இந்தியாவின் மிகப்பெரிய தொலைபேசி நிறு வனமான பி.எஸ்.என்.எல்(பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் உருவாகி பத்தாண்டுகள் நிறைவு பெறப்போகிறது. அரசுத்துறையாக இருந்த தொலைத்தொடர்புத்துறையை நிறுவன மாக்கும்போது எத்தகைய அச்சங்கள் தெரிவிக் கப்பட்டனவோ அவை தற்போது உண்மையாகி யுள்ளன. அரசின் உண்மையான நோக்கமே இதை தனியார்மயமாக்குவதுதான் என்று இடது சாரிக்கட்சிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அப்போதே குறிப்பிட்டன. இத்துறையை தனியார் கையில் கொடுக்க வேண்டும் என்று 1994 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கோடு போட்டது. அப்போதுதான் தனியாருக்கு சாதகமான புதிய தொலைத்தொடர்புக் கொள்கை வெளியானது. அந்தக் கோட்டில்தான் 2000 ஆவது ஆண்டில் பாஜக ரோடு போட்டது. அரசுத் துறையை நிறுவனமாக மாற்றினார்கள். பத்தாண்டு நிறைவடைவதற்குள் மூடுவிழாவிற்கான தயாரிப்பில் இறங்கிவிட்டார்கள். யாருடைய ஆலோசனையின் பேரில் கோடு போட்டார் களோ, அதே சாம் பிட்ரோடாவின் ஆலோசனை யின்பேரில்தான் மூடுவிழாவிற்கான அலங்காரங் கள் துவங்கியுள்ளன.புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடை முறைக்கு வந்தபிறகு பல்வேறு குழுக்களைப் போடுவதும், இனி வேறு வழியில்லை. குழுக் களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்று கூறுவதும் வாடிக்கை யாகிவிட்டது. முதலாளித்துவ நியதிப்படி, ஒரு நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கவோ அல் லது நஷ்டத்தைக் குறைக்கவோ ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இதைத்தான் தற்போது பி.எஸ்.என்.எல். நிறு வனத்திற்கும் கூறுகிறார்கள். இதில் மற்றொரு சூட்சுமமும் அடங்கியுள்ளது. மூன்று லட்சம் ஊழியர்கள் கொண்ட நிறுவனத்தைவிட, இரண்டு லட்சம் ஊழியர்கள் கொண்ட நிறுவனத்தைக் குறைவான விலையில் தனியாருக்கு தர முடியும். விரிவாக்கத்திற்காக புதிதாக 93 கோடி இணைப்பு களைப் பெறப்போகிறோமே... அதற்கு ஆட்கள் வேண்டாமா என்று கேட்டுவிடக்கூடாதல்லவா? அந்த இணைப்புகளே வேண்டாம் என்று சாம் பிட் ரோடா குழு கூறுகிறது. மத்திய அரசு, ஆமாம்.. ஆமாம்... என்று தலையாட்டிக் கொண்டிருக்கிறது.நாடு விடுதலை பெற்றதிலிருந்து தொலை பேசித் துறையை வளர்த்தெடுப்பதில் அரசுத் துறைக்கு பெரும்பங்கு உண்டு. தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் அறு வடை செய்வதற்காக மட்டும் தனியார் நிறுவனங் கள் களத்தில் குவிந்து வருகின்றன. அதை சட்ட பூர்வமாக்கும் வேலையைத்தான் சாம் பிட்ரோடா குழுப் பரிந்துரையும், அதை நடைமுறைப் படுத்தத் துடிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை களும் செய்கின்றன. பத்து விழுக்காடு பங்கு களை விற்பதே அரசின் திட்டம். சாம் பிட் ரோடாவோ முப்பது விழுக்காட்டை தாரை வார்த்துவிடுங்கள் என்கிறார். லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த வி.எஸ். என்.எல். என்ற பொதுத்துறை நிறுவனத்தை இப் படித்தான் அழித்தார்கள். தனியார்மயமாக்கல் நட வடிக்கைகளை இதுவரை ஒன்றுபட்ட தொழி லாளர்களின் போராட்டமே தடுத்து நிறுத்தியுள்ளது. அத்தகைய பாதையில் தொழிலாளர்கள் ஒன்று திரள்கிறார்கள் என்பதை மார்ச் 5 அன்று லட் சோபலட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மறியல் காட்டியது. அந்த மறியலுக்கான காரணங்களில் பொதுத்துறைப் பங்குகளை விற்பதைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி தீக்கதிர்