Sunday, December 4, 2011

பென்சனில் 26 சதம் அந்நிய நேரடி முதலீடு: உண்மையும் - புரட்டும்

பென்சனில் 26 சதம் அந்நிய நேரடி முதலீடு: உண்மையும் - புரட்டும்

-ஆர்.கருமலையான்

பென்சன் - தனியார் மயமாக்கல் எனும் நாசகர ஏவுகணைத் தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி களையும், ஊழியர்களையும் நோக்கி குறி வைத்து ஏவப்பட்டுள்ளது. இந்திய அரசு 26 சதவீதம் வரை தனியாரிடம் - அதுவும் அந்நிய நாட்டு முதலாளிகளிடம் நமது பென்சன் பணத்தை தாரைவார்க்க முடிவு செய்துவிட்டதாக அறிவித்துவிட்டது.

பின்புலம்

தி.மு.க.வின் துணையோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (1999-2004) நாட்டை ஆண்டபோது, 2000-2001 பட்ஜெட் தாக்கல் செய்தபோது இந்த அபாய சங்கை முதன் முதலில் ஊதினர். அப்போதைய நிதியமைச்சர், அரசு ஊழியர்களுக்கான பென்சன் சுமை அரசுகளுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டது; அரசுகளுக்கு மட்டுமல்ல, தேசத்திற்கு இது ஒரு தாங்க முடியாத சுமையாக மாறிவிட்டது; எனவே இந்த சுமையை இறக்க புதிய பென்சன் திட்டம் அறிவிக்கப்படும் என்றார். இதற் கான ஆலோசனைகளை வழங்க பட்டாச் சாரியா தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் சிபாரி சின் பேரில் அரசு 17.12.2003ல் ஒரு அரசா ணையை (ழு.டீ.) வெளியிட்டது. அதன்படி 01.01.2004க்குப் பின்பு அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கான பென்சனை தனியார் வசம் ஒப்படைப் பதற்கு ஏது வான புதிய பென்சன் திட்டம் (சூஞளு) அறி விக்கப்பட்டது. இதற்கு அப்போது தமி ழகத்தை ஆண்ட அ.தி.மு.க. உள்ளிட்ட சில மாநில அரசுகள் சம்மதம் தெரி வித்தன.

2004 மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோற்றது. பின்னர் ஆட்சிக்கு வந்த காங் கிரஸ் தலைமையிலான முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு, ஒரு அவசர சட்டத்தை 2004 டிசம்பர் மாதம் 29ம்தேதி பிரகடனம் செய்தது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பென்சன் குறித்த நாசகரமான அரசாணைக்கு, சட்டவடிவம் கொடுப்பதுதான் இந்த அவ சர சட்டத்தின் நோக்கம். இந்த அவசர சட்டத்தின் நோக்கத்தை ஈடேற்றவே 21.03. 2005ல் பென்சன் நிதி ஒழுங்கு முறை மற்றும் அபிவிருத்தி ஆணைய மசோதா-2005 என்ற (புதிய பென்சன் மசோதா) சட்ட முன்வடிவு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் இது நிறை வேற்றப்படுவது தடுக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழு வின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டு விட்டது.

நிதி மூலதனத்தின் கருப்பையில் ஜனித்த இந்த கரு தேசிய ஜனநாயக கூட்டணியின் கருவறையில் குடி கொண்டு - அவர்கள் குட்டிபோட அதை, அதே வாஞ்சையோடு வளர்க்கத் துடிக் கிறது காங்கிரஸ். இவர்களுக்கு இதில் எந்தவித கூச்ச நாச்சமும் கிடையாது. காரணம், இவர்களின் விதேசிய சிந் தனைக்கு மூலஸ்தானம் ஒரே இடமே. நிதி மூலதனத்தின் சன்னிதானமே.

புதிய பென்சன் மசோதா

என்ன கூறுகிறது?

தற்போது அரசு ஊழியர்களும், மின் சாரம் போன்ற வேறு சில பொதுத்துறை நிறுவன ஊழியர்களும்தான் கடைசியாக பெறும் சம்பளம் மற்றும் அகவிலைப்படி யில் 50 சதவீதத்தை பென்சனாக பெறும் ஏற்பாடு உள்ளது. இதை வரையறுக்கப் பட்ட ஓய்வூதிய பலன்கள் என்றும், இப்படி வழங்கினால் அரசு தாங்காது என வும், மேலும் அரசுப் பணியில் இருக்கும் காலத்தை விட ஓய்வூதியம் அளிக்கப் படும் காலம்தான் கூடுதலாக உள்ளது எனவும் ஒப்பாரி வைத்தனர். இது வெறும் வெட்டிச்சுமை. எனவே இதைக் குறை என ஆலோசனை வழங்கியது உலக வங்கி. வந்தது புதிய பென்சன் திட்டம் - புதிய சட்டமாக.

இந்த சட்டம் ஊழியர் பங்களிப்பிற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என கூறியது. அரசு இவ்வளவு பணம் உனக்கு கிடைக்கும் என உறுதி செய் யாது. ஊழியர் தனது சம்பளத்திலிருந்து 10 சதவீதம் போட வேண்டும். அரசு 10 சதவீதம் போடும். இதை பங்குச் சந்தையில் கூவி விற்று, கிடைக்கும் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நிர்வகிப் பதற்கு சில “நிதி மேலாளர்கள்” உருவாக் கப்படுவார்கள். நீ அரிசி கொண்டு வா! நான் உமி கொண்டு வருகிறேன்; இரு வரும் ஊதி ஊதி தின்னலாம் என்ற கதை தான்.

நிதிமூலதனத்தின் கோரப்பசிக்கு...

தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாயாக அரசு முதலீட்டில் உள்ள பென் சன் பணத்தில் 26 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு என அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற் பது போன்றே பாலை விற்றுவிட்டு, வெண் ணெய்க்கு அலைந்த கதையாக மாறும்.

பென்சன் சீர்திருத்தம் என்பதில் ஒரு புடலங்காயும் கிடையாது. நமது வாழ்நாள் உழைப்பின் சேமிப்பை உலக நிதி மூல தனத்தின் கோரப் பசிக்கு பலிகிடாய் ஆக்குவதேயாகும்.

இந்த 26 சதவீத அந்நிய நேரடி முத லீட்டிற்கு புதிய பென்சன் திட்டத்தில் அனுமதி அளிக்க வகை செய்யவும், மேற் படி சட்டத்தை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றவும் அரசு துடித்துக் கொண்டு இருக்கிறது. இப்படி பென்சன் பணத்தை வைத்து பங்குச் சந் தையில் சூதா டுவதற்கு அனு மதிப்பதை எதிர்த்து உலக நாடுகளில் எல்லாம் உழைப்பாளிகளின் போர் முரசின் உரத்த சத்தம் கேட்கத் துவங்கி யுள்ளது. இது அரசு ஊழியர் சார்ந்தது என்று எண்ண வேண்டாம். இந்த பென்சன் மசோதா -2005ல் அனைத்து வகைத் தொழிலாளர்களையும் உட் படுத்தி, உடுத்திய கோவணத்தையும் களவாட ஏற்பாடுகள் உள்ளன. எச்சரிக் கையோடு எதிர்கொள்வோம்!

எல்லோருக்குமாய் உறுதி செய்யப் பட்ட ஓய்வூதியத்தை பெற, புதிய ஓய் வூதிய சட்டத்தை முறியடிப்போம் !!