Sunday, December 2, 2012

தீக்கதிரை வாசிப்போம்! திசையெட்டும் சேர்ப்போம்


தீக்கதிரை வாசிப்போம்! திசையெட்டும் சேர்ப்போம்!
-க.கனகராஜ்
தீக்கதிர் பத்திரிகையின் பொன் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கி றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) உருவாக்கப்படுவதற்கு இரண் டாண்டுகள் முன்னதாகவே தீக்கதிர் நாளேடு துவக்கப்பட்டது என்பதிலிருந்தே ஒரு வர்க்க கட்சியை உருவாக்குவதில் அக்கட்சிக்கான பத்திரிகையின் முக்கியத்துவத்தை உணர முடியும். ஆளும் வர்க்கங்கள் தங்கள் அமைப்பே மனிதர்களை தங்கள் தத்துவங்களுக்கு தக வமைத்துவிடும் என்று மட்டும் இருந்து விடு வதில்லை. மாறாக தங்கள் தத்துவங்களை நிலை நிறுத்தவும் நியாயப்படுத்தவும் இடை யறாது முயற்சிக்கிறார்கள். அதன் பிரிக்க முடியாத பகுதியாக முற்போக்குத் தத்துவங் களை எதிர்த்தும் பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்காக ஊடகங்களை மிகத் திறமையாக வும் நளினமாகவும் பயன்படுத்துகிறார்கள். தங்கள் வர்க்கங்களின் கருத்துக்களை அனைவருக்குமான நலன் சார்ந்த கருத்துக் களாக முன்வைப்பதில் அவர்கள் வெற்றி பெறும் வரைதான் அந்த அமைப்பு நீடிக்க முடியும். எனவே, தொழிலாளி வர்க்க சிந்த னைகளுக்கு எதிராக ஊடகங்கள் மூலம் இடையறாத மூர்க்கத்தனமான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பத் திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என கருத்துப் பிரச்சாரத் திற்கு பயன்படுத்துகின்றனர். இவற்றிற்கெல் லாம் ஈடுகொடுத்து எதிர்த்து நிற்க நம்மிடம் இருப்பதில் தீக்கதிர் மட்டுமே பிரதானமானது.

அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி இத் துறைகளில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கம் வலுப்பெற உதவியுள்ளது.

இது குறித்து கட்சித் திட்டம் -

“உலக அளவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் புரட்சியை பயன் படுத்தியும் சர்வதேச தகவல் தொடர்புச் சாதனங்களை தன் பிடியில் வைத்துள் ளதன் மூலமும் முதலாளித்துவ எதிர்ப்பு சிந்தனைகளையும் சோசலிசத்தையும் இருட்டடிப்புச் செய்து மதிப்பிழக்கச் செய் யவும் ஏகாதிபத்தியம் தீவிரமாக முயல் கிறது”. (பாரா 2.7) என்று குறிப்பிடுகிறது. இதே போன்று ஏகாதிபத்தியம் எந்த வகையி லெல்லாம் ஊடுருவுகிறது என்பதை கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டுள்ளது கட்சித் திட்டம்.

“நிர்வாகத்துறை, கல்வி அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பண்பாட்டுத்துறை ஆகியவை ஏகாதி பத்திய ஊடுருவலுக்கு இலக்காகிக் கொண்டிருக்கின்றன.” (பாரா 3.25)

அது என்ன பாதிப்புகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்பதை கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு விளக்குகிறது. “நுகர் பொருள் ஆசை, சுயகர்வம் மற்றும் செல் லரித்துப் போன நெறிமுறைகள் ஆகிய வற்றின் பிரச்சாரகர்களாக சர்வதேச தக வல் தொடர்பு சாதனங்கள் செயல்பட்டு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள் ளன. இதே நெறிமுறைகளைத்தான் பெரு முதலாளிகள் மற்றும் இதர வர்த்தக நிறு வனங்களால் கட்டுப்படுத்தப்படுகிற இந் திய தகவல் தொடர்பு சாதனங்களும் திட்ட மிட்டு பரப்பி வருகின்றன.” (பாரா 3.26)

கட்சித் திட்டம் 2000 ஆம் ஆண்டு தற்காலப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த 12 ஆண்டு காலத்தில் உலக அளவிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் ஏகாதிபத்திய, ஏகாதிபத்திய ஆதரவு ஊடகங்களின் வளர்ச்சி பிரமிப்பூட்டத்தக்க வகையில் உள்ளது.

அமெரிக்காவின் குழும நிறுவனமான டைம், கேளிக்கை நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், அமெரிக்கன் ஆன் லைன் லிமிடெட் (ஹடீடு) ஆகியவை இணைந்து மிகப் பெரும் தகவல், தகவல் தொடர்பு மற்றும் பொழுது போக்கு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 68 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 3.5 லட்சம் கோடி). இதே போன்று காம்காஸ்ட் கார்ப் என்கிற வீடியோ மற்றும் வீடுகளுக்கு இணையதள சேவை வழங்கும் நிறுவனத்திற்கு 2.3 கோடி வீடியோ சந்தாதாரர்களும் 1.7 கோடி இணைய தள சந்தாதாரர்களும் உள்ளனர்.

இந்தியாவில் ரிலையன்ஸ் என்டர் டெயின்மென்ட் என்கிற நிறுவனம் அம் பானிக்குச் சொந்தமானது. பிக் 927 எஃப் எம் தான் இந்தியாவிலேயே பெரிய தனியார் எஃப் எம் நிறுவனம். 57 எஃப் எம் ரேடியோ நிலை யங்கள் இந்த நிறுவனத்திற்குச் சொந்த மானவை. இந்தியா, அமெரிக்கா, மலேசியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 516 திரையரங்குகள் இந்த நிறுவனத்திற்கு சொந்தம். இந்தியாவில் மட்டும் இதற்கு 253 திரையரங்குகள் உள்ளன. ஈநாடு குழுமத்தின் பிராந்திய தொலைக்காட்சிகளில் ரிலையன் ஸின் முதலீடு 2600 கோடி ரூபாய். அதன் பங்குகளில் 49 சதவீதம் ரிலையன்ஸ் கை யில் உள்ளது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியை நடத் தும் ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு இந்தி யாவில் மட்டும் 22 தொலைக்காட்சிகள் உள் ளன. 4 விளையாட்டு மற்றும் விளையாட்டுச் செய்தி சேனல்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, பெங் காலி மற்றும் ஆங்கில கேளிக்கை சேனல் கள் அடங்கும்.

சன் குழுமத்திற்கு 6 தமிழ் சேனல்கள், 6 தெலுங்கு சேனல்கள், 3 மலையாள சேனல் கள், 6 கன்னட சேனல்கள் ஆகிய 21 தொலைக்காட்சி சேனல்கள் சொந்தம். 3 தினசரி பத்திரிகைகள், 5 வாரப் பத்திரி கைகள், இந்தியா முழுவதும் 45-க்கும் மேற் பட்ட எஃப் எம் ரேடியோ சேனல்கள் சொந்தம்.

இந்தச் சேனல்களை நடத்துகிறவர்கள் முதலாளிகள். ஏகாதிபத்தியத்தோடு இயைந்து போவதால் தங்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று கருதுகிறவர்கள். நவீன தாராளமயக் கொள்கைகளால் இலாபம் அடைந்தவர்கள். எனவே, நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் எந்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதோ, சிறுமை செய் வதோ, புறக்கணிப்பதோ அன்றி உண்மை யைச் சொல்பவர்கள் அல்ல.

மாறாக, தன்னிடமுள்ள அசுரத்தனமான தொழில்நுட்ப பலத்தால் மனித குல அறிவுத் தள செயல்பாடும் தகவல் பரப்புவதும், குழும நிறுவனங்களில் ஏகபோகமான கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலா ளித்துவத்தின் மீதான எந்த ஒரு விமர்சனத் தையும், மாற்றுப் பாதையையும் இருட்டடிப்பு செய்கிறது. எதிர்த் தாக்குதலை மூர்க்கமாய் நடத்துகிறது. உலகமயத்தின் நோக்கமான பண்பாட்டு மேலாதிக்கத்தை உருவாக்க ஒரே மாதிரியான ரசனை உணர்வை உருவாக்கு கிறது. அதன் கலாச்சார பண்டங்களை மறு உற்பத்தி செய்து மூலதனத்தை மேலும் குவிக் கிறது. இன்னும் குறிப்பாக உளவறியும் தொழில்நுட்பங்களை உருவாக்கி, ஏகாதிபத் தியத்திற்கு சவால் விடும் மக்கள் இயக்கங் களைக் கண்காணித்து அவற்றை சீர் குலைக்க பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய தாக்குதல்களும், அவதூறு களும் புதியவை அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிறப்பதற்கு முன்பே பிறப்பெடுத் தவை. 1847-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதப்பட்ட போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பெரிதாக ஏதுமில்லை. ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக கடு மையான அவதூறுகள் அப்போதே அள்ளி வீசப்பட்டன. 60 பக்கம் கொண்ட கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கையில் 10 பக்கங்களை கம்யூனிஸ்ட்கள் மீதான அவதூறுகளை உடைத்தெறிய மார்க்சும், ஏங்கெல்சும் பயன் படுத்தியுள்ளனர்.

1. தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையை கம்யூனிஸ்டு களான நாங்கள் ஒழிக்க விரும்புவதாய் எங் களை ஏசுகிறார்கள்.

2. கம்யூனிஸ்டுகள் குடும்பத்தை அழித்து விடுவார்கள் என அதிதீவிரவாதிகளும் கூட கொதித்தெழுகிறார்கள்.

3. கம்யூனிஸ்ட்கள் பெண்களை எல்லோ ருக்கும் பொதுவாக்கி விடுவார்களே என்று முதலாளித்துவ வர்க்கம் அனைத்து

மயமாய் சேர்ந்து கூக்குரலிடுகின்றது.

4. தாய் நாட்டையும், தேசியத் தன்மையை யும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்ட்கள் குற்றம் சாட்டப்படுகிறார் கள்.

- என்று முதலாளித்துவ வர்க்கங்களின் அவதூறுகளை பாட்டாளிகளும் கம்யூனிஸ்டு களும் என்கிற இரண்டாவது அத்தியாயத்தில் ஒவ்வொன்றாய் அடுக்கி அவற்றை தவிடு பொடியாக்கியிருக்கிறார்கள். அவதூறு களுக்கு எதிராக இடையறாது போராட வேண்டியதன் அவசியத்தை அறிக்கையில் ஆறில் ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டுள்ள தத்துவார்த்த தாக்குதல்களை எதிர்த்து போராடாமல் புரட்சிகர முன்னேற்றத்தை எட்ட முடியாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தில் அன்றாடம் கம்யூ னிஸ்ட்களுக்கு எதிரான அவதூறு தாக்குதல் களை எதிர்த்து முறியடிக்கும் கேடயமாக திகழ்வது தீக்கதிர் மட்டுமே. அன்றாட நிகழ் வுகளை மார்க்சிய நிலையிலிருந்து பார்க்கப் பழக்கும் நடைவண்டியாகவும் தீக்கதிர் மட் டுமே திகழ்கிறது. முதலாளித்துவ தப்பெண் ணங்கள், ஏகாதிபத்திய கருத்தாக்கங்கள், நிலப்பிரபுத்துவ துருப்பிடித்த கலாச்சாரங்கள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது தீக்கதிர் மட்டுமே.

மேற்சொன்ன பல லட்சம் கோடி மூல தனங்களுடன் பத்திரிகை, இணையதளம், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வீடி யோக்கள் ஆகியவை ஏகாதிபத்திய கருத் தோட்டங்களை நியாயப்படுத்தவும் நிலை நிறுத்தவும் செய்ய முயற்சிக்கும் போது அதற்கு எதிராக தீரமுடன் நிற்கும் அக்கினிக் குஞ்சாய் திகழ்வது தீக்கதிர் மட்டுமே. மறைந்த மார்க்சிய வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்வாம் ‘மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு: நினைவுபடுத்திக் கொண்டே இருப் பது நமது கடமை’ என்றார். 20-ம் நூற் றாண்டில் சோசலிசம் மனித குலத்துக்கு வழங்கியுள்ள அழிக்க முடியாத கொடை களை மக்கள் மறப்பது ஒருபுறம், அதை மறக் கடிக்கவும், சிறுமைப்படுத்தவும் ஏகாதிபத் தியம் பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக் கிறது. இரண்டாம் உலகப்போரில் தன் மக்கள் தொகையில் பத்து சதமான 2 கோடி மக்களை தியாகம் செய்து பாசிசத்தை முறியடித்தது சோவியத்யூனியன். ஆனால், இன்று ஏகாதி பத்தியம் கம்யூனிசத்தை சர்வாதிகாரத்திற் கும், பாசிசத்திற்கும் ஈடானதாக சித்தரித்து வருகிறது. சோசலிசத்தின் மேன்மையை முன்னெடுத்துச் செல்லவும் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வரவும் உள்ள ஒரே ஆயுதம் தீக்கதிர் மட்டுமே.

இந்தியாவில் முதலாளித்துவ அமைப்பு வரம்பிற்கு உட்பட்டு ஒரு இடது முன்னணி மாநில அரசாங்கம் மேற்கு வங்கத்தில் இருந் தது. 34 ஆண்டுகள் முதலாளித்துவத்திற்கு எதிராக போராடும் சக்திகளுக்கு அது உத் வேகமளித்து வந்தது. மக்கள் ஜனநாயக அணியை வலுப்படுத்துவதற்கான முயற்சி யில் அது ஆதர்ச சக்தியாக விளங்கியது. இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடி வம்தான். ஆனால், மக்கள் தங்களின் நலனை பாதுகாத்துக் கொள்வதற்கும் அரசு விவ காரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும் ஜன நாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட் டங்களை நடத்துவதற்கும் சில வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த வாய்ப்புகளை பயன் படுத்த 34 வருடங்கள் தொழிலாளி - விவசாயி வர்க்கப் பிரதிநிதிகளை பெரும்பான்மையாக அனுப்பி வைத்த மாநிலம் அது. அவசர நிலைக்கு எதிராக, மாநில உரிமைக்காக, உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக, மதச்சார்பின்மைக்காக போராடும் போராளிகளாக அவர்கள் திகழ்ந்தார்கள். அதிகாரப்பரவல், நிலச்சீர்திருத்தம், உழைக் கும் மக்களை அரசு நிர்வாக அமைப்பில் அதிகாரமுடையவர்களாக செய்தது இந்த அரசாங்கம். ஆனால், 2011 தோல்விக்குப் பிறகு அந்த முன்னேற்றங்களை மறைக்க ஊடகங்கள் முயலுகின்றன. ஒரு மாற்று அரசாங்கத்தின் பலன் என்ன என்பதை நாம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்தப் பணியை தமிழகத்தில் தீக்கதிரை விட்டால் வேறு யாரால் செய்ய முடியும்.

கேரளாவில் கட்சிக்கு எதிராக கொலைப் பழி சுமத்தப்படுகிறது. கொலைகாரக் கட்சி என்று முதலாளித்துவப் பத்திரிகைகள் கூக் குரலிடுகின்றன. ஒட்டுமொத்த கட்சி உறுப் பினர்களையும் தலைவர்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த அவதூறுகளை விளக்கி துணிவூட்ட முன் செலுத்தும் பத்திரிகையாக தீக்கதிர் தவிர வேறெதும் உள்ளதா?

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை முழுவதும் உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கான தியாகச் சுவடுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் ஆதரித்து எழுதுகிற பத்திரிகை தீக்கதிர் தவிர வேறுண்டா? சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக இடையறாது சமர் புரியும் பத்திரிகை தமிழில் வேறெதுவும் உண்டா? வாச்சாத்தி அட்டூழியங்களுக்கு எதிரான ஆண்டுகால போரில் அம்மக்க ளுக்கு துணையாக இருந்தது தீக்கதிரைத் தவிர வேறு எந்தப் பத்திரிகை. இவை எல் லாவற்றையும் விட கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கட்சியின் நிலைப்பாடு களோடு ஒத்திசை உருவாக்குவது தீக்கதிர் அல்லவா?

இத்துறையில் உள்ள இந்த ஒரேயொரு ஆயுதம் கூட கட்சியின் அனைத்து உறுப் பினர்களிடமும் இல்லாவிட்டால் அவர்கள் நிராயுத பாணிகள் இல்லையா? பல லட்சக் கணக்கான ஆதரவாளர்களிடம் தீக்கதிர் செல்லவில்லை எனில் அவர்கள் நிராயுத பாணிகள் இல்லையா? வல்லூறுகளுக்கும், வல்லமை பொருந்திய ஆயுதங்களுக்கும் எதிராக போராட உள்ள ஒரே ஆயுதத்தைக் கூட நம் படை வரிசையிடம் கொண்டு சேர்க் கவில்லை என்றால், போரில் வெற்றி பெறு வது இருக்கட்டும், படைகளைக் கூட பாது காக்க முடியாதே? தீக்கதிரை வாசிப்பதும் நேசிப்பதும் மட்டுமல்ல, திசையெட்டும் கொண்டு சேர்ப்பதும் முக்கியமான புரட்சிகர பணியாகும்.

