகத் துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்ப டையில் கடைசி நாளான வெள்ளியன்று (டிசம்பர் 3) வேலை நிறுத்தத்தை கூட் டுப் போராட் டக் குழு ஒத்தி வைத்துள்ளது. பொதுத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல். -ஐ பாதுகாக்க நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள் கிறது.

ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை களுக்கு சுமூகத்தீர்வு காண் பதுடன், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்.-ஐ பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை மேற் கொள்ள மத்திய அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்துகிறது.