Monday, June 10, 2013

நாகர்கோயில் BSNLEU புதிய இணையதள செய்தி

                   நன்றி நாகர்கோயில் BSNLEU புதிய இணையதளம்
BSNL EMPLOYEES UNION &
TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION
NAGERCOIL SSA.
DATE : 06.06.2013
TO
The General Manager,
BSNL, Nagercoil.
Sir,
SUB : House Keeping and General Services in
Nagercoil SSA- stoppage of work – reg.
-oOo-
It has come to our notice that, the present tender for House Keeping and General Services in Nagercoil SSA, has been withdrawn. As a result, all kind of House Keeping works such as sweeping, cleaning, drinking water supply have been stopped all of a sudden in our SSA. Moreover, cable maintenance, Line maintenance, Tower and BTS maintenance, CSC services, file movements in the offices have severely been affected.
All the workers nearly 200 persons, who have been working for more than 10 years minimum and contributed to the BSNL services in various categories have been denied work, all of a sudden, without any valid reason.
It is requested to your good office to kindly engage all these 200 workers without break, for the above said works such as cable maintenance, Line maintenance, Tower maintenance, CSC services, file movements in the offices, etc., and payment be made durably by the BSNL District Administration.
We hope the District Administration will act promptly and positively, to restore the services and to maintain industrial peace.
Thanking you,
Yours faithfully,
(K.George)
Secretary, BSNLEU.
(A.Selvam)
Secretary, TNTCWU.
Nagercoil SSA.
COPY TO :
1) The Chief General Manager, BSNL, TamilNadu Circle, Chennai.
2) Sri. S.Chellappa, Circle Secretary, BSNLEU,TN Circle, Chennai.
3) Sri. M. Murugiah, Circle Secretary, TNTCWU, TN Circle, Chennai.
கோவை, ஜூன் 5-
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் லாப வேட் கைக்காக அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ் என்எல்-லை முடக்க மத்திய அரசு சதி செய்வதாக கோவை யில் நடைபெற்ற பிஎஸ் என்எல் ஊழியர் சங்க வெற்றி விழா கூட்டத்தில் சங் கத்தின் பொதுச்செயலாளர் அபிமன்யு குற்றம் சாட்டி னார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தொழிற்சங்க அங்கீ காரத்திற்கான தேர்தலில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றதையடுத்து சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் வெற்றி விழா சிறப்பு கூட்டம் செவ் வாயன்று கோவையிலுள்ள பிஎஸ்என்எல் மெயின் எக் சேஞ்சில் நடைபெற்றது. மாநி லம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த விழா விற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.மாரிமுத்து தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் வி.வெங்கட் ராமன் வரவேற்புரை நிகழ்த் தினார். இந்த வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அபிமன்யு பேசியதாவது:பொதுத்துறை நிறுவன மாய் இருக்கிற பிஎஸ்என் எல்லில் நடைபெற்ற தொழிற் சங்க அங்கீகார ஆறு தேர் தல்களில் தொடர்ந்து ஐந்து முறை பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம் வெற்றி பெற்றிருக் கிறது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சங்கங்களும் பெருமளவு வாக்கு வங்கியில் சரிவை சந்தித்திருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம் இந்த தேர்தலில் தனது வாக்கு வங்கியின் சதவிகி தத்தை அதிகரித்திருப்பது டன், 48.6 சதவீதம் வாக்கு களை பெற்று முதன்மை சங்கமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத் தில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக் கள் நாசகர பாதையில் செல் லும் அரசின் கண்களை உருத்துகிறது. இதன் விளை வாகவே சிதம்பரம் உள் ளிட்ட நபர்களை கொண்டு சர்வ வல்லமை படைத்த குழுக்களை அமர்த்தியிருக் கிறார்கள்.
பங்கு விற்பனை உள்ளிட்டு எந்த எந்த பாதை யில் சென்றால் இதை வாரி சுருட்டலாம் என திட்ட மிடுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு நாடு முழுவதும் 29 ஆயிரம் எக்சேஞ்சுகள் உள் ளன. இவற்றில் 28 ஆயிரம் எக்சேஞ்சுகள் கிராமப்புறங் களிலும், ஜார்க்கண்ட், சத் திஸ்கர் உள்ளிட்ட மலைப் பகுதியிலும் உள்ளன. ஆனால் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நகர் புறத்தை தாண்டி ஒரு எக் சேஞ்ச் கூட இல்லை. இவர் களுக்கு லாபம் மட்டுமே குறிக் கோள். தனியார் நிறுவனங் களோடு பிஎஸ்என்எல் போட்டியிடக் கூடாது. இதை முடக்க வேண்டும் என்பதற் காகவே வாடிக்கையாளர் கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பக் கூடாது என்கிற எண்ணத்தில் உதிரிபாகங் கள், கருவிகள் வாங்குவதில் இழுத்தடிப்பு போன்ற செயல் களில் அரசும், நிர்வாகமும் சேர்ந்து செயல்படுகிறது.இந்த நிலையிலேதான் ரிலையன்ஸ் நிறுவனம் யாருக் கும் தெரியப்படுத்தாமலே 45 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தியது. அரசு பாலூட்டி, தேனூட்டி வளர்க்கின்ற இந்த தனியார் நிறுவனங்கள் தான் கடந்த மூன்று மாதத் தில் மட்டும் சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களை இழந்து இருக்கின்றன. ரிலை யன்ஸ் 1 கோடியே 60 லட் சம், டாடா 88 லட்சம், வோடா போன் 51 லட்சம், ஏர்டெல் 40 லட்சம், ஏர்செல் 36 லட்சம் என இந்த காலத்தில் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் இந்த சரிவை சந்தித்திருக் கிற இந்த காலகட்டத்தில் தான் பிஎஸ்என்எல் ஊழியர் களின் தன்னலமற்ற சேவை யின் விளைவாய் 2 லட்சத்து 69 ஆயிரம் புதிய வாடிக்கை யாளர்களை இணைத்துள் ளோம். பொதுத்துறையை பாதுகாப்பது என்பது தேச நலனை பாதுகாப்பது என் கிற பார்வையில் நாம் போராடு கிறோம்.
இந்த போராட்டத் தில் மும்முனை போராட் டத்தை நடத்த வேண்டியிருக் கிறது. அரசின் நாசகர கொள் கையை எதிர்த்த போராட் டம், சொந்த வீட்டிலே திருடு கிற நிர்வாகத்தை எதிர்த்த போராட்டம், நமது ஊழியர் கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிற போராட் டம். இந்த மும்முனை போரட் டத்தில் நாம் வெற்றி பெறு வோம். அதன் பொருட்டே நமது சங்கத்திற்கு மாபெரும் வெற்றியை அளித்திருக் கிறார்கள் இதை பாதுகாப் போம்.இவ்வாறு அவர் பேசி னார். மேலும், இந்த வெற்றி விழா கூட்டத்தில் சிஐடியு மாநில துணைச் செயலா ளர் கருமலையான் கலந்து கொண்டு பேசியதாவது, தன்னலமற்ற தலைமையும், வர்க்க போரில் சமரசமற்ற போராட்டமே இந்த வெற் றியை பெற்று தந்திருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் ஆளும் மத்திய அரசு தோற்று விடும் என்று உறுதியாக தெரிந்த பின்னர் எவ்வளவு வேகமாக பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை தனியா ருக்கு விற்க முடியுமோ அவ் வளவு விரைவாக விற்கிற சதியை திட்டமிட்டு செய்து வருகிறார்கள். இந்திய நாட் டின் பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாப்பது என்பது இந்த தேசத்தின் நலனை பாதுகாப்பதற்கு ஒப்பாகும். இந்த வெற்றி தொழிலாளி வர்க்கத்திற்கு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாச கர கொள்கையில் ஈடுபடும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களை திரட்டுகிற மகத்தான பணி யில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தோழர்கள் ஈடுபட வேண்டும் என்ற வேண்டு கோளோடு வாழ்த்துரையை நிறைவு செய்தார்.
இவ்வெற்றி விழாவை வாழ்த்தி கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அனுப்பிருந்த வாழ்த்து தந்தியை மாநில செயலாளர் எஸ்.செல்லப்பா வாசித்தார். விழாவில் உழைக் கும் மகளிர் ஒருங்கிணைப் புக் குழு தலைவர் வி.பி. இந்திரா, திப்பு தொழிற்சங்க மாநில நிர்வாகி கோவிந்த ராஜ், தமிழ்நாடு மாநில தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலாளர் எ.வி. முருகையன், எப்.என்.பிஇஒ மாநில செயலாளர் ஆர்.வி. ஜெயராமன், சேவா பிஎஸ் என்எல் மாநிலச் செயலா ளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். முன்னதாக, மாநில மாநாட்டு மலரை பொதுச் செயலாளர் அபிமன்யு வெளி யிட கோவை மாவட்ட சங்க செயலாளர் சி.ராஜேந் திரன் பெற்றுக்கொண்டார், நாகர்கோவில் மாவட்ட இணையதளத்தை அபி மன்யு துவக்கி வைத்தார். மேலும், உடுமலை துரையர சன் கலைநிகழ்ச்சி நடைபெற் றது. சிபிஎம் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.ஆறுமுகம், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞா னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
–தீக்கதீர் 06/06/13
கோவை வெற்றி விழா நிகழ்ச்சிகள்
நடந்து முடிந்த ஆறாவது சங்க அங்கீகார தேர்தலில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அகில இந்திய அளவில் BSNL ஊழியர் சங்கம் வெற்றி பெற்றதை ஒட்டி, தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில், கோவை மாநகரில், பிரதான தொலைபேசியகத்தில் பிரம்மாண்டமான முறையில், 4.6.2013 அன்று வெற்றி விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
குமரி முதல் சென்னை வரை, ஆயிரம் பேருக்கு மேல் அணி திரண்ட இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர். மாரிமுத்து தலைமை வகிக்க, CITU மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர். R.கருமலையான், நமது அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர். P.அபிமன்யூ, மாநிலச் செயலாளர் தோழர். S.செல்லப்பா, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர். M.முருகையா, மகளிர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் தோழியர். P.இந்திரா மற்றும் கூட்டணி சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில், நமது மாவட்டச் சங்கத்தின் இணையதளமான பாசறை- www.bsnleungc.com – அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர். அபிமன்யூவால் கூட்டத்தினரின் கரவொலிக்கிடையில் துவக்கி வைக்கப் பட்டது.
கோவைக்கு நமது மாவட்டத் தலைவர் தோழர். கணபதியாபிள்ளை, மாவட்டச் செயலர் தோழர். ஜார்ஜ் தலைமையில் 3 தோழியர் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர்.
- BSNLEU NGC.