Friday, March 10, 2017

திருப்பூர், மார்ச் 7 -ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நெடுவாசலில் பிப்.16ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெடுவாசலில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக திருப்பூர் தலைமை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து பிஎஸ்என்எல் சங்கங்களின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எப்என்டிஇசங்கத்தின் மாநில உதவி செயலாளர் கே.தனபதி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலஅமைப்பு செயலாளர் பி.சவுந்திரபாண்டியன், எம்எப்டிஇ சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் ஜெகன்னாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டசெயலாளர் வி.ராமமூர்த்தி, அலுவலர்கள் சங்கத்தின் கிளைச் செயலாளர் எம்.பழனிவேல் ஆகியோர் மத்திய அரசின் இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினார்கள். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் என்.குமரவேலன் நன்றி தெரிவித்தனர். இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் கண்டன முழக்கங்கள்எழுப்பப்பட்டன.