இந்தப் புரிதலோடு தீக்கதிர் பொன் விழாவை கொண்டாடுவதும் சந்தா சேர்ப்பை தீவிரப்படுத்துவதும் அவசியமாகும்.
என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து பிஎஸ்என்எல்-எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து பிஎஸ்என்எல்-எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் -------------------------------------------------------------------------------- திருப்பூர், ஜூலை 4- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி எல்ஐசி மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெய்வேலி என்எல்சி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதென்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தொலைத் தொடர்பு ஊழியர் அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்என்இஏ சங்கத்தைச் சேர்ந்த பழனிவேல்சாமி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், என்எப்டிஇ சங்கத் தலைவர்களில் ஒருவரான ஜெகநாதன், எப்என்டிஓ சங்க நிர்வாகி தனபதி, ஏடிபி சார்பில் ஜான் சாமுவேல் ஆகியோர் மத்திய அரசின் பொதுத்துறை பங்கு விற்பனை முடிவைக் கண்டித்து உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணக்குத்துறை அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கேசவன் நன்றி கூறினார். கோவை பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க முயலும் மத்திய அரசை கண்டித்து தொலைதொடர்பு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மெயின் எக்ஜேஞ் அருகில் வியாழனன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல்.யு வின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். என்.எப்.டி சங்கத்தின் சார்பில் ராமகிருஷ்ணன், எஸ்.என்.இ.ஏ வின் பிரசன்னா, அதிகாரி சங்கங்களின் சார்பில் உஸ்மான் அலி, பி.எஸ்.என்.எல்.யு சார்பில் வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கே.சந்திரசேகரன் நன்றி கூறினார். உதகை அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உதகையில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். முகவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக எல்ஐசி ஊழியர் சங்கத்தின் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும்
ஜி. சுகுமாறன்



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 10632 க்கும் மேற்பட்ட ஒப் பந்தத் தொழிலாளர்களை சீனியாரிட்டி அடிப் படையில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நெய்வேலி ஒப் பந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. பெரும் நம்பிக்கையுடன் உள் ளனர். இந்நிலையில் தீர்ப்பின் அம்சங்க ளையும், கடந்த கால போராட்டங்களையும் நினைவு கூருவது அவசியம்.1989-ல் என்.எல்.சி. நிறுவனத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த ஐந்து சங்கங் களும் தொழிலாளர்களுக்கு துரோக ஒப்பந் தத்தை போட முயற்சித்தனர். அன்றைய தினம் சிஐடியு, எச்.எம்.எஸ் இரண்டு சங் கங்கள் எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி சிஐடியு சங்கத்தின் அன்றையபொதுச்செயலாளராக இருந்த தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தலை மையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் இவ்விரு சங்கங்களையும் பேச்சுவார்த் தைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று நெல்லிக்குப்பம் சட்டமன்ற உறுப் பினர் தோழர் சி. கோவிந்தராஜனிடம் உறுதி அளித்ததன் பெயரில் உண்ணாவிரதம் முடிக் கப்பட்டது. ஆனால் முதல்வர் சொன்ன வாக் குறுதி வழக்கம்போல் காற்றில் பறக்க விடப் பட்டது. முதல்வரும் ஏமாற்றிவிட்டார். எனவே போராட்டத்தை தவிர வேறு வழி யில்லை என காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை இவ்விரண்டு சங்கங் களும் அறிவித்தன. போராட்டம் நூறு சதமானம் வெற்றி பெற்றது. மின் உற்பத்தி மடமட வென சரிந் தது. நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடி ஏற் பட்டது. வேறு வழியில்லாமல் நெய்வேலி நிறுவன அதிபர் கையொப்பமிட்ட கடிதத்தை இரண்டு சங்கங்களுக்கும் அனுப்பி பேச்சு வார்த்தைக்கு வர கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு சென்றதும், ஏற் கனவே ஐந்து சங்கங்களும் ஏற்றுக்கொண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில் நீங்களும் கையெழுத்துபோடுங்கள், வேறு எதுவும் பேச முடியாது என நிர்வாகம் நிலை எடுத்தது. எந்த மாற்றமும் இல்லாமல் கையெழுத்துப் போடமுடியாது. குறைந்த பட்சம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந் தரமாக்கவேண்டும். வாரிசுக்கு வேலை கிடைக்க ஒப்பந்தம் உருவாக்க வேண்டும் இவ்விரண்டையும் ஏற்றுக்கொண்டால் ஒப் பந்தம் இல்லையேல் நாங்கள் செல்கிறோம் என சிஐடியு, எச்எம்எஸ் சங்கங்கள் உறுதியாக இருந்தனர். வேறு வழியில்லாமல் நிர்வாகம் இவ்விரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தை உருவாக்கினர். பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொசைட்டி உருவாக்குவது, அதில் ஒப்பந் தத் தொழிலாளர்களை இணைப்பது, நிலம் கொடுத்தவர்களையும், நிரந்தர தொழிலாளர் களின் வாரிசுகளையும் இணைப்பது என முடிவானது.
ஆனால் நடைமுறையில் இது அமலாகவில்லை. இருப்பினும் ஒப்பந்தத் தொழிலாளர் 5000 பேரை சொசைட்டியில் இணைத்தது. பின் 1995ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொசைட்டி தொழிலாளர் களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரந் தரப்படுத்த வேண்டும் என ஒப்பந்தம் உரு வாக்கப்பட்டது. இவ்வொப்பந்தத்தை அம லாக்க சிஐடியு தனியாகவும் இதர சங்கங் களுடன் இணைந்தும் தொடர்ச்சியான போராட்டம் - வேலை நிறுத்தம் வரை சென் றனர். பின் படிப்படியாக 4600 தொழிலாளர் களை நிரந்தரப்படுத்தினர்.இந்நிலையில் 160 தொழிலாளர்கள் ஒன் றிணைந்து இன்டஸ்டிரியல் தொழிலாளர் சங்கம் என ஒரு அமைப்பை உருவாக்கி அதன்மூலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் ஒப் பந்த தொழிலாளியாக சேர்ந்த காலம் தான் சீனியாரிட்டியாக எடுக்கவேண்டுமே தவிர சொசைட்டியில் சேர்ந்த தேதியை சீனி யாரிட்டியாக எடுக்கக் கூடாது என வாதா டினர். தொழிலாளர் நீதிமன்றத்தில் அவர் களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. பின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்றது. அதிலும் தொழிலாளர் நீதிமன்ற தீர் ப்பையே இறுதிப்படுத்தியது. இந்நிலையில் நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றத்திலிருந்து 1995-ல் ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் இன்றைய நிலை தெரிய வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்துக்கு சிஐடியு சங்கம் கீழ்க்கண்ட பதிலை உச்ச நீதிமன்றத்திற்குய அனுப்பியது. சொசைட்டி உருவாக்கவும், சொசைட்டி சீனி யாரிட்டி அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், அப்படி நிரந்தரமாகும் போது சொசைட்டியில் ஏற்படுகின்ற காலி இடங்களை இதர ஒப்பந்தத் தொழிலாளர் களை வைத்து நிரப்ப வேண்டும் எனவும் எங் களது சங்கம் கையொப்பமிட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிர்வாகம் அமுலாக்கவில்லை. சொசைட்டியில் ஏற்படும் காலி இடங்களை ஒப்பந்த தொழி லாளர்களை வைத்து நிரப்பவில்லை. நிரந் தரமும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கவில்லை.
எனவே அந்த ஒப்பந்தத் தில் கையெழுத்துப் போட்டிருந்தாலும் வழக் கில் கோரியிருக்கின்ற ஒப்பந்த தொழிலாளி யாக சேர்ந்த தேதியை சீனியாரிட்டிக்கு எடுப்பது சரியானது என நாங்கள் கருது கிறோம் என பதிலளித்தது. வழக்கு நடந்துகொண்டிருக்கின்ற கால கட்டத்தில்தான் அனைத்து சங்கங்களும் சேர்ந்து 16-6-2008ல் ஒப்பந்தத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தம் நடை பெற்றது. இவ்வேலை நிறுத்தத்தை முடி வுக்கு கொண்டுவர தில்லியில் முதன்மை தொழிலாளர் நல அதிகாரி (சிஎல்சி) முன் னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய உதவி தலைவர் தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்கள் இப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். இப்பேச்சுவார்த்தையில் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களை சொசைட்டியில் இணைப்பது எனவும் பின் படிப்படியாக நிரந்தரம் எனவும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சிஐடியு ஏற்றுக் கொள்ளவில்லை. சிஎல்சி அவர்களுக்கு ஏன் சிஐடியு கை யொப்பம் இடவில்லை என்கிற காரணத்தை விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது. இக்கடி தத்தில் இனிமேல் சொசைட்டி என்பது தேவையற்றது. காலம் கடத்த முயற்சிக்கும் ஒரு கருவியாகவே சொசைட்டியை நிர் வாகம் பயன்படுத்துகிறது. மாறாக அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் சீனியாரிட்டி அடிப்படையில் நிரந்தரமாக்க வேண்டும். சீனியாரிட்டி பட்டியலை உடன் வெளியிட நடவடிக்கை தேவை போன்ற கோரிக்கை களை கடிதமாக கொடுத்தோம். ஆனால் ஏஐ டியுசி, எல்பிஎப், ஏடிபி போன்ற சங்கங்கள் 5000 பேரை சொசைட்டியில் இணைப்பது என்பதை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட் டனர். நிர்வாக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடிந்தபிறகுதான் இவ் ஒப்பந் தத்தை அமலாக்குவோம் என குறிப்பிட்டது.நிர்வாகத்தின் ஆலோசனைப்படி தொ முசவும் ஏஐடியுசியும் தன்னை இவ்வழக் கில் இணைத்துக்கொண்டது.
இவர்கள் இருவரும் இவ்வழக்கு வரும் நேரங்களில் சொசைட்டிதான் தேவை, நேரடி நிரந்தரம் தேவையில்லை என வாதாடினார்கள் என்று வழக்கை நடத்திய வழக்குரைஞரே நேரடி யாக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.தில்லி ஒப்பந்தம் அமலாகாதபோது தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப் தியை சரிகட்ட மீண்டும் 35 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத் தத்தின் முடிவில் 30-10-2012-ல் ரூ.60 ஒரு நாளைக்கு உயர்வு என ஒப்பந்தம் உருவாக் கப்பட்டது. இதை சிஐடியு ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டது. மீண்டும் 21-4-2012-ல் 44 நாட்கள் வேலை நிறுத்தம். மீண்டும் இடைக்கால ஒப்பந்தம் . ‘அதிலும் சொசைட்டி உருவாக்கு வது, அதன் மூலம் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது, நிரந்தரம் என்பது யேவரசயட றயளவயபந அடிப்படையில் உருவாகக்கூடிய காலி இடங்கள் ஏற்படும் போது’ என குறிப்பிட்டிருந்தது. அப்படியானால் யாராவது இறந்துபோனால், அல்லது விபத்து ஏற்பட் டால், அல்லது ஓய்வு பெற்றால் ஏற்படும் காலி இடங்கள், இது 5000 பேரை நிரந்தர மாக்க சாத்தியமா? என்றால் இல்லை. எனவே, போகாத ஊருக்கு வழிகாட்டியாக இவ்வொப்பந்தம் அமைந்துவிட்டது. எனவே சிஐடியு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. ஒப்பந்தம் தொழிலாளர்கள் மத்தி யில் கசப்பான உணர்வை ஏற்படுத்தியது.இக்காலகட்டத்தில் உச்சநீதிமன்றத் திலும் வழக்கு நடைபெறுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக ஒப்பந்தத் தொழிலாளர்களின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிடவேண்டும் என உத்தரவு பிறப்பித் தார். இதன்படி 10632 தொழிலாளர்களின் சீனியாரிட்டி பட்டியலை நிர்வாகம் வெளி யிட்டது மட்டுமல்ல, அதன் நகலையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கை விசா ரித்தது. நீதிபதிகள் விசாரணையின் போது நடந்தவைகளை தொழிலாளர்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் சிங்காரவேலர் 21-3-2013 அன்று நடைபெற்ற தொழிலாளர் களின் பாராட்டுக் கூட்டத்தில் கீழ்கண்ட வாறு விளக்கினார்.விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தொமுச சார்பில் வாதாடிய வழக்குi ரஞர் நேரடியாக தொழிலாளியை நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை.
நெய்வேலியில் தொழி லாளியை சொசைட்டியில் இணைத்து அதன்மூலம் தான் நிரந்தரம் என்கிற நடை முறை இருக்கிறது. எனவே சொசைட்டியில் இணைக்க உத்தரவிடவேண்டும் என கேட் டுக்கொண்டார். இன்னொரு வழக்குரைஞர் ஏஐடியுசி சார்பில் வாதாடும்போது, எங்கள் சங்கம் ஏற்கனவே சொசைட்டி உருவாக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளது. எனவே சொசைட்டியில் 5000 பேரை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என வாதாடினார். தொழிலாளிகளுக்காக வாதாடுகிற சிங்காரவேலர் அவர்களோ, சொசைட்டியும் ஒரு ஒப்பந்தக்காரர்தான், எனவே 10-15 ஆண்டுகாலம் பல்வேறு ஒப்பந்தக்காரர் களிடம் பணியாற்றிய இத் தொழிலாளர்கள் மீண்டும் சொசைட்டி என்கிற ஒப்பந்தக்காரரி டம் பணியாற்றவேண்டும் என்று சொல் வதில் எந்த நியாயமும் இல்லை. எனவே இவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரந்தரமாக்க வேண்டும் என வாதாடினார். இதன் நியாயத்தை உணர்ந்த நீதிபதிகள், ஒப்பந்தக்காரரிடம் சேர்ந்த தேதியை சீனி யாரிட்டிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சொசைட்டி தேவையில்லை நேரடி யாக நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினர்.இந்நிலையில் ஏஐடியுசி சார்பில் வாதா டிய வழக்குரைஞர் பொது சீனியாரிட்டியில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏன் ஏன்றால் அனைவரும் ஒரே மாதிரியல்ல. 10-வதுக்கு மேல் படித்தவர்கள் தனிசீனி யாரிட்டி ஆக்கி முன்னுரிமை வழங்கவேண்டும் என வாதிட்டார். நீதிபதிகளோ, அப்படி ஒப்பந் தத் தொழிலாளர்களில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? என வினவினர். நமது வழக்கு ரைஞர் அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை. அனைவரும் ஒரே சம்பளம்தான் பெறுகிறார் கள். தகுதிக்கேற்ற வேலை நிலமை என்பது கிடையாது. எனவே அனைவரும் சமம். இவர்களை பிரிக்கக் கூடாது. ஒரே சீனி யாரிட்டிதான் சரியானது என வாதிட்டார். நிர்வாக தரப்பு வழக்குரைஞரை நீதிபதிகள் சிங்காரவேலர் சொல்வது சரிதானா? என கேட்டபோது, ஆம் என ஒப்புக்கொண்டார். எனவே நீதிபதிகள் பொதுவான ஒரே சீனி யாரிட்டி அதுவும் ஒப்பந்தத் தொழிலாளியாக சேர்ந்த சீனியாரிட்டிதான் சரியானது, அதன் படி நிரந்தரப்படுத்த வேண்டும் என தீர்ப் பளித்தனர்.
இவ்வாறு வழக்கை நடத்திய வழக்குரைஞர் விளக்கினார்.நெய்வேலி தொழிலாளர்களுக்கு மட்டு மல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கும் இந்த தீர்ப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.இந்த ஒப்பந்தத்தை உருவாக்க நாம் தொடர்ந்து முயற்சித்துள்ளோம். குறிப்பாக தில்லியில் சிஎல்சி முன் கொடுத்த கடித மும், உச்ச நீதிமன்றத்தில் நாம் கொடுத்த கடிதமும் இவ்வழக்கிற்கு இப்படிப்பட்ட தீர்ப்பளிக்க உதவிகரமாக இருந்தது. நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரூ.4 சம்பளம் பெற்ற காலம் முதல் இவர்களது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த சங்கம் சிஐடியு சங்கம். அன்றிலிருந்து குறைந்த பட்ச ஊதியத்திற்காக, அரசு விடுமுறை சம்பளத்திற்காக, சீருடைக்காக, சலவை கூலிக்காக, ஒப்பந்தக்காரர்கள் மாறினாலும் தொழிலாளி அதே இடத்தில் பணிபுரிய வைப்பதற்காக எண்ணிலடங்கா போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வெற்றிகண்டுள் ளோம். சிஐடியு பேச்சுவார்த்தையில் இருந்த காலங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலன் காக்க, வாய்ப்பு கிடைக்கும் போதெல் லாம் நிரந்தரமாக்க தொடர்ந்து போராடியுள் ளோம்.இன்னும் தொடர்ந்து போராடுவோம். இருப்பினும் இடையில் ஏற்பட்ட தொய் விலிருந்து சரி செய்து முன்னேறுவோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு - நெய்வேலி தொழிலாளர்களுக்கு ஒரு ஊன்றுகோல். கடந்த காலங்களைப்போல் ஒன்றுபட்ட போராட்டம்தான் இந்த தீர்ப்பை அமல்படுத்த வைக்க முடியும். இதை நெய்வேலி தொழிலா ளர்கள் உணர்ந்துள்ளனர்.
சிஐடியு அனைத்து சங்கங்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில் தவறான வழிகாட்டுதலால் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தி யில் ஏற்பட்டுள்ள கசப்பான உணர்வையும் சரிசெய்து அனைவரையும் ஒன்றுபடுத்தும் பணியிலும் சிஐடியு ஈடுபட்டுள்ளது. ஒன்று படுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்.கட்டுரைளயாளர், மாநில பொதுச் செயலாளர், சிஐடியு








வெற்றி நிச்சயம்


எஸ். செல்லப்பா
--------------------------------
தீக்கதிர் கட்டுரை


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஐந்து உறுப்பினர் சரிபார்ப்பு தேர் தல்களில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ரகசிய வாக் கெடுப்பு மூலம் ஏப்ரல் 16, 2013 அன்று நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் 18 சங்கங்கள் போட்டியிட்டாலும், பிரதான போட்டி என்பது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும், என்எப் டிஇ (பிஎஸ்என்எல்) சங்கத்திற்கும் இடையே தான். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிஎஸ் என்எல்-ல் உள்ள டிஇபியு, எஸ்இடபிள்யுஏ, பிஎஸ்என்எல், எப்என்டிஓபிஇஏ, பிஎஸ்என் எல்எம்எஸ்மற்றும்என்எப்டிபிஇஆகியசங்கங் களுடன் கூட்டணி வைத்து ‘செல்போன்’ சின்னத்தில் போட்டியிடுகிறது. என்எப்டிஇ சங்கம், எஸ்என்ஏடிடிஏ, பிஎஸ்என்எல் இஎஸ், பிஎஸ்என்எல் பிஇடபிள்யுஏ, ஏஐபி சிடிஇஎஸ் மற்றும் பிஎஸ்என்எல்இசி ஆகிய சங்கங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த தேர்தலில் இந்திய நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-ல் பணி புரியும் 2,04,796 ஊழி யர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 1,15,000. (இதில் கூட்டணி சங்க உறுப்பினர்களின் எண் ணிக்கை சேர்க்கப்படவில்லை). ஆனால் என்எப்டிஇ சங்கத்தின் உறுப்பினர் எண் ணிக்கை 45,000க்கும் குறைவு தான். எனவே ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ள 6-வது சங்க அங்கீகார தேர்தலிலும் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம் கம்பீரமாக வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக தொடர் வெற்றி என்ற சாதனையை படைக்க உள்ளது. வெற்றி நிச்சயம்.
ஜனநாயகத்தின் பாதுகாவலன் : பிஎஸ்என்எல்-ல் ஒரே அங்கீகரிக்கப் பட்ட சங்கமான பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம், விகிதாச்சார அடிப்படையில் சங்க அங்கீ காரம் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை நிர்வாகத்திடம் வைத்து போராடி வந்தது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பிஎஸ்என்எல் நிறுவ னம், புதிய அங்கீகார விதிகளை உருவாக்கி உள்ளது. கடந்த ஐந்து சங்க அங்கீகார தேர்தல் களிலும் அதிக வாக்குகளை பெறும் ஒரே சங் கத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடைபெற உள்ள ஆறாவது சங்க அங்கீகார தேர்தலில், 50 சத விகிதத்திற்கும் மேல் ஒரு சங்கம் வாக்கு களை பெற்றது என்றால்/ ஒரே சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். 50 சத விகித வாக்குகளை யாரும் பெறவில்லை என் றால், 35 சதமான வாக்குகளை பெறும் சங்கம் முதன்மை சங்கமாகவும், அடுத்து 15 சதமான வாக்குகளை பெறும் சங்கம் இரண்டாவது அங் கீகார சங்கமாகவும் அங்கீகரிக்கப்படுவார்கள். 2சதவிகித வாக்குகளை பெறும் சங்கங்க ளுக்கு சில தொழிற்சங்க சலுகைகள் வழங் கப்படும். ‘ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் தான்’ என்று என்எப்டிஇ சங்கம் முதலில் முழங் கியது. இரண்டாவது தேர்தலில் தோற்கும் வரை இதைத்தான் பறைசாற்றியது. தேர் தலில் தோற்றவுடன், ‘இரண்டாவது சங்கத் திற்கும் அங்கீகாரம் கொடு’ என்று நிர்வாகத் துடன் மன்றாட ஆரம்பித்தது. ஆனால் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தான் முதலில் இருந்தே, தொடர்ந்து விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என கொள்கை அடிப்படை யில் நின்று போராடி வெற்றியும் பெற்றுள்ளது. எனவே ஜனநாயகத்தின் பாதுகாவலன் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தான்.
பிஎஸ்என்எல்-ன் பாதுகாவலன் : கார்ப்பரேட் நிறுவனங்களின், தனியார் முத லாளிகளின் கட்டுப்பாட்டில் இந்திய அர சாங்கம் இயங்குகிறது. இவர்களின் கட்ட ளைக்கு அடிபணிந்து பொதுத்துறை நிறுவ னங்களை இந்திய ஆட்சியாளர்கள் சூறை யாடுகின்றனர். ’புதிய தாராளமய பொருளாதார கொள்கை’ என்ற பெயரில் இந்திய ஆட்சி யாளர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கின்றனர். தனியாரை ஊக்கு வித்து, பொதுத்துறைகளை நஷ்டமாக்கி பின் தனியாரை கேந்திர பங்குதாரராக (ளவசயவநபiஉ யீயசவநேச) மாற்றி அவர்களுக்கு இந்த பொதுத் துறைகளை விற்கும் புதிய யுக்தியை கடைப் பிடிக்கின்றனர். இரண்டரை லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனம் 10,000 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு நஷ் டம் ஏற்படுவதற்கு அரசின் இந்த கொள்கை கள் தான் காரணம். அரசின் அனைத்து தொலை தொடர்பு கொள்கைகளும், என்டிபி 1995, என்டிபி 1999, என்டிபி 2005 மற்றும் என்டிபி 2012 ஆகிய அனைத்துமே தனியார் நிறுவனங்கள் கொழுக் கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவ டையுமே செய்துள்ளன. இப்படிப்பட்ட அரசின் கொள்கைகளை எதிர்த்து 1991 முதல் பிப்ரவரி 2013 வரை நடை பெற்ற அனைத்து 15 தேசிய பொது வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்ற பெருமை பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த காலங்களில் என்எப்டிஇ சங் கம் இது போன்ற போராட்டங்களில் ஒதுங்கி நிற்கும். தலமட்டங்களுக்கேற்ப முடிவு செய் யுங்கள் என்று என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை உபதேசம் செய்யும். தொடர்ந்து நாம் வேலை நிறுத்தங்களில் பங் கேற்றதால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக சமீபத்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை அறிவிப்பாவது வெளியிட்டது. மெல்ல பிஎஸ்என்எல் மடியும் என்று மனப் பால் குடித்த ஆட்சியாளர்களின் மனக் கோட்டை தகரும் வண்ணம், பிஎஸ்என்எல்-ஐ உயிரைக் கொடுத்தும் காத்திடுவோம் என ஊழியர்களையும், அதிகாரிகளையும், உடலை சிலிர்ப்பி, நெஞ்சுயர்த்தி நின்று போராட்ட களத்தில் போராடச்செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தான். இப்படிப்பட்ட வரலாறு ஏதாவது என்எப்டிஇ சங்கத்திற்கு உண்டா? இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில், ‘அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எதிர்க்க முடியாது’ என்பதே என்எப்டிஇ சங் கத்தின் கொள்கை முழக்கமாகும். உதாரணமாக தொலை தொடர்புத்துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். என் எப்டிஇ சங்கம் அரசின் இந்த முடிவுக்கு ஆதர வாக நின்று தொலை தொடர்புத் துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்று செப்டம்பர் 2000ல் வேலை நிறுத்தம் செய்தது. கார்ப்பரேஷன் என்பது தனியார்மயத்தின் முதல் படி என்று ஊழியர்களிடம் விளக்கி கார்ப்பரேஷன் கூடாது என்று வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தியது பிஎஸ் என்எல் ஊழியர் சங்க தலைமை. ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக என்எப்டிஇ சங்கம் செயல்பட்டதால் பிஎஸ் என்எல் நிறுவனத்தை அரசால் எளிதாக உரு வாக்க முடிந்தது. “பிஎஸ்என்எல் நிறுவனத் தின் ஐம்பது சதவிகித பங்குகள் விற்கப்பட் டால், ஊழியர்”களை மூன்று மாதம் ஊதியம் கொடுத்து (ஹசவiஉடந 25 சூ, ஐனு ஹஉவ 1947) வீட் டுக்கு அனுப்ப வேண்டும்” என கார்ப்பரேஷ னாக மாற்றும் போது உடன்பாடு போட்டது அன்றைக்கு அங்கீகாரம் பெற்றிருந்த என்எப் டிஇ தலைமை. இதுஎன்எப்டிஇ-யால் மறை க்கவும் முடியாது. ஊழியர்களால் மன்னிக்க வும் முடியாது.
பாஜக- ஐ.மு.கூட்டணி வித்தியாசம் ஏதும் இல்லை : முந்தைய பாஜக ஆட்சியில் ஜக்மோகன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார். தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அமைச்சரை சந்தித்து ‘இந்திய அரசாங்கத் திற்கு லைசென்ஸ் முறையில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளது, வருவாய் பங்கீடு (சுநஎநரேந ளாயசiபே) முறையில் கட்டணம் செலுத்துகிறோம்’ என்று மகஜர் கொடுத்தனர். “கட்டண முறையை மாற்றினால் அரசுக்கு 50,000 கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்படும். பிஎஸ்என்எல் நஷ்டம் அடையும்” என்பதால் ஜக்மோகன் மறுத்தார். தனியார் கம்பெனிகள் பாரத பிரதமர் வாஜ்பாயை பார்த்தனர். பாரத பிரதமர் தனியார் கம்பெனிகளின் கோரிக் கையை ஏற்றுக் கொண்டார். இந்திய அரசுக்கு 50,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. அதோடு தொலைத் தொடர்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து ஜக்மோகன் தூக்கியடிக் கப்பட்டார். தனியார்களின் செல்வாக்கு புரிகிறதா? ஐ.மு.கூட்டணிஅரசாங்கத்தின்நிதியமைச்சராக பிரணாப்முகர்ஜி இருந்த போது, வோடோ போன்நிறுவனம்2007ஆம்ஆண்டு7,000கோடி ரூபாய்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற வரு மான வரித்துறை (ஐnஉடிஅந கூயஒ) குறிப்பினை ஏற் றார். 4,000 கோடி அபராதத்துடன், 11,000 கோடி ரூபாய்களை கட்ட வேண்டும் என வோடா போன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்தார். வோடாபோன் 11,000 கோடியை கட்ட மறுத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றமோ ‘முன் தேதி யிட்டு வரிபிடித்தம் செய்ய வருமானவரித் துறையின் சட்டங்களில் இடம் இல்லை’ என்று கூறியது. பிரணாப் முகர்ஜி நாடாளு மன்றத்தில் வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கூறினார். வோ டோபோன், பிரதமரை சந்தித்து முறையிட்டது. காங்கிரஸ் கட்சியும் சமயம் பார்த்து தனியார் கம்பெனிகளுக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் சிதம்பரத்தை நிதி அமைச்சராகவும், கபில் சிபலை தொலை தொடர்புத்துறை அமைச்சராகவும் மாற்றியது. பின்பு ’பார்த்த சாரதி ஷோம்’ தலைமையில் ஒரு கமிட்டி போட்டு வோடோபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய்களை கட்டாமல் பார்த்துக் கொண்டனர். பன்னாட்டு பகாசுர கம்பெனி களின் பலம் புரிகிறதா?ஆனால் பிஎஸ்என்எல் என்ற பொதுத் துறை நிறுவனத்திலிருந்து பிடபிள்யுஏ ஸ்பெக்ட்ரம் கட்டணம் என்றும் லைசென்ஸ் கட்டணம் என்ற வகையிலும், 18,500 கோடி ரூபாய்களை இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் கை யிருப்பு இல்லாமல் தவிக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தான் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம், அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஒன்று படுத்தி “FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS OF EXECUTIVES / NON EXECUTIVES” என்ற அமைப்பின் மூலமாக தொடர்ந்து போராடி வருகிறது.
காப்பர் கேபிளை காத்தோம் : பிஎஸ்என்எல்-ன் மார்க்கெட் ஷேர் செல் போன் சேவையில் 11சதவீதமாகவும், ப்ராட் பேண்ட் சேவையில் 65ஆகவும் இருக்கிறது என்று சமீபத்தில் தொலை தொடர்பு அமைச் சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ப்ராட் பேண்ட் சேவைக்கு மிகவும் அத்தியாவசிய தேவையான கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயற்சித்தபோது, பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் அதிகாரிகளின் சங் கங்களையும் ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு 2006ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்தது. அதனால் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி கேபிளை தனியாருக்கு விடும் திட்டத்தை கைவிட்டு தோழர் நம்பூதி ரியிடம் ஒப்பந்தம் போட்டது. இதன் காரண மாகத்தான் இன்று ப்ராட் பேண்ட் சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதலிடத்தை வகிக்கிறது.
பங்கு விற்பனை : பிஎஸ்என்எல்-ன் பங்குகள் விற்பனை செய்வதை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்து போராடி தடுத்து வரு கிறது. ஆனால் என்எப்டிஇ சங்கம் ‘50சத வீதப் பங்குகள் விற்றாலும் பரவாயில்லை. பென்சன் வேண்டும்’ என்றே பிரச்சாரம் செய் கிறது. அங்கீகரிக்கப்பட்ட எட்டு ஆண்டு களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு சத விகித பங்குகளை கூட விற்க விடாமல் தடுத்த பெருமை பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்திற்கு மட்டுமே உண்டு.
விருப்ப ஓய்வுத் திட்டம் : முதல் சங்க அங்கீகார தேர்தலுக்கு பின் னர் பிஎஸ்என்எல்-ல் உள்ள 50,000 ஊழியர் களை விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வீட் டுக்கு அனுப்பலாம என்கின்ற நிர்வாகத்தின் முன்மொழிவினை என்எப்டிஇ சங்கம் ஏற்றுக் கொண்டது. அதனை நியாயபடுத்தும் வகை யில், இது விருப்ப ஓய்வு திட்டம் கிடையாது. விருப்ப மாற்றியமைக்கும் திட்டம் என்று வியாக்கியானம் பேசியது. ஆனால் பிஎஸ்என் எல் ஊழியர் சங்கம் இரண்டாவது சங்க அங் கீகார தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கடு மையான எதிர்ப்பின் மூலம் அதனை முறி யடித்தோம். அதே போல 2012ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் நியமித்த சாம் பிட்ரோடா கமிட்டியும், ஒரு லட்சம் ஊழியர்களை வீட் டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்று பட்ட போராட்டங்கள் மூலமாக அரசின் முயற் சிகளை எல்லாம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து முறியடித்து வந்துள்ளது.என்எப்டிஇ சங்கம் 25 ஆண்டு காலத் திற்கு முன்பு போட்ட பதவி உயர்வு திட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மாற்றி புதிய பதவி உயர்வு திட்டத்தை புகுத்தியது. 98 சதவிகித ஊழியர்களுக்கு பல பத்தாயிரக் கணக்கான ரூபாய்கள் நிலுவைத் தொகையாகவும் பெற்றுத் தந்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தான். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசு பென்சன் வழங்கப்படுவதை உறுதி செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அது மட்டுமல்லாமல் ஐடிஏ ஊதிய விகிதத் தில் பென்சன் மாற்றம் செய்ய முடியாது என்று இருந்ததை மாற்றி அமைத்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
ஒப்பந்த ஊழியர்கள் : பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். இவர்களை நிர் வாகம் சுரண்டுவதை தடுக்க ஒப்பந்த ஊழி யருக்கான அகில இந்திய/ மாநில அமைப்பு களை உருவாக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம் தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத் தில் 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களை திரட்டி மாநில சங்கம் அமைத்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறது. அதன் விளைவாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத் தரவின் படி ஊதியம் பெற்றுத் தந்துள்ளோம். அவர்களுக்கான சட்ட சலுகைகள் அமலாக் கப்பட்டு வருகின்றன. அவர்களின் நிரந் தரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகஇந்திய நாட்டில் பல நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்களுக்கெதி ரான கொடுமைகளுக்கு எதிராக போராடி வரும் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி யில் அங்கம் வகிப்பதோடு, அவர்களுக்கு ஆத ரவாக பல இயக்கங்களையும் நடத்தி வருகி றோம். தர்மபுரியில் தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்களுக்கு வழக்கு நிதியாகவும் ஒரு லட்ச ரூபாயினை தீண்டாமை ஒழிப்பு முன்ன ணிக்கு வழங்கியும் உள்ளது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடுவது... ஊழியர் நலனில் அக்கறை..... சமுதாய பார்வையோடு செயல் படுவது......தேசத்தை பாதுகாக்கும் போராட்டத் தில் உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து போராடுவது..... என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வாக்குறுதி அளிக்கிறது. 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றி பெறப்போவது நிச்சயம். இன்னமும் அதிக மான வாக்குகளை பெற்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தை வெற்றி பெற செய்யவேண் டுமென பிஎஸ்என்எல் ஊழியர்களை தோழ மையுடன் கேட்டுக் கொள்கிறோம். கட்டுரையாளர், மாநிலச் செயலாளர்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ் மாநிலம்.


“இன்று மக்களுக்குத் தேவைப்படுவது வெறும் மாற்று அரசாங்கம் அல்ல. மாறாக, மக்க ளுக்கு ஆதரவான மாற்றுக் கொள்கைக ளுடன், உறுதியாக அந்தத் திசைவழியில் பய ணிக்கும் ஒரு அரசாங்கமே தற்போதைய தேவை.”தற்போதைய இந்திய அரசியலில் பரபரப் பான ஆழமான அரசியல் நடவடிக்கைகள் பல அரங்கேறி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய எதிர்கால நலன்களை கணக்கில் கொண்டு, தனக்கான புதிய தலைமைக் குழுவை அறிவித்துள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், அத னுடைய தலைமையை தீர்மானிப்பது என்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட உள் விவகாரம் ஆகும். இருந்தாலும், மத்தியில் ஆட்சி அதி காரத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாலும், நம்புவதாலும் (அது அவ்வாறு நடக்கும் என்று எண்ண இடமில் லாத போதும்), அந்தக் கட்சியின் தலைமைக் குழு குறித்த அதனுடைய தேர்வுகள் பொது மக் களின் அக்கறைக்கும் கவனத்திற்கும் உள் ளாகின்றன. பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத் தியுள்ள தலைமையில், ஒருவர் குஜராத் மாநி லத்தின் முதலமைச்சர். அவரைப் பொறுத்த வரையில் 2002ம் ஆண்டு குஜராத்தில் நடத் தப்பட்ட நரவேட்டைச் சுமைகளை தலையில் சுமந்து கொண்டிருப்பவர். மற்றொரு தலை வரோ போலி என்கவுண்ட்டர் வழக்கில் குற் றம் சுமத்தப்பட்டு பெயிலில் வெளியே வந் திருப்பவர். இன்னொருவர் 2009ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது அருவருக்கத் தக்க ஆதாரமற்ற பேச்சுக்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, வெளிப்படையாக மகிழ்ச்சி ஆரவாரம் செய்து ஊடகங்கள் மூலம் உலகறியப்பட்ட மற் றொருவரும் இன்றைய தலைமைக்கு உயர்த் தப்பட்டிருக்கிறார். இப்படி பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்தியுள்ள தலைமைக் குழு குறித்து சொல்லிக் கொண்டே போகலாம்.
மதவெறி பா.ஜ.க. : சகிப்புத்தன்மையற்ற, மதவெறி எதேச்சதி கார அரசாக “இந்து ராஜ்யத்தினை” (‘ஹிந்து ராஷ்ட்ரா) உருவாக்குவதை தன்னுடைய பிர தான கொள்கை நோக்கமாகக் கொண்டது ஆர். எஸ்.எஸ். அமைப்பு. அதனுடைய அரசியல் பிரிவு தான் பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அதை உறுதிப்படுத் தும் விதமாகவே அதனுடைய செயல்பாடு களும் அமைந்து வருகின்றன. நவீன மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசினை மறுவடிவமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் முயன்று வருகிறது.
சந்தர்ப்பவாத சமாஜ்வாதி : சமாஜ்வாதி கட்சியின் ஏகபோகத் தலை வர் முலாயம் சிங் யாதவ், திடீரென்று சுயேச் சையாக மத்தியில் காங்கிரஸ் அல்லாத பி.ஜே.பி. அல்லாத ஒரு மூன்றாவது அணியை அமைப்பது குறித்து பேசத் தொடங்கினார். ஆனால், வழக்கம்போல, அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2-ற்கு தாங்கள் வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவினை விலக் கிக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்து விட்டார். அவர் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும், விரைவில் தேர் தல் வரும் என்று அவர் ஆரூடம் கூறுகிறார். அதுவெல்லாம், ஏன் எதற்கு என்பதனை அவ ரவர் கற்பனைக்கு விட்டு விடுவதே நல்லது.
அணைப்பதும் அடிப்பதும் : ஐ.மு.கூட்டணி-2இல் தற்போது ஏற் பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையின் பின் னணியில் இந்திய அரசியலில் இந்த பர பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அதனுடைய ஆதரவை வாபஸ் பெற்ற போதே இந்த அரசாங்கம் சிறுபான்மை நிலையை அடைந்துவிட்டது. தற்போது தி.மு.க.வும் தன்னுடைய ஆதரவை வாபஸ் பெற்றவுடன், அது மேலும் சிறுபான்மை அர சாக ஆகிவிட்டது. தற்போது அது நீடித் திருப்பது என்பது வெளியிலிருந்து ஆதர வளித்து வரும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகு ஜன் சமாஜ் கட்சியைப் பொறுத்தே உள்ளது. இப்படிப்பட்ட வெளி ஆதரவை இந்த அர சாங்கம் எப்படி தக்க வைக்க முனைகிறது என்பது இதற்குள் வெட்ட வெளிச்சமாகியுள் ளது. ஒன்று, ஆசைகாட்டி இணங்க வைக்கும் முயற்சி (பணவீக்க விகிதத்திற்கு ஏற்றாற் போல் அதற்கான விலையும் உயரும்). மற் றொன்று, மிரட்டல் முறை (திமுகவின் ஆத ரவை வாபஸ் வாங்கிய 24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட சி.பி.ஐ. சோதனை போன்ற எச் சரிக்கை மிரட்டல்களை ஆதரவு கட்சி களுக்கு அளிப்பது).
இந்தியாவே மகாக்கூட்டணி தான் : கூட்டாட்சி அரசுகள் என்பது தான் தற் காலப் போக்கு என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தெளி வான பெரும்பான்மை கிடைக்காத அளவில், மக்கள் வாக்களித்தனர். அது நமது ஜனநாய கத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று பல பேர் வருத்தப்பட்டனர். ஆனால், இது பின் னடைவு அல்ல என்பது மட்டுமல்லாமல், இந் திய ஜனநாயகம் பக்குவமடைந்து வரும் வளர்ச்சிப் போக்கினையே வெளிப்படுத்தியது என இடது சாரிகள் மட்டும் கூறினர். மிகப் பெரிய அளவில் இந்திய சமூகத்தில் இருக்கும் பன்முக அம்சங்கள் இந்திய அரசியலிலும் பிரதிபலித்தது. ஒரு கட்சி ஆட்சி முறை என் பதைப் போன்ற ஒரு ஒற்றைக் கட்டமைப்பு முறையால் இந்திய சமூகத்தின் பன்முகத் தன் மையினை பிரதிபலிக்க இயலாது; “வர விருக்கும் இன்னும் சில பத்தாண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கங்கள் என்பவைதான் சாத்தியமாகும், அவை காலத்தின் கட்டாயம்” என்று நாங்கள் அப்போதே கூறினோம். அப் போது இந்தப் புரிதலை ஏற்றுக் கொண்ட ஒரு சிலரில் திரு.வி.பி. சிங் முக்கியமானவர். இந்தி யாவே ஒரு “மகாக் கூட்டணி” தான் என்று அப்போது அவர் மிகச் சரியாகவே கூறினார்.
சேர்மானமும், தலைமையும் : இந்தப் புரிதல் என்பது மிகச் சரியானது, நியாயமானது என்பது கடந்த இருபது ஆண்டு களில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்த லுக்குப் பின் வரும் எந்த அரசாங்கமும், கூட் டணி தவிர வேறொன்றாக இருக்க முடியாது. தற்போது நம் முன் உள்ள கேள்வியும் கவலை யும் அந்த கூட்டணியில் சேர்மானம், அதன் தலைமை, அதாவது எந்தக் கட்சியின் தலை மையில், எந்தெந்த கட்சிகள் சேர்ந்து இந்தக் கூட்டணி உருவாகும் என்பது குறித்ததேயாகும். இந்த சந்தர்ப்பத்தில், பாரதிய ஜனதா கட்சி யின் தலைமையில் உருவாகும் எந்தவொரு கூட்டணியும் ஒரு தீர்க்க முடியாத முரண்பாட் டினை எதிர் கொள்ள நேரிடும். பெரும் பான்மை இடங்களைப் பெற்று மிகப் பலமான ஒரு கூட்டணியாக இந்தக் கூட்டணி அமைய வேண்டுமென்றால், பாரதிய ஜனதா கட்சி யானது அதனுடைய முக்கிய அஜெண்டா வான வகுப்புவாதத்தினை பின்னுக்குத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும். அதே சமயத்தில், ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டலின் படி வகுப்பு வாதத்தினை மிகத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லாவிடில், பாரதிய ஜனதா கட்சியால் அத னுடைய அரசியல் தளத்தை பலப்படுத்திக் கொள்ளவோ அல்லது விரிவுபடுத்திக் கொள் ளவோ முடியாது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி குறித்து மனப்பால் குடிக்கும் பாரதிய ஜனதா கட்சி, தனக்கான பிரதமர் வேட் பாளரை முன்னிறுத்தும் விவாதத்தினைத் தொடங்கும் இவ்வேளையிலேயெ அந்த முரண்பாடும் வெளிப்படத் தொடங்கி விட்டது.
பிள்ளை இல்லை, பெயர் உண்டு : பாரதிய ஜனதா கட்சியின் இந்தக் கற் பனைகள், எனக்கு ஒரு தெலுங்கு பழமொழியை நினைவுபடுத்துகின்றன. முழுமையான அர்த் தத்தில் அதனை அப்படியே மொழி பெயர்ப்பது சற்று சிரமம். இருப்பினும் சற்று தாராளமாக மொழி பெயர்ப்பதென்றால், இப்படிக் கூறலாம்: “எனக்கு வீடும் கிடையாது, மனைவியும் கிடையாது, ஆனால் என் பையனின் பெயர் மட்டும் சோமலிங்கம்” ஆட்சி அதிகாரத்தினைப் பிடிப்பது குறித்து, இப்படியும் அப்படியுமாக பல்வேறு கணக்குகள் போடப்படுகின்றன. ஆனால், இவற்றில் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புக் கள் எதற்கும் போதிய கவனம் அளிக்கப் படவில்லை. பொருளாதார மந்தம், மிகக் கடு மையாக அதிகரித்து வரும் விலைவாசி, ஆழ மாகி வரும் விவசாய நெருக்கடி, விவசாயி களின் துயரங்கள் என்று அனைத்தும் சேர்ந்து, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தாங்கவொணாத் துயரச் சுமையினை மக்கள் மீது சுமத்தியுள்ளன.
மாற்றுத் திசைவழி : தற்போது நம் முன் விவாதத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இந்தத் துன்பங் களில் இருந்து நிவாரணம் கிடைத்துவிடும் என்ற மக்களின் நம்பிக்கையினை, காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி அல்லாத ஒரு மாற்று அர சாங்கத்தால் மட்டும் பூர்த்தி செய்து விட முடி யாது. மக்களின் துன்பங்களுக்கான நிவாரணம் என்பது மாற்றுக் கொள்கைகளினால் மட்டுமே சாத்தியம். எனவே, இன்று மக்களுக்குத் தேவைப்படுவது வெறும் மாற்று அரசாங்கம் அல்ல. மாறாக, மக்களுக்கு ஆதரவான மாற்றுக் கொள்கைகளுடன், உறுதியாக அந்தத் திசை வழியில் பயணிக்கும் ஒரு அரசாங்கமே தற் போதைய தேவை. மாற்றுக் கொள்கைகள் மூலம், வாழ்வ தற்குத் தேவையான பசியற்ற வாழ்வு, கல்வி, ஆரோக்கியம், வேலை மற்றும் உறைவிடம் என, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்குமான அடிப்படை உரிமைகள் உறுதி செய்யயப்பட வேண்டும். அவற்றை அமலாக்குவதற்குச் சாத்தியமான ஆதாரங்களும் போதுமான அள வில் நமது நாட்டில் உள்ளன. ஆனால், இந்த ஆதாரங்கள் அனைத்தும், மிகப் பெரும் ஊழல் கள் மூலமாக இன்று களவாடப்பட்டு வரு கின்றன அல்லது செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்றுகின்ற வகையில், அவை உயர் தட்டினருக்கு மடை மாற்றம் செய் யப்பட்டு வருகின்றன. இந்தக் கொள்கை களில் தான் மாற்றம் தேவைப்படுகிறது. காங்கிரஸ் அல்லாத பிஜேபி அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள், அரசியல் சந்தர்ப்ப வாதத்தினைத் தவிர்த்து, ஒரு முன்னணி யினை அமைக்க வேண்டும். அத்தகைய முன்னணியானது வெறுமனே ஆட்சி, அதி காரப் பகிர்வு என்பதற்கான ஏற்பாடாக மட்டும் இருக்கக் கூடாது. மாறாக, மக்களுக்கான மாற் றுக் கொள்கைகளை அமல்படுத்தும் வகை யில், குறிப்பாக மக்களின் வாழ்நிலையை முன்னேற்றும் வகையில், அனைத்து மக்க ளின் நல் வாழ்வினை உறுதி செய்யும் வகை யில், “சிறந்ததொரு பாரதத்தினை” உருவாக்கு வதான மாற்று அரசாங்கமாக அது அமைய வேண்டும்.
தமிழில்: ஆர்.எஸ். செண்பகம், திருநெல்வேலி.நன்றி : ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்,(2.4.2013).
என் நெஞ்சைத் தொட்ட புத்தகம்
-பிரகாஷ் காரத்
‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடு மாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தால் வெளி யிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளி யீட்டாளர்களே புத்தகத்தை வெளியிடும் நிகழ் வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத் தகத்தின் உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட ஒப்புக்கொண்டேன்.

நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும் இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத் தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாந கரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப கால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநக ரத்தில் தொழிற்சாலைகளும் தொழிலாளர் களும் உருவான பின்னணி குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.

1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக் கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலாவ தாகப் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக மத ராஸ் லேபர் யூனியன்தான் கருதப்படுகிறது. மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக ‘பின்னி’ என்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது. 1918இலிருந்து ‘பின்னி’ ஆலை தான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக் கத்தின் மையமாக இருந்திருக்கிறது. பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும் போது, அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற் சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென் னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்க வேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர் கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந் திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்த தையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப் பிட்டிருக்கிறார்.

மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர் பார்க்க முடியாத பின்புலத்திலிருந்து வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங் கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறு வனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார். தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணி களும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடை களின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக் கின்றனர். உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வபதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வபதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார்.

மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழி லாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்கு வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது.

தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் ‘பின்னி’யில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார். மேலும் இப்புத்தகத்தில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

சென்னையில் அப்போது ரயில்வே கம் பெனி ஒன்று உருவாகி இருக்கிறது. மதராஸ் மற்றும் தெற்கு மராத்தா என்று பெயரிடப்பட் டிருந்த அந்த ரயில்வே கம்பெனியில் இரண் டரை மாதங்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத் தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய வீரஞ் செறிந்த வேலைநிறுத்தம் குறித்து வீரராகவன் மிகவும் அருமையான சித்திரத்தை வழங்கி யிருக்கிறார்.

தொழிற்சங்க இயக்கத்தை செல்வபதி மற்றும் சுயாட்சி இயக்கத்தை (ழடிஅந சுரடந ஆடிஎநஅநவே) சேர்ந்த பல தலைவர்கள் தலை மையேற்று நடத்தி இருக்கின்றனர். சென் னைதான் இந்திய பிரம்மஞான சங்கத்திற்கும், அன்னி பெசண்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கத்திற்கும் தலைமையகமாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். இவர்கள் தான் தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஆரம்பகாலத்தில் தலைமை வகித்திருக் கிறார்கள். மிகவும் ஆர்வத்தை அளிக்கக் கூடிய நபரான பி.பி. வாடியா பிரம்மஞான சங் கத்துடன்தான் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்தான் மதராஸ் லேபர் யூனியனுக்கும் ‘பின்னி’ ஆலைத் தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். இவ்வாறு சங்கத் தின் தலைவர்களாக சீர்திருத்தவாதிகள்தான் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் சுயாட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது பிந்தைய காலங்களில் காங்கிரசைச் சேர்ந்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்று வீரராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1933க்குப் பின்னர்தான் இடதுசாரி சக்திகள் முன்னுக்குவருகின்றன. தென்னிந்தி யாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப் படும் சிங்காரவேலர் தொழிலாளர்களின் சங்கங்களை அமைக்கிறார்.

வீரராகவன் இவர்களில் பலரைச் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார். காங்கிரஸ் சோச லிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திலும் அகில இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம், விவ சாய இயக்கம் ஆகியவற்றைக் கட்டுவதிலும் முன்னணியில் இருந்திருக்கிறது. ஆயினும் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அத்தகைய தொரு நிலையைப் பெற முடியவில்லை. உண் மையில் தோழர் பி.சுந்தரய்யா தன் கம்யூனிஸ்ட் பணியை சென்னையிலிருந்துதான் துவங்கி னார். ஆயினும் தொழிற்சங்க இயக்கத்தில் கம் யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு என்பது துவக் கத்தில் இல்லை. மேலும் சென்னை, தொழிற் சங்க இயக்கத்தின் மையமாகவும் அப்போது மாறவில்லை.

வீரராகவன் தன் கண்பார்வையை இளம் வயதில் இழந்து விடுகிறார். இப்புத்தகத்திற் கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அசாத்தியமானமுறையில் தன் நினைவு களின் அடிப்படையிலேயே இதனை எழுதி யிருக்கிறார். இதனை எழுதும் காலத்தில் ஆவணங்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மட்டும் அவர் இதனை எழுதிட வில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த கம்யூ னிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி. சிந் தன் போன்ற அனைவரையும் சந்தித்து, அவர் களைப் பேட்டி கண்டிருக்கிறார். தோழர் வி.பி. சிந்தன் என்னை ஆகர்ஷித்ததைப்போலவே, வீரராகவனையும் கணிசமான அளவிற்கு ஆகர்ஷித்திருக்கிறார்.

மாணவராக இருந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராக இருந்திருக்கிறார். அப்போது நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளில் அனைத்திலும் முழுமையாகத் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். தொழிலா ளர்கள் நடத்திடும் வாயில் கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள் அனைத்திலும் அவரைக் காண முடியும்.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு வீரராக வனுக்குத் துணையாக இருந்தவர்களில் தோழர் எஸ்.எஸ். கண்ணன் மிகவும் முக்கிய மானவர். காரல் மார்க்ஸ் நூலகம் என்று தனி யார் நூலகத்தைத் தன்னந்தனியாக நடத்தி வரும் அவருக்கு வயது 90. அவர் வீரராகவ னுக்கு இப்புத்தகத்தை எழுதுவதற்கு படிப்பவ ராக (ளஉசiநெ-ஆக) இருந்ததுடன், புத்தகங்களை சேகரிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக்கொண்டிருந்தார். இவரது தமிழாக் கத்தில் இப்புத்தகம் ஏற்கனவே தமிழில் வெளி வந்துவிட்டது.

இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் லெப்ட்வேர்ட் மிகவும் பெருமைப்படுகிறது. இதனை மிகவும் பாராட்டுவதுடன், அனை வரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். பின்னர் இதனை அவர் வெளியிட, முதுபெரும் அறிஞர் ஜி.பி. தேஷ்பாண்டே அதனைப் பெற்றுக் கொண்டார். லெப்ட் வேர்ட் மேலாண்மை ஆசிரியர் சுதான்வா தேஷ்பாண்டே (மேனே ஜிங் எடிட்டர்) நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

தொகுப்பு: ச.வீரமணி
தேவைற்ற இணையதளங்களை  தடை செய்வது எப்படி ?
-எம். கண்ணன், என். ராஜேந்திரன்
இணையத்தைப் பயன்படுத்து

கிறவர்களுக்கு நன்மைகள் எந்த அளவு இருக்கிறதோ அதற்கு இணையாக பல தொல்லைகளும் உள்ளன. தேவையற்ற விளம்பரங்கள், வேண்டாத இணைய

தளங்கள் என்று நாம் கேட்காமலே திறந்து எரிச்சலூட்டும். பல நேங்களில் ஆபாச இணையதளங்களும் வந்து முன் நிற்கும்.

இது பல நேரங்களில் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும், நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் நம்மை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்

கூடும். இது போன்ற சிக்கல்களில் இருந்து எப்படி மீள்வது என்று பலருக்கு தெரியாமல், இணையத்தை பயன்படுத்து

வதையே ஓர் குற்ற உணர்ச்சியுடன் செய்யும் நிலைமையும் ஏற்பட்டு விடும்.

இவ்வாறு திறக்கும் ஒரு சில இணையதளங்களை தவறுதலாக கிளிக் செய்துவிட்டால் மால்வேர், ஸ்பைவேர் போன்ற வைரஸ்கள் கணினிக்குள் நுழைந்துவிடும் வாய்ப்புகளும் உண்டு. அதே போல் சில ஆபாச தளங்கள் பிரௌசர்ரை திறந்தாலே வந்து நிற்கும் வகையில் செட்டாகி விடும்.

இத்தகைய நச்சு நிரல்களைத் தடை செய்யவும், தேவையற்ற இணைய

தளங்களைத் தடை செய்யவும் இணைய பிரௌசர்களில் வழிகள் உண்டு. அதன் படி பாப் அப் பிளாக்கர் மற்றும் நமது பிரௌசர் செட்டிங் மூலம் தடை செய்திட முடியும்.

அதனையும் மீறி சில இணையத தளங்கள், மால்வேர் ,ஸ்பைவேர் கள் வந்து கொண்டே இருக்கும். இவற்றை முற்றிலும் தடுத்திடும் வகையில சில சிறப்பு மென்பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் தடை செய்யலாம்.

அதன் படி த வெப் பிளாக்கர் என்ற மென்பொருளை பயன்படுத்தலாம். முதலில் ாவவயீ://றறற.வாநறநb

டெடிஉமநச.உடிஅ/ என்ற முகவரிக்கு சென்று மென்பொருளை தறவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதனை நிறுவும் போது ஊடயசடிக்ஷசடிறளநச கூடிடிட க்ஷயச, ஞஊ ருவடைவைநைள ஞசடி, க்ஷயலெடடிn உள்ளிட்ட வற்றை இன்ஸ்டால் செய்யலாமா என கேட்கும், அதற்கு னுநஉடiநே என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் முழுவதுமாக இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த மென்பொருளை ஓப்பன் செய்ய வேண்டும். அதில் ஹனன ஹனனசநளள வடி க்ஷடடிஉம டுளைவ என்று இருக்கும் . இந்த இடத்திற்கு சென்று தடை செய்ய வேண்டிய இணையதளத்தில் முகவரியை கொடுக்கவும். இனி அந்த இணையங்கள் இனி வராது. அதற்கு பதிலாக நுசசடிச என வரும்.

இதே போல் குறிப்பிட்ட இணைய

தளங்கள் மட்டும் அல்லாமல் 48 விதமான வேண்டாத தளங்களையும், பாலியல் ஆபாச தளங்களையும் தடுக்கும் விதத்தில் கே9 வெப் புரொடெக்ஷன் என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்

தலாம். பதிவிறக்கம் செய்ய ாவவயீ://றறற1.ம9றநbயீசடிவநஉவiடிn.உடிஅ/பநவம9/னடிறடேடியன-ளடிகவறயசந

இதே போல் விளம்பரங்களைத் தடை செய்ய குரோம் உலாவியில் இணைத்துக் கொள்ளும் விதத்தில் ஆட் பிளாக் பிளஸ் உள்ளது. இதனை ாவவயீள://உாசடிஅந.படிடிபடந.உடிஅ/றநளெவடிசந/னநவயடை/யனடெடிஉம-யீடரள/உகானடிதமெதாமேடbயீமனயiனெஉ

உனனடைகைனனb என்ற முகவரியில் சென்று பயன்படுத்தலாம். இப்படி தேவையற்ற இணையதளங்களை நாம் தடை செய்து சுதந்திரமாக தேவையன இணையதளங்

களை நாம் பயன்படுத்த முடியும்.



ஃபோல்டர்கள், ஃபைல்களுக்கு குறுக்கு விசை அமைக்க

கணினியில் விரைவாகப் பணியாற்ற குறுக்கு விசைகளைப் பயன்படுத்துவோம். ஒவ்வொரு மென்பொருள்களுக்கும் குறுக்கு விசைகள் உண்டு. நாம் அதிகம் பயன்படுத்தும் ஃபைல்கள் அல்லது அப்ளிகேஷன் ப்ரோகிராம்களைக் கூட இதுபோன்று குறுக்கு வழியைப பயன்படுத்தி எளிதில் திறக்கலாம். இந்த வசதியை விண்டோஸ் இயங்குதளம் நமக்கு தருகிறது.

அப்ளிகேஷன்களுக்கு(சாப்ட்வேர்) குறுக்கு விசை அமைக்க:

ளுவயசவ-மெனுவில் அல்லது டெஸ்க்டாப்பில் உள்ள அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து ஞசடியீநசவநைள செல்லவும். திறக்கும் விண்டோவில் சார்ட் கட் என்ற டேபைக் கிளிக் செய்து திறக்கவும். அதில் சார்ட் கட் கீ என்றிருக்கும் கட்டத்தில் கிளிக் செய்து எந்த சார்ட் கட் கொடுக்க விரும்புகிறீர்களோ அந்த கீயைத் தட்டவும். உதாரணமாக 1 என்ற எண்ணைக் கொடுக்க விரும்பினால் 1 என்பதைத் தட்டச்சு செய்ய ஊவசட +ஹடவ+1 என்று பதியப்படும். பிறகு ஓகே கொடுத்து வெளியேறவும். இனி எப்போது அப்ளி கேஷனைத் திறக்க வேண்டுமோ அப்போது இந்த ஷார்ட் கட் கீயைப் பயன் படுத்தவும். இதுபோல நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொன்றிற்கும் கொடுக்கலாம்.

இதே முறையில் ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களுக்கும் கொடுக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் ஷார்ட் கட் கொடுக்க விரும்பும் ஃபோல்டர் அல்லது ஃபைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து டெஸ்க்டாப் பகுதிக்கு ஷார்ட் கட் அமைக்கவும். பிறகு அந்த ஷார்ட்கட்டைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து முதலில் அப்ளிகேஷன் களுக்கு செய்தது போல பிராப்பர்ட்டீஸ் சென்று ஷார்ட் கட் டேபைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பிய எழுத்து அல்லது எண்ணை அழுத்த ஊவசட +ஹடவ+ சேர்க்கப்பட்டு ஷார்ட்கட் விசை தயாராகிவிடும். இனி தேவைப்படும்போது மௌசைப் பயன் படுத்தாமலே திறக்கலாம்.
சாத்தான் வேதம் ஓதினால் சந்தேகம் வர வேண்டாமா?
-உ. வாசுகி
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட ஆயுத மோதலில், மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இப் பின்னணியில் இலங்கை அரசு, சர்வதேச அழுத்தத்துக்கு அடி பணிந்து, சுயேச்சை யான, உயர்மட்ட, நம்பகத்தன்மையுள்ள விசா ரணையை நடத்த முன் வர வேண்டும். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மறு பக்கம், இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, மீள் குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு மறு வாழ்வு போன்ற சம கால, எதிர்காலத் தேவை கள் உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில், இந்தியா இத்த கைய வாதத்தை முன் வைத்து, இலங் கைக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என் பதையும் இந்த நேரத்தில் கட்சி வலியுறுத்து கிறது.

இதற்கிடையே, அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை மீறல் குறித்த தீர்மானத் தைச் சுற்றி விவாதம் நடந்து கொண்டிருக் கிறது. தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள், ஒபாமா தலையிட வேண்டும் எனக் கோரு கிறார்கள். அமெரிக்காவை மனித உரிமை பாதுகாவலராகக் கருதி முன் வைக்கப்படும் இக்கோரிக்கை மிக அபாயகரமானது. அமெ ரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டின் அரசி யலை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. வரலாற்றின் வழி நெடுகிலும், மனித உரிமைகளை அப்பட்டமாகக் காலில் போட்டு மிதித்தே வளர்ந்த சக்தி அல்லவா அமெரிக்கா? ஒபாமா, ஜார்ஜ் புஷ், கிளிண் டன், கார்ட்டர், ரீகன் போன்ற தனிநபர்களைத் தாண்டி, ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நோக்கமே ஆக்கிரமிப்பும், அத்துமீறல்களும் தானே? தமது நலனுக்காக ஒப்பந்தங்களைப் போட வைப்பதும், அதே நலனுக்காக போட்ட ஒப்பந்தங்களைக் கிழித்தெறிந்து குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும் ஏகாதிபத்திய நாடு களின் வாடிக்கை தானே? சவுதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நட்பு நாடுகளின் படு மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவோ, ஐரோப்பிய வல்லரசுகளோ இது வரை தீர்மானம் கொண்டு வராத ரகசியம் என்ன? பின்லேடன் போன்ற பலரை, அமெ ரிக்க ஏகாதிபத்தியம், தனது நலன் கருதி வளர்த்துவிட்டு, அவர்களின் வன்கொடுமை களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவித்து, உதவி செய்து, பின்னர் தன் வர்க்க நலனுக்குப் பலனில்லை என்று தெரிந்தவுடன், அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, போட்டுத் தள்ளிய நடவடிக்கைகளை அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரத்தக் கறை படிந்த வரலாறைச் சுருக்கமாகப் பார்ப் பது, ஆடு நனைகிறதே என்று (அமெரிக்க) ஓநாய் ஏன் அழுகிறது என்ற கேள்வியின் நியா யத்தை உணர்ந்து கொள்ள உதவும்.

கொலம்பஸ் போட்ட

ஆக்கிரமிப்பு விதை

அமெரிக்கா மட்டுமல்ல; இன்றுள்ள முன் னேறிய முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் வரலாறுகள் ஆக்கிரமிப்புகளால் ஆனவை தான். கொலம் பசும் அவரது குழுவும், 1492ல் அமெரிக்கக் கண்டத்தில் கால் பதித்தனர். இது தற்செய லானதல்ல. ஐரோப்பிய முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் ஒரு பகு தியாக, செல்வம் தேடி, தங்கம் தேடி, வளங் கள் தேடி அலைந்த பயணக் குழுவாக அதைப் பார்க்கலாம். கொலம்பஸ் குழுவினர், அங் கிருந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடிமைகளாக ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய் தனர். அவர்களது தங்க வயல்களைக் கபளீ கரம் செய்தனர். கொலம்பசும், அவருக்குப் பின் அது போன்று வந்தவர்களும் 2 ஆண்டு களில், தூக்கிலிட்ட, கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய செவ் விந்தியர்களின் எண்ணிக்கை 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. ஐரோப் பிய கண்டத்திலிருந்து வேலை தேடியும் பலர் இப்படி வந்தனர். அமெரிக்க கண்டத் தின் பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை, இனப் படுகொலை செய்து, ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து மற்ற இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.

எது நாகரீகம்?

அட்லாண்டிக் சமுத்திரத்தின் கட லோரம் துவங்கி, பசிபிக் சமுத்திரக் கரை வரை, அத்தனை பூர்வ குடியினரையும் அழித் தொழித்து, அமெரிக்க சாம்ராஜ்யம் ஸ்தாபிக் கப்பட்டது. இதற்கு சுமார் 300 ஆண்டுகள் பிடித்தன. இந்த 300 ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமை கள் மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டன. 1830ல், அமெரிக்க அதிபராக இருந்த ஜாக் சன், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப் பரப்பில் இருந்த காட்டுமிராண்டிகளை வெளியேற்றிவிட்டு, நாகரீகமான வெள்ளை இன மக்களை அடர்த்தியாகக் குடியேற்று வது தான் அமெரிக்காவின் நோக்கம் என்று பகிரங்கமாக அறிவித்தார். அமெரிக்காவின் எல்லை கள் இப்படித்தான் விரிவடைந்தன. விரிவாக்கத் திற் காக, உள்ளூர் மக் கள் மீது படு கொலைகள், உயி ருடன் எரிப்பு, ஏமாற்று வேலை, மோசடி, பெண் கள் மீது சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விட ப்பட்டன. நாகரீகம் சொல்லிக் கொடுக்கி

றோம் என்ற பெயரிலும், உயர்ந்த தத்துவம், நாகரீகம், ஞானம், மனிதாபிமானம், சுதந்திரம், ஆண்மை உடைய உயர் இனம் முன்னேறு வது தான் உலகத்துக்கு நல்லது என்ற பெய ரிலும் கொடுமைகள் நடந்தன. இன்று ஜன நாயகம் சொல்லிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல நாடுகளுக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியம் நுழைவதற்கு, அன்றே அச்சாரம் போடப்பட்டுவிட்டது. அமெரிக்க ஊடகங்கள் மற்றும் வெகுஜன பொதுப் புத்தி யின் ஒரு பகுதியாக இது மாறிவிட்டது. அண்டை நாடுகளை ஆக்கிரமித்து தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கு முத லாளித்துவ வணிக நலனும், லாப நோக்கமும் தான் அடிப்படை காரணமாக இருந்தன. உதா ரணமாக, கியூபாவைப் பற்றிச் சொல்லும் போது, கியூபாவில் 1 கோடி ஏக்கர் செழிப்பான வனப் பகுதி உள்ளது. இங்குள்ள மரங்களின் ஒவ்வொரு அடியும், அமெரிக்காவில் பெரும் லாபம் கொடுக்க வல்லது என்று அமெரிக்க பத்திரிகைகள் எழுதின. அன்றைக்கு நிலம், மரம் போன்ற பொருட்களாக இருக்கலாம், இன்றைக்குப் பெட்ரோலியமாக இருக்கலாம். ஆக்கிரமிப்பின் நோக்கம் ஒன்றே.

பிற நாட்டுத் தலைவர்கள் அரசியல் படுகொலை செய்யப்படுவது

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ, ஏகாதிபத்திய நலனுக்கும், கொள்ளை களுக்கும் விரோதமாக இருக்கக் கூடியவர்க ளுக்கு, குறிப்பாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், கைப்பற்றும் நிலையில் செல்வாக்குடன் இருந்தாலும் அவர்களுக்கு நாள் குறித்து விடும். கடந்த காலத்தில், சிஐ ஏவின் இத்தகைய பல சதிகள் அம்பல மாகியுள்ளன. சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள கூலிப்படைகள், போதைப் பொருள் வியா பாரிகள், சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து, அரசியல் கொலைகளை சிஐஏ அரங்கேற்றும் என்பது ஊரறிந்த ரகசியம். அமெரிக்க அரசு, சிஐஏ, லாப வெறி அமெரிக்க நிறுவனங்களுக்கும் ராணுவத்துக்கும் உள்ள நெருக்கமான பிணைப்பு (இது ராணுவத் தொழில் கூட்டமைப்பு என்று அழைக்கப் படுகிறது) ஆகியவை இதில் மையப் பங்கு வகிக்கின்றன. ஃபிடல் காஸ்ட்ரோ மீது பல முறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. ஈரான் நாட்டு எண்ணய் வளங்களை நாட்டு நலன் கருதி நாட்டுடமையாக்கிய மொஸ் ஸாதெக், காங்கோவின் பேட்ரிஸ் லுமும்பா, டொமினிகன் குடியரசின் ரஃபேல் ட்ரூ ஜில்லோ, சிலியின் ரீனே ஷ்னீடர், புரட்சி யாளர் சேகுவேரா, பின்னாளில் அலெண்டே என்று படுகொலை செய்யப் பட்ட ஏழை நாடு களின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், தேச பக்தர்களின் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது.. இத்தாலியில் இருந்த வலுவான கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைக்க முயற்சித்த குற்றத்துக்காக இத் தாலியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் அல்டோ மோரோ கொலை செய்யப் பட்டார். ஆப்கானிஸ்தானில் டாக்டர் நஜி புல்லா தூக்கிலிடப்பட்டார். அண்மையில் காலமான பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது. முற்போக்குவாதிகளாக இல்லா விட்டாலும் ஏகாதிபத்தியத்துடன் முரண்டு பிடிப்பவர்கள், ஒத்துப் போகாதவர்களும் ஏரா ளமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிற நாடுகளில் உள்ள அரசுகள் ஒத்து வராவிட்டால், அவற்றுக்குப் பல பெயர்கள் சூட்டி, அவற்றைக் கீழே இறக்கி பொம்மை அரசுகளை உட்கார வைப்பதிலும் அமெ ரிக்காவை அடித்துக் கொள்ள யாராலும் முடி யாது. லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெ ரிக்காவின் இந்த அநீதிகளை சகிக்க முடி யாத அளவு சந்தித்திருக்கின்றன. டொமினி கன் குடியரசில் 4 முறை தலையீடு செய்த துடன், 8 ஆண்டுகள் அமெரிக்க துருப்புகள் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டன. ஹைத்தி யில் 1915 துவங்கி 19 ஆண்டுகள் துருப்புகள் நிறுத்தி வைக்கப் பட்டன. 1900- 1933 கால கட்டத்தில் கியூபாவில் 4 முறையும், பனா மாவில் 6 முறையும், குவாதமாலாவில் ஒரு முறையும், ஹோண்டுராசில் 7 முறையும், நிகரகுவாவில் 2 முறையும் ராணுவத் தலை யீடுகள் உட்பட அமெரிக்காவின் தலையீடு இருந்திருக்கிறது. ஆட்சிக் கவிழ்ப்புகளும் அரங்கேறியுள்ளன. இன்றைக்கும், பல நாடுகளில் அமெரிக்க துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை அமெரிக்க அரசின் தலையீடுகளும் பல நாடு களின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர் கின்றன.

தற்போது லத்தீன் அமெரிக்க பிரதேசத் தில், 11க்கும் மேற்பட்ட நாடுகளில் இடது சாரி அரசுகள் அமைந்திருப்பது தற்செயலா னதல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதும், அதன் கைப்பாவை அரசுகள் மீதும் உள்ள மக்களின் கோபம் இந்நிலையை உரு வாக்கியுள்ளது. அதே சமயம், வெனிசுலா அதிபர் சாவேசின் புற்றுநோய் காரணமான மரணத்தை ஒட்டி, லத்தீன் அமெரிக்க பிர தேசத்தில் ஆட்சியிலிருக்கும் இடதுசாரி தலைவர்களில் 4,5 பேருக்குப் புற்று நோய் என்பதிலும் அமெரிக்காவின் கை இருக்குமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. ரசாயன யுத்தத்தில் கை தேர்ந்தது தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதை மறந்து விடக் கூடாது.

சர்வ தேச விதிமுறைகளைக் காலில் போட்டு மிதிப்பது

வியட்நாமின் மீதான அமெரிக்காவின் 30 ஆண்டு கொடூர யுத்தம், ஏஜெண்ட் ஆரஞ்சு உள்ளிட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன் படுத்தி, பல தலைமுறைகளுக்குப் பாதகம் செய்த செயல்கள் எல்லாம் சாதாரண மனித உரிமை மீறல்களா? 5 லட்சம் குழந்தைகள் ஊனமடைந்ததும், ஊனத்துடன் பிறந்ததும் மன்னிக்கக் கூடிய குற்றங்களா? ஜப்பானின் மீது அணுகுண்டுகளைப் போட்டு மனிதப் பேரழிவை ஏற்படுத்தியது லேசான விஷ யமா? கியூபா உள்ளிட்ட நாடுகள் மீது பல் லாண்டு பொருளாதாரத் தடை விதித்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள பாதகங்கள் கொஞ்சநஞ்சமா? ஆனால் வீர வியட்நாம் அமெரிக்காவை விரட்டியடித்தது. சின்னஞ் சிறு சோஷலிச கியூபா, சவால் விட்டு நின்று காட்டியது. ஆனால், அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் இத்தகைய வன்கொடுமைகளை எந்த சர்வ தேச நீதிமன்றம் என்ன செய்ய முடிந்தது? எந்த மனித உரிமை கவுன்சி லால் நடவடிக்கை எடுக்க முடிந்தது? ஐநா சபையால் என்ன தலையீடு செய்யப் பட்டது?

ஆக்கிரமிப்புக்கு ஆதரவு

பாலஸ்தீனத்தை சின்னாபின்னப் படுத்தி, இஸ்ரேல் உருவாகவும், இன்று வரை இஸ்ரேல் நடத்தும் மிகக் கொடுமையான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களுக்கும் அமெ ரிக்க அரசும், இதர சில மேற்கத்திய நாடு களும், பக்கபலமாக இருந்து வருகின்றன. தங்களது சொந்த நாட்டிலிருந்து பாலஸ் தீனிய அரபு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப் பட்டனர். கிட்டத் தட்ட 1 கோடி பேர் வெளியேற்றப் பட்டதாகக் கூறப்படு கிறது. பல்லாயிரக் கணக்கானோர் கொன்று குவிக்கப் பட்டனர். இஸ்ரேல், ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு வெளியேற வேண்டு மென்று பலமுறை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்கள் முன் மொழியப் பட்டன. இது வரை, 39 முறை, அமெரிக்கா தன் மறுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலைக் காப்பாற்றியிருக்கிறது. ஐநா சபையால் என்ன செய்து விட முடிந்தது?

இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேடுவதாக இராக்கில் நுழைந்து, நாசம் செய்து படுகொலைகளை அமெரிக்க அரசு நிகழ்த்தியது. 5 ஆண்டு யுத்தத்தில் 12 லட்சம் இராக்கியர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். இது இராக்கின் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் . பலர் ஊனமுற்றுள்ளனர். 20 லட்சம் பேர் (மக்கள் தொகையில் 13சத விகிதம்) அகதிகளாகி அண்டை நாடுகளில் அவலத்துடன் உள்ளனர். 45 லட்சம் பேர் அனாதைகளாகி விட்டனர். அதே சமயம், பேரழிவு ஆயுதங்களை இஸ்ரேல் வைத் திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தும், அமெரிக்கா கண்டு கொள்ளாமல் இருக் கிறது. தற்போது சிரியாவில் பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்ட கலகக் காரர்களுக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாட்களும் நிதி, ஆயுதம், பயிற்சி என்று சகலமும் அளித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் அப்பாவி சிரிய மக்கள் 60,000 பேர் வரை கொல்லப் பட்டு, 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகப் போய் சேர்ந்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை வளர்த்து விட்டு, தற்போது அவர்களை அழிக்கிறோம் என்ற பெயரில், அமெரிக்கா ஏராளமான துருப்புகளை அங்கு நிறுத்தி வைத்திருக்கிறது. பல்லாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் அப்பாவி மக்கள் தான். 6 சுய அதிகாரம் பெற்ற குடியரசுகள் ஒன்றிணைந்த யூகோஸ்லாவியாவில், சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, ரத்த ஆறு ஓடியதற்கும், இனப் படுகொலைகள் நடந்ததற்கும் அமெ ரிக்க அரசின் பங்களிப்பு பிரதான காரணம்.

விசாரணை என்ற பெயரில் போர் கைதிகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்தும் சித்ரவதைகள் (அபு கிரெய்ப், குவாண்டனாமா சிறைச்சாலைகள் உட்பட) கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு மிருகத் தன்மை கொண்டவை. அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் ஒரு சேர மீறுபவை. இலங்கை மனித உரிமை மீறல்களை விசா ரிக்க வேண்டும் என்று இவர்கள் கூறுவது, சாத்தான் வேதம் ஓதுகிற கதையாகவே உள்ளது.

சர்வ தேசக் கம்யூனிச சதியை எதிர்த்த போர் என்றும், தீய சாம்ராஜ்யமான சோவியத் யூனியனை எதிர்த்த போர் என்றும் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்போது இஸ்லாமிய பயங் கரவாதத்துக்கு எதிரான போர் என்று, ஒவ் வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சூட்டி, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கை களை நியாயப்படுத்திக் கொள்கிறது. உலக நலனுக்காகவே, தான் இதைச் செய்வதாக மக்களை நம்ப வைக்கிறது. கார்ப்பரேட் ஊட கங்கள் முழுமையாக ஒத்துழைக்கின்றன.

ஏகாதிபத்தியத்தின்

இரட்டை முகம்

அமெரிக்காவின் இத்தகைய கொடுஞ் செயல்களை தீரத்துடன் எதிர்த்ததிலும், எதிர்கொண்டதிலும் சோவியத் யூனியனுக்கு மகத்தான பங்குண்டு. இரண்டாவது உலகப் போருக்குப் பின் உருவான அணி சேரா இயக்கமும், அப்போது நிலவிய சர்வதேச நிலைமைகளும், பலாபலன்களும் ஏகாதி பத்திய நடவடிக்கைகளை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தின. சோஷலிச முகாம் என்ற ஒன்று இருந்தது, அமெரிக்க ஏகாதிபத் தியத்துக்குப் பெரும் பிரச்சனையாக இருந் தது என்பது தான் உண்மை. இன்று வலு வான சோஷலிச முகாம் இல்லாத நிலை யில், ஆகப் பெரும் பயங்கரவாதியாக, உலகத் தையே தன் ஆளுகைக்குள் கொண்டு வரும் ஆதிக்கவாதியாக, ஏகாதிபத்திய நாடுகளின் தலைவனாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இறுமாந்து நிற்கிறது.

சர்வ தேச நிதி மூலதனத்தின் கொள்ளை லாபத்துக்காக, உலகை வேட்டைக் காடாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இதர மேலை நாடுகள், முதலாளித் துவத்தைத் தூக்கி நிறுத்த எதை வேண்டு மானாலும் செய்யத் தயாராக உள்ளன. வளரும் நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதும், சந்தைகளைக் கைப்பற்றுவதும் அதற்காக இந்நாடுகளின் இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்வதும், அதிரடி ஆக்கிரமிப்பு நட வடிக்கைகளில் இறங்குவதும் சமகால முத லாளித்துவத்தின் தேவையாக உள்ளன. பிர தேச ஒத்துழைப்பு என்ற பெயரில் இந் நாடுகள் அந்தந்த மண்டலத்தில் ஒரு கூட் டமைப்பை ( போல) உருவாக்குவதைக் கூட ஏற்றுக் கொள்ளாமல், பிரித்தாளும் சூழ்ச்சி யின் மூலம் பலவீனப்படுத்துவதும் ஏகாதிபத் திய மேலாதிக்கத்தின் தேவை. இது குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த தீர்மானம் விரிவாகவே விளக்குகிறது.

பல நாடுகளில் நிலவும் தேசிய இனப் பிரச்சனையில் அமெரிக்காவுக்கு ஒரே நிலைபாடு கிடையாது. நட்பு நாடாக இருந் தால், சிறுபான்மை தேசிய இனத்தின் நியாய மான உரிமை குரல்களுக்கு எதிராக அந் நாட்டு அரசை ஆதரிப்பது; அணி சேரா அல்லது சோஷலிச முகாமுடன் நெருக்க மாக இருக்கும் நாடானால், சிறுபான்மை தேசிய இன உரிமைகளுக்காகவே தான் பிறந்து வளர்ந்தது போன்ற நிலையை எடுப் பது; ஆக இரட்டை நிலைபாடு ஏகாதிபத் தியங்களுக்கு உண்டு.

இலங்கை அமைந்துள்ள கடல் பகுதி, அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு மிக வசதியாக இருக்கும் பகுதியாகும். ஏற் கனவே, திரிகோணமலையில் அமெரிக்கா வின் தளம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஒன்று பட்ட இலங்கை, அமெரிக்காவின் பக் கம் சாய்வது, ஏகாதிபத்தியத்துக்குப் பேருத வியாக இருக்கும். இரண்டாகப் பிரிந்தால் இன்னும் வசதி தான். அணி சேரா நாடாக இருக்கும் இலங்கையைத் தனது முகாமுக்கு ஆதரவாகக் கொண்டு வரும் நோக்கம், அமெ ரிக்காவின் இன்றைய நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கிறது. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை குறித்தோ, மிக மோச

மாக பாதிக்கப் பட்டு நிற்கும் இலங்கை தமிழர் கள் மீதோ அமெரிக்காவுக்கு அக்கறை எது வும் கிடையாது. ஒரு வேளை, எதிர்பார்க்கிற படி இலங்கை அரசு ஏகாதிபத்திய முகா முக்குப் படிந்தால், மனித உரிமை தீர்மானம் காற்றில் பறக்க விடப்படும் என்பதில் எள் ளளவும் சந்தேகமே தேவையில்லை.

எனவே தான், உலக பயங்கரவாதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலை பின் னலுக்கு இரையாகி விடக் கூடாது. அமெ ரிக்க அரசு உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடு களின் அக்கிரமங்களுக்கு எதிராக, வளரும் நாடுகளின் இறையாண்மை பாதுகாக்கப் பட வேண்டும்; அதே சமயம், அந்நாடுகளின் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசுகள் கட்டவிழ்த்து விடும் வர்க்க சுரண்டலுக்கு எதிராக, அங்குள்ள அனைத்து தேசிய இனங் களையும் சார்ந்த தொழிலாளி வர்க்கம், இதர சுரண்டப்படும் மக்களையும் ஒன்றிணைத் துப் போராட வேண்டும். கூடவே, சிறு பான்மை தேசிய இனங்களுக்கு சம உரிமை, சம வாய்ப்புகள், அவர்களது மொழி, கலாச் சாரம் பாதுகாக்கப் படுவது போன்ற ஜன நாயகக் கடமைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும். அதற்காக அனைத்து இனங் களிலும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று படுத்தி, அரசியல் தீர்வுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். இலங்கையிலும் இத் தகைய அணுகுமுறையே பலனளிக்கும்.

இந்தியா தனது ராஜீய உறவைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச மன்றங் களில் குரல் எழுப்ப வேண்டும். அதை விடுத்து, இலங்கை அரசின் பாகுபடுத்தும் கொள்கைகள் ஒரு புறம், இலங்கை ராணு வம், இலங்கையின் பூர்வகுடி தமிழ் மக்கள் மீது நடத்திய கொடுமையான மனித உரிமை மீறல்கள் மறு புறம் உருவாக்கும் நியாயமான கோபத்திலும், வேதனையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் துணைக்கு அழைப்பது அடுப்புக்குத் தப்பி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த கதையாக மாறி விடும்.

(ஆதாரம்: ‘பயங்கரவாதம் வேர்களும், தீர்வுகளும்’ டி.ஞானையா எழுதிய ஆங்கிலப் புத்தகம் - முதல் பதிப்பு 2010- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை ரூ.190)


தடம் பதித்த 30 ஆண்டுகள்
செ.முத்துக்கண்ணன்






சேவை, துன்பம், தியாகம் என்ற குறிக்கோள்களை அவர்கள் தங்களது ஒரே வழிகாட்டியாக கைக் கொள்ளட்டும். ஒரு தேசத்தின் உருவாக்கம், தங்களது சொந்த சுகங்களையும் நலன்களையும் காட்டிலும், தங்களது சொந்த உயிர்களையும் தாம் நேசிப் பவர்களின் உயிர்களையும் காட்டிலும் தங் களது நாட்டு நலனையே பெரிதெனப் பே ணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள், பெண்களின் தியாகங்களையே வேண்டுகிறது என்பதை அவர்கள் நினை வில் நிறுத்தட்டும். தியாகிகள் சிந்தும் செங் குருதியிலேயே இளம் சுதந்திரப் பயிர் செழித்து வளரும்.6.4.1928ம் தேதி நவஜவான் பாரத் சபா அமைப்பினால் இந்த தேசத்தின் விடு தலைப் போராட்டத்தில் இளைஞர்களின் தேசபக்த உணர்வை மேலும் வார்த்தெடுக்க வும், போராட அறைகூவல் விடுத்துப் வெளி யிடப்பட்ட அறிக்கையாகும்.1980ல் துவங்கப்பட்ட வாலிபர் சங்கம் இந்த தேச நலனுக்காகக் கொடுத்த விலை யை, நாட்டின் எந்த ஒரு இயக்கமும் கொடுத் திருக்க முடியாது. காலிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றபோது, இந்திய ராணுவத்திற்கு இணையாக களப்பலி கொடுத்த இயக்கம் டி.ஒய்.எப்.. அரசியல் ராணுவமாக தேச ஒற் றுமையை வெளிப்படுத்தியது. டி.ஒய்.எப். மாநிலத் தலைவராக இருந்த குர்னாம் சிங் உப்பல், மாநிலச் செயலாளராக இருந்த சோகன்சிங் தேஷி ஆகியோரைத் தீவிரவாத கும்பல் சுட்டுக் கொன்றதை, இன்றைய இளைய சமூகம் முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அஸ்ஸாமில், பிரிவினை கோஷத்தை எதிர்த்த காரணத்திற்காக துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட நிரஞ் சன் தாலுக்தாரின் வரலாறு, கல்லூரி மாண வர்களின் வீரமிக்க போராட்டம் போன்றவை, 1980களில் இந்திய அரசியலில் திவீரம் செ லுத்திக் கொண்டிருந்தது. தேச ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலை, எதிர்கொண்டதால், அன்றை டி.ஒய்.எப். இளைஞனை கதா நாயகனுக்குரிய மிடுக்கோடு, நடை போடச் செய்தது.இதன் பின்னணியில் இந்தியாவில் 1980களில் இளைஞர்களின் நம்பிக்கை ஒளியாய் தேசம் காக்கும் போர்படையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேவை, துன்பம், தியாகம், முன்னேற்றம் என்ற பாதை யில் சமூகத்தை மாற்றியமைக்கும் கடமை யில் எண்ணற்ற வீரர்களை, தோழர்களை, தியாகிகளை பலிதந்து இன்று தேசத்தின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சிக்கான போராட் டத்தினை முன்னெடுத்துச் செல்கிறது.தியாகத்தின் தழும்புகளோடுவாலிபர் இயக்கத்தில் தமிழகத்தின் முதல் இரத்த சாட்சி தோழர் சீராணம் பாளை யம் பழனிசாமி துவங்கி குட்டி ஜெயபிரகாஷ், பாபு, செல்லையன், சுதாகரன், கோபி, முத்து, சேட்டு, அமுல்ராஜ், சந்துரு, ஆதித்தவர்த் தன், ராஜூ, சிங்கை குமார், சீனிவாசன், பாண்டி, பன்னீர்செல்வம், குமார், ஆனந்தன், அமல்ராஜ், சுரேஷ், இரத்தினசாமி, மாண வதியாகிகள் சோமு, செம்பு உள்ளிட்டு கந்து வட்டி கொடுமைக்கு எதிராக பலியான பள்ளி பாளையம் வேலுச்சாமி தியாகம் வரை எத்த னை எத்தனை தியாகங்கள்.

எதற்கு.. மக்களை அளவு கடந்து நேசித்த கார ணத்தால், அளப்பரிய மனித நேயத்திற்கு சொந்தகாரர்களாய் இருந்ததால்.. அவர்களின் ஒவ்வொரு அணுவிலும் கொண்ட கொள் கையும், இலட்சியமும், போராட்ட பாராம் பரியமுமே இதற்கு காரணங்களாகும்.. வரலாற் றில் தனிநபர்களுக்கு மகத்தான பாத்திரங்கள் உண்டு.. அவர்களது செயல்பாட்டில் வரலாற் றையும் உருவாக்குகிறார்கள். இன்று தமிழகத் தின் பல்வேறு கடைக்கோடி கிராமங்களான சீராணம்பாளையம், பெத்தானியபுரம், அரு மனை, மண்டபம், அரசூர், அரகநாடு, விருது நகர், தேன்கனிகோட்டை, பெரம்பூர், விக்ரம சிங்கபுரம், கேத்தம்பாளையம், பட்டிதேவன் பட்டி, புதுப்பாளையம், கண்டமங்களம், இடுவாய் என எண்ணற்ற கிராமங்களை வரலாற்றில் பதிவு செய்தது தோழர்களின் தியாகங்களே என்றால் அது மிகையாகாது. இத்தகைய தியாகங்களில்தோய்த்தெடுக் கப்பட்ட வாலிபர் சங்கம் 1979ல் திருப்பூரில் கூடிய முதல் வாலிபர் சங்க மாநாடு தமிழக இளைஞர்களின் கோரிக்கைகளை முன் வைத்தது, அதற்கு பின் திண்டுக்கல், திருவா ரூர்,விருதுநகர், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை, திருப்பூர், விருது நகர், விழுப்புரம், கோவை என 13மாநாடு களை கடந்து வந்துள்ளது. சில ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு ஆரம்பித்த தமி ழக டிஒய்எப்ஐ இன்று 10.50 லட்சம் இளை ஞர்களை உறுப்பினர்களாக கொண்டு தமிழக இளைஞர்களின் வெளிச்சக் கீற்றாய் வளர் ந்து வருகிறது.தொழில்வளர்ச்சி - வேலை வாய்ப்பிற்காகமனித வள மேம்பாட்டின் அடிப்படை கூறுகளான கல்வி, வேலை, சுகாதாரம் ஆகியவற்றிற்கான போராட்டத்தை இந்த மண்ணில் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

வேலை குறித்து நாம் வைக்கும் கோஷங்கள் ஆட்சியாளர்களால் அந்தந்த கால கட்டத் தில் பரிகாசம் செய்யப்பட்டது. ஆனால் சமூ கத்தின் வளர்ச்சிப்போக்கில் வாலிபர் சங்கம் வைத்த கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை வரலாறு இன்று வரை நிருபித்து வந்துள்ளது. வேலை அல்லது நிவாரணம் என்ற கோரிக்கை வைத்த போது ஏளனம் பேசிய திராவிட இயக்கங்கள் தான் இன்று வேலையில்லா கால நிவாரணத்தை நெடிய போராட்டத்திற்கு பின் வழங்கி வருகிறது.நாடுதழுவிய அளவில் வேலை யின்மை க்கு எதிராக பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகளோடு இணைந்து வேலையின் மை எதிர்ப்பு நடவடிக்கைக்குழு (சிசிஏயு) பல போராட்டங்களை நடத்தியதில் வாலிபர் இயக்கத்திற்கு மகத்தான பங்குண்டு. வே லை நியமனத்திற்கு தடை விதிக்கும் நட வடிக்கையை மத்திய, மாநில ஆட்சியாளர் கள் செய்த போது அதற்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம், தொடர்கட்ட மறியல், பல கட்ட இயக்கங்கள் என நடத்தியதை கணக் கிட முடியாது. 2013 ஜனவரியில் தமிழக வேலைவாய் ப்புத்துறை வெளியீட்டு விபரத்தில் 1.31 கோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். இன்று வேலைவாய் ப்புகள் கடுமையாக சுருங்கி வருகிறது. 2 லட்சத்திற்கும் மேல் அரசுத்துறை பணி யிடங்கள் காலியாக உள்ளன. திமுக ஆட்சியில் அரசாணை 170 என்று ஒய்வு பெற்றவர்களுக்கு வேலை என அறிவித்து இளைஞர்கள் வாழ்வில் மண்ணை அள்ளி போட்ட போது அதற் கெதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தி இளைஞர்கள் வாழ்க்கையை பாதுகாத்தது.

அதற்கு பரிசாக ஆளும் அரசுகள் இன்று வரை போராடிய டிஒய்எப்ஐ ஊழியர்களை நீதிமன்றங்களுக்கு படியேற வைத்து அலைகழித்து வருகிறது. அதையும் முறியடி த்து நீதிமன்றங்கள் டிஒய்எப்ஐயின் நியாய மான போராட்டத்தை அங்கீகரித்து தோழர் களை விடுதலை செய்து தீர்ப்பளித்து வரு கிறது.சேதுகால்வாய்திட்டம்தமிழகத்தின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல பத்தாண்டு கால தொடர் இயக்கம். தில்லியில், ராமேஸ்வரத்தில், தமிழகம் தழு விய அளவில் என தொடர்ந்து நடைபெற்றுள் ளது. திட்டத்தை நிறைவேற்றுவது தமிழகத் தின் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வே லைவாய்ப்புக்கும் உதவிடும். பல மாவட் டங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்ட போது உடனடி இயக்கம், இதில் தொழிலாளர்கள் போராடும் போது அவர்களுக்கு ஆதரவான இயக்கம் என டிஒய்எப்ஐ தனி முத்திரை பதித்துள்ளது. சிறு துறைமுகங்களாக உள்ள முட்டம், இராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி ஆகியவை வளர்ச்சி யும். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட ரப்பர்தொழில், இராமேஸ்வரத்தின் மீன்பிடி தொழில், சிவகங்கை மாவட்டத்தின் கிரா பைட் தொழில், திருநெல்வேலி நான்குனேரி, கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காக் களும், விருதுநகர் மாவட்டத்தின் வர்த்தகங் கள் கூடுதலான வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் பெறும். கடல் ஆழப்படுத்தப்படு வதால் மீன்வளமும் அதிகரிக்கும். இதனால் மீன் ஏற்றுமதியும் அதிகரிக்கும். நிலக்கரி, நாப்தா, எண்ணெய், இயற்கைவாயு, அனல் மின்நிலையம் தனி உபயோகத்திற்கு இறக்கு மதி செய்ய, ஏற்றுமதி செய்ய கடலோர தொ ழில் அனுமதி, சுற்றுலா, கடல் போக்குவரத்து, கப்பல் பழுதுபார்த்தல், உடைத்தல் ஆகியன சார்ந்து உள்ளது, இதனையொட்டி ஏராளமான வேலைவ்ர்ய்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன,தமிழகத்தில் சென்னை, துத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன், இராமேஸ்வரம், வாலிநோக்கம், குளச்சல், காட்டுப்பள்ளி, எண்ணுர், முனையுர், திருச்சோபுரம், பிஒய் 03 எண்ணெய்வளப்பகுதி, சிலம்பிமங்கலம், பரங்கிப்பேட்டை, காவேரி, வானகிரி, திருக் கடையூர், திருக்குவளை, புன்னகாயல், உடன்குடி, மணப்பாடு, கூடங்குளம், செய்யூர், மரக்காணம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய பெரு, சிறு துறைமுகங்கள் அரசு மற்றும் தனி யார் கட்டுப்பாட்டில் துறைமுகங்களாக உள் ளன. இந்த துறைமுகங்களுக்கு அச்சாரமாக தமிழகத்தின் கனவு திட்டமாக இருந்த சேது சமுத்திரத்திட்டம் அமுலானால் இன்னும் ஏராளமான வளங்கள் இந்த துறைமுகங்க ளில் பெருகும். மதவெறியர்களின் கருத்துக் களுக்கு இன்று அதிமுக அரசும் ஒத்து ஊதுகிறது.இச்சூழலில் வேலைவாய்ப்புக்கான நிரந்தரத் தீர்வை உருவாக்கிட வேண்டி யுள்ளது. குறிப்பாகதமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உரு வாக்க புதிய பணியிடங்களை ஏற்படுத்தியும், மறைமுகமாக பல துறைகளில் நடைமுறை யில் உள்ள வேலைநியமன தடையை அகற் றவும் நடவடிக்கை மேற்கொள்ள வைப்பது.

தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார்ந்த தொழில்களில் சம வேலைக்கு சம ஊதியம், வாழ்வதற்கேற்ற வருமானம், உற்பத்தி, வளர்ச்சியை அடிப் படையாக கொண்ட சமூக பாதுகாப்போடு கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.சமூக வளர்ச்சியோடு கூடிய வேலை வாய்ப்புகளையும், உள்ளூர் வளர்ச்சியை மையமாக கொண்டு தமிழகத்தில் கண்ட றியப்பட்டுள்ள கனிம வளங்களையும், நில மற்றும் நீர்வள ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் புதிய தொழிற்சாலைகளை துவங்கிட வேண்டும். கிராமப்புற விவசாய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை களையும், விவசாய உபபொருட்களிலிருந்து உருவாக்கப்படும் கைவினைப்பொருட்களுக் கான குடிசைத் தொழில்களையும் ஒன்றியத் திற்கு ஒன்று துவங்குவதன் மூலம் விவசாயத் தையும், விவசாயி மற்றும் விவசாயத் தொழி லாளர்களையும் குறிப்பாக கிராமப்புற பெண்களின் பங்கேற்பையும் கூடுதல் படுத்த முடியும். மாம்பழம், கிழங்குகள், மலர்கள், முந்திரி, நெல், வாழை, கரும்பு உள்ளிட்டு ஏராளமான விவசாய பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளை கிராமப் பகுதிகளில் உருவாக்க முடியும். சில பொருட்கள் பருவத்திற்கு உற்பத்தி செய்வ தாக இருக்கும். இருப்பினும் அது சார்ந்த இதர காலங்களிலும் அதன் கழிவுப் பொருட்களி லிருந்தும் உற்பத்தி செய்ய முடியும். உதார ணத்திற்கு வாழை என்று சொன்னால் அதன் தண்டிலிருந்து சட்டைத்துணி, மிட்டாய்கள் தயாரிக்க முடியும். வைக்கோலில் இருந்து ஏராளமான கைவினைப்பொருட்களை, ஆஸ்பெஸ்டாஸ் சீட் உள்ளிட்டு தயாரிக்க முடியும். இதன் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பை கொண்டு கிராமப்புற இடப்பெயர் வை தடுத்து நிறுத்த முடியும்.கிராமப்புற வளர்ச்சியை மையமாகக் கொண்டு வங்கிக்கடன்கள் கூடுதலான மானியங்களோடு நிபந்தனையற்று வழங்கு வதும், பாதிப்பு உள்ள இடங்களில் நிவாரணங் களோடு கூடிய புதிய உற்பத்தியை மீண்டும் துவங்குவதற்கான உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நின்று வழங்க வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விவசாய காலமற்ற இதர நாட் களில் 200 நாட்கள்; 250 ரூபாய்குறைந்தபட்ச கூலியென வழங்கிட வேண்டும்.

கிராம பஞ்சாய்த்துக்களின் மூலம் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து கிராமப்புற பொருளா தாரத்தை பலப்படுத்துவதும், கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்தி டவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கிராமங்களில் குவிந்து கிடக்கும் நிலக்குவியல் மற்றும் மடங்கள், கோவில்நிலங்கள், தரிசு நிலங்கள் உள்ளிட்ட வற்றை நில சீர்திருத்த சட்டத்தின் மூலம் நிலமற்ற கிராமப்புற மக்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும்.தமிழகத்தின் கேந்திரமான தொழில் மையங்களான கோயம்புத்தூர், திருப்பூர், கோவில்பட்டி, ஈரோடு, நாமக்கல், ஒசூர், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதி களில் நசிந்து வரும் பாரம்பரியமிக்க ஜவு ளித்தொழில், நெசவுத்தொழில், விசைத்தறி, தீப்பெட்டி, தோல், பனியன் உள்ளிட்ட தொழி ல்களை பாதுகாத்திடுவதன் மூலம் லட்சக் கணக்கான மக்களின் வாழ்வை பாதுகாத்து மேம்படுத்திட முடியும். குறிப்பாக இந்த பகுதி களில் அன்றாடம் சந்தித்து வரும் மின் வெட்டு, நூல் விலையுயர்வு, சந்தை குறித்து நிரந்தரமான தீர்வுகளை உருவாக்கிட வேண் டும். எனவே இந்த தொழில்களில் முன்னு க்கு வரும் நெருக்கடியை தீர்க்கும் வகையில் தமிழக அரசு அனைத்துவிதமான உதவிக ளையும் மேற்கொள்ள வேண்டும்.கல்விஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை கல்வியே ஆகும், வாலிபர் சங்கம் ஆரம்பிக் கப்பட்ட ஆண்டு முதல் இரண்டு மகத்தான முழக்கங்களை முன்னுக்கு வைத்தே இன்று வரை போராடி வருகிறது,“ அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற கோ சத்தின் அடிப்படையில் தமிழகத்திலும் வாலிபர் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது,கல்வியை கடைச்சரக்காக்கும் நவீன தாரளமய கொள்கைக்கு எதிராகவும், கல்வி வியாபாரத்திற்கு எதிராகவும், கல்விநிலையப் பிரச்சனைகளுக்காகவும், கல்வியை தனியா ருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்த போராட்டத் தில் இந்திய மாணவர் சங்கத்தோடு உறு துணையாக நின்று போராடிய அமைப்பு டிஒய் எப்ஐ. ராமசந்திரா மருத்துவ கல்லூரியை சாராய உடையருக்கு கொடுத்தற்கு எதிரான போராட்டம், சமச்சீர் கல்வி, கல்வி உரிமைச் சட்டத்திற்காக என போராடி வெற்றி பெற்ற அமைப்பு டிஒய்எப்ஐ. இன்றும் வங்கிகளில் கல்விக்கடனுக்காக அல்லல்படும் மாணவர் களுக்காக போராட்டம் நடத்தி பல மாவட்டங் களில் சில நூறு கோடி ரூபாய்களை பெற்றுத் தந்த அமைப்பு டிஒய்எப்ஐ.தாய்மொழிக் கல்விக்கான போராட்டத் தையும் மறுபுறம் நடத்தி வருகிறோம். தமிழ் மொழியை ஆட்சி மற்றும் நீதிமன்ற மொழியாக் குக என போராடி வருகிறோம்.சுகாதாரம்சுகாதாரம், மருத்துவத்திற்காக தமிழகத் தில் நாம் நடத்திய இயக்கங்கள் பட்டியலிட முடியாது, ஆரம்ப சுகாதார மையம், துணை சுகாதார மையம், தாலுக்கா மருத்துவமனை, மாவட்ட மருத்துவனை என அனைத்திலும் மருந்து முதல் மருத்துவ வசதி வரை அனை த்து உள் கோரிக்கைகளுக்காகவும் பல நூதன வடிவங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளோம். இவ்ற்றில் சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, நாகை, திருவாரூர் அரசு தலைமை மருத்துவமனை களின் தர மேம்பாட்டிற்காக வெற்றியும் கணிசமாக பெற்றுள்ளோம்.

மருத்துவர், செவிலியர்கள், சுகாதாரபணி யாளர்கள், அலுவலக ஊழிய்ர்கள் கேட்டு டிஒய்எப்ஐ நடத்திய எண்ணற்ற போராட்டங் களை தமிழகத்தின் அனைத்து மருத்துவ மனைகளும், மக்களும் கதைகதையாய் சொல்லும், போராட்டத்தோடு மட்டுமல்ல,... நேரடி நடவடிக்கையாக திருப்பூர், கோவை, திருவள்ளுர், சென்னை, மதுரை, நாகை என அரசு தலைமை மருத்துவமனை முதல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை வரை உழை ப்புதானம், தூய்மைப்பணி இயக்கம் என நடத்தி தலைகீழாக மாற்றிக் காட்டினோம்.மக்கள் பிரச்சனைக்கான இயக்கம்மக்களின் அன்றாட பிரச்சனைகளுக் கான இயக்கம் என்பது தொடர்ந்து தினமும் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. நாமும் எண்ணற்ற வெற்றிகளை கண்டு கொண்டே முன்னேறி வருகிறோம். லஞ்ச, ஊழல்க ளுக்கு எதிராகவும், ரேசன் கடை முறை கேடுகளுக்கு எதிராகவும், பேருந்து, சாலை, தெருவிளக்கு, சாக்கடை, சுடுகாடு, கல்வி நிலையம் கேட்டு என ஏராளமான போராட் டங்களை நடத்தி வெற்றி கண்ட அமைப்பு.. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் கிடைக்க பெரும் போராட்டம் நடத்திய அமைப்பு டிஒய்எப்ஐ.பன்முக நடவடிக்கைகள்வெள்ளமீட்பு, சுனாமி, இரத்ததானம், மருத்துவமுகாம், சுற்றுப்புறச்சூழல், இரவுபாட சாலை, படிப்பகங்கள் உள்ளிட்ட 50 வகை யான சேவை நடவடிக்கைகளை செய்து வருகிறோம், 120 வகையான பன்முக நட வடிக்கைக்கு திட்டமிட்டுள்ளோம், கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசின் சிறந்த இரத்ததான கழக விருதும், 17 மாவட்டங் களில் சிறந்த இரத்ததான கழக விருது பெற்றதோடு தமிழகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பாதுகாத்த அமைப்பு டிஒய்எப்ஐ.வகுப்பு வாதத்திற்கு எதிரான போராட்டம்குமரி மாவட்டம் மண்டைக்காடு துவங்கி திண்டிவனம், இடப்பாடி, கோவை, சென் னை உள்ளிட்ட பல இடங்களில் இந்து மத வெறி அமைப்புகளும் அதற்கு எதிரான சிறு பான்மை மதவெறி அமைப்புகளும் நடத்திய கலவரங்களில் அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டபோது மதவெறிக்கெதிராக தொடர் நடவடிக்கைகளை முன்னின்று சமூக ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை பாது காத்த அமைப்பு டிஒய்எப்ஐ.. காவல்துறையே வேடிக்கை பார்த்தபோது வெள்ளைக் கொடிஏந்தி அமைதிப்பேரணி நடத்தியது டிஒய்எப்ஐ. சாதிக் கலவரங்களுக்கு எதிராகசாதி மோதல்களுக்கு எதிராக தென் தமிழகத்தில் தொடர் போராட்டத்தை நடத்தி மக்கள் ஒற்றுமையை பாதுகாத்த அமைப்பு. இன்று வரை அதற்கு நிரந்தர தீர்வாக வேலை வாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் உருவாக் கப்பட வேண்டும் என தீர்வை சொன்ன அமைப்பு டிஒய்எப்ஐ. இதையே பின்னர் அரசால் அமைக்கப்பட்ட பல நீதியரசர் களின் கமிஷன்களும் வற்புறுத்தின. இன் றும் சாதிய அடையாளத்தை கையில் எடுத்து வட மாவட்டங்களில் வன்னியர் அமைப்பு கள் தலித்களுக்கு எதிராக நடத்திய தாக்கு தல் களுக்கு எதிராக போராடும் அமைப்பு டிஒய்எப்ஐ.

அனைத்து சமூக பிரிவையும் உள்ளடக்கிய டிஒய்எஐ தீண்டாமைக்கெதி ராக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து நேரடி நடவடிக்கையிலும் ஈடு பட்டு வருகிறது.ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கங்கள்அரசியல் சட்டம் வழங்கிய ஜனநாயக உரிமைகளை முழுவதுமாக புறக்கணிக்க ஆட்சியாளர்கள் செய்த போதெல்லாம் நாம் அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி யுள்ளோம். ஊர்வலம். பொதுக்கூட்டம். வேலை நிறுத்தம். போராட்டங்கள் என அனைத்தையும் தடைசெய்தாலும் மீறி நடத்தி வெற்றிகண்ட அமைப்பு டிஒய்எப்ஐ.இப்படி ஏராளமான தளங்களில் முத்திரை பதித்து தமிழக வாலிபர்களின் நம்பிக்கை ஒளியாய் உள்ள டிஒய்எப்ஐ போதைக்கு எதி ராக 4750 கிலோமீட்டர் தூரம் தமிழகத்தில் நடைபயணத்தை நடத்தி அரைக் கோடிக் கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்த அமைப்பு. அப்படிப்பட்ட டிஒய்எப்ஐ யின் 14 வது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறுகிறது. மே 12ம் தேதி தமிழகத்தினை நல்வழிப்படுத்தும் இளைஞர் கூட்டமாய் சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் போராட்டத் தினை வேகப்படுத்தும் கூட்டமாய் நாளை விடியல் நமக்கான விடியலாய் மாற்றும் உன் னத இளைஞர் பேரணி அலைகடல் சங்க மிக்கும் குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் சங்கமிக்க உள்ளது. அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, மானிட சமுத்திரம் நானென்று கூவு என இளைஞர் களின் மாநாடு தமிழக இளைஞர்களை அறைகூவி அழைக்கிறது.கட்டுரையாளர் : வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர்

தீக்கதிர் செய்தி
-------------------------

முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக
சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்



அனைத்து வகைத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சக் கூலி ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை செவ்வாயன்று நடத்தியது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.(செய்தி-3)

குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக நிர்ணயிக்கக் கோரிக்கை : சிஐடியு தலைமையில் மாவட்டங்களில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்




குறைந்தபட்ச கூலி ரூ.10 ஆயிரமாக நிர்ணயித்திடுக!
தமிழகம் முழுவதும் சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 11 -அனைத்து தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்சக் கூலி 10ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவ தும் சிஐடியு சங்கத்தினர் செவ் வாயன்று (ஜூன் 11) ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.விலைவாசி உயர்வுடன் இணைக்கப்பட்ட குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.10 ஆயி ரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஜூலை முதல் வாரத்தில் பிரச் சாரம் சிஐடியு அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்தது.அதனடிப்படையில் தமி ழகத்தில் நடைபெற்ற பிரச் சாரத்தின் நிறைவாக ஜூன் 11 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டம் சார்பில் நுங்கம்பாக்கம், வள்ளு வர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ பேசியது வருமாறு:
மத்திய அரசு கடைபிடித்து வரும் மும்மயக் கொள்கை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது; அது ஏழை மக்களுக்கு எதிராக உள்ளது. கிராமப்புறங்களில் வறுமை பெருகி, விவசாயம் அழிந்து, விவசாயிகள் நகரங்களை நோக்கி வருகின்றனர். மக்களி டையே வாங்கும் சக்தி குறைந் துள்ளது. இதனை சரிசெய்ய வேலைவாய்ப்பை பெருக்கு வதற்கான திட்டங்களை செயல் படுத்த வேண்டும்.மத்திய அரசில் வாரம் ஒரு ஊழல் அம்பலமாகிக் கொண் டிருக்கிறது. பெரு முதலாளி களுக்கு அளிக்கும் சலுகை சாதாரண மக்களுக்கு பயன ளிக்கவில்லை. சாதாரண மக் கள் பயன்பெறும் வகையில் மத் திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.அனைத்து வகை தொழி லாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி 10ஆயிரய்ம ரூபாய் வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். முறைசாரா தொழி லாளர் நிதியத்தை உருவாக்கி, அதற்கு ஆண்டுக்கு 1.50லட்சம் கோடி ரூபாயை ஒதுக்க வேண் டும். ஓய்வூதியத்தையும், வருமா னத்தையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். சட்டப்படி 8 மணி நேர வேலை என்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு இணை யாக ஒப்பந்த தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்,காவல்துறையில் 5ஆயிரம் ரூபாய்க்கும், உள்ளாட்சிகளில் துப்புரவு பணிக்கு மாதம் 2,150 ரூபாய்க்கும் ஆள் எடுப்பதை யும், தொகுப்பூதியம், மதிப்பூதி யம், ஒப்பந்த ஊழியர் போன்ற முறைகளை கைவிட வேண்டும் என நாடு முழுவதும் போராட் டம் நடந்து வருகிறது.சாதி உணர்வைத் தூண்டி தலித், தலித் அல்லாதோர் என மக்களைப் பிரிக்கின்றனர். சாதி, மதத்தின் பெயரால் சுரண் டலுக்கு உள்ளாகி உள்ள மக் கள் கூறுபோடப்படுகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் உரிமைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இன உணர் வைத் தூண்டி ஏழை மக்களை பிரித்து, போராட்ட உணர்வு களை கூறுபோடும் அடை யாள அரசியலை எதிர்த்தும் இந்தப் போராட்டம் நடை பெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.வடசென்னை மாவட்டத் தில் 4 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந் திய துணைச் செயலாளர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட தலைவர் பி.என்.உண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







திருவாரூர், ஜூன் 11 -சிஐடியு சார்பில், செவ் வாயன்று நடைபெற்ற நாடு தழுவிய அளவில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற் றன. மத்திய அரசு அலுவல கங்கள் முன்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டங் களில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியத் தை ரூ. 10 ஆயிரமாக நிர்ண யிக்க வேண்டும்; தேசிய சமூ கப் பாதுகாப்பு நிதியம் ஏற் படுத்த வேண்டும்; நிரந்தரத் தன்மையுள்ள தொழில்க ளில் வேலை செய்யும் ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்; தொழி லாளர் சட்டங்களை அமல் படுத்தத் தவறும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்; அனைத்து முறைசாரா பிரிவு தொழி லாளர்களுக்கும் உத்தரவாத மான பென்சன் வழங்க வேண்டும்; உணவுப் பாது காப்பு சட்டம் என்ற பெய ரில் பொதுவிநியோகத்தை சீரழிக்க முயல்வதைக் கை விட வேண்டும்; அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும்; தொழிலாளர் நலவா ரிய அலுவலகங்களில் உள்ள குறைபாடுகளை களைந்து சலுகைகள் கிடைப்பதை உறுதிப்ப டுத்த வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றவர் கள் முழக்கமிட்டனர்.
திருவாரூர் : திருவாரூரில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.முருகையன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே.திருச்செல் வன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.பழனிவேல், மாவட்டத் துணைத்தலை வர் நா.பாலசுப்பிரமணியன், சிஐடியு-வின் பல்வேறு அரங்க நிர்வாகிகள் ஜி.ராம கிருஷ்ணன், எம்.பி.கே. பாண்டியன், கே.எம்.லிங் கம், எம்.கே.என்.அனிபா, எம்.அசோகன், இரா. மாலதி, ஆர்.சோமசுந்தரம், எஸ்.அம்பலவாணன், டி.கலியமூர்த்தி, ஏ.முத்து வேல், ஜி.கோபாலகிருஷ் ணன், ஆர்.கருணாநிதி, பி.என்.லெனின், ஜி.ரகுபதி, டி.ஜெகதீசன், ஜே.வினோத் கண்ணன், ஏ.ஒன்.மணி, கே.ராமச்சந்திரன், ஆர்.ரவி உட்பட நூற்றுக்கணக்கா னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முன்ன தாக பழைய ரயில்வே நிலை யத்தில் இருந்து தொழிலா ளர் பேரணி புறப்பட்டது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ப.சண் முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் க. செல்வராஜ் மற்றும் நிர்வாகி கள் எம்.ஜியாவுதீன், வி. அரசுமுகம், சி.அடைக்கல சாமி, கே.முகமதலிஜின்னா, செ.பிச்சைமுத்து, சி.மாரிக் கண்ணு, ஜி.நாகராஜ், எஸ். யாசிந், ஏ.முத்தைய உள்ளிட் டோர் பேசினர்.
கரூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம் : கரூரில் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஜி.ஜீவானந்தம் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் என். ராஜீ, எஸ்.சாம்பசிவம், எம். வேலுசாமி, அ.காதர்பாட் ஷா, குமரேசன், எஸ். கிருஷ் ணமூர்த்தி, சரவணன், தண்டபாணி, சக்திவேல், ரங்கராஜ், தங்கவேல் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.






தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றிட வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் பத்தாயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் செவ்வாயன்று ஜுன் 11 ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு நிர்வாகிகள் இ.சங்கர் கே,மனோகர், ஆர்.மணி,ஜோசப், பகத்சிங்தாஸ், பொன்னுரங்கம் ஆகியோர் பேசினர்









1.சேலம்2.மேட்டூர்

சேலம், ஜூன் 12-
முறைசாரா தொழிலாளர் நிதியத்தை உருவாக்கி முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என நிர்ணயித்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்திட வேண்டும். ஓய்வூதியத்தை உத்தரவாதப்படுத்திட வேண்டும். வேலைவாய்பை உருவாக்கிற திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் சேலத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார் தலைமை வகித்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைரமணி, ஜவுளி சங்கச் செயலாளர் பி.ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக, சிஐடியு மாவட்டத் தலைவர் பி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.சி.கோபிகுமார், சி.மயில்வேலன், ஆர்.ஆறுமுகம், ஏ.கோவிந்தன், சி.கோவிந்தன், பாதையோர சங்க தலைவர் எம்.குணசேகரன், விசைத்தறி சங்க செயலாளர் பி.சந்திரன், கைத்தறி சங்க செயலாளர் எஸ்.செல்லபாண்டியன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் 100 பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேட்டூர்மேட்டூரில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சேலம் மாவட்ட பொருளாளர் வீ.இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட உதவி தலைவர் ஆர். வெங்கடபதி, மாவட்ட உதவி செயலாளர் சி.கருப்பண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். நிறைவாக சிங்கராயன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.




அரியலூர், ஜூன் 12 -குறைந்தபட்ச ஊதியத் தை ரூ. 10 ஆயிரமாக நிர்ண யம் செய்ய வேண்டும்; நிரந் தரத் தன்மையுள்ள வேலை களில் பணியாற்றும் ஒப் பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, சிஐ டியு சார்பில் செவ்வாயன்று நாடு தழுவிய ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.அதனொரு பகுதியாக, அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் அஞ்சல் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துரைச்சாமி தலைமை வகித்தார். அயூப் கான் வரவேற்றார். மனோ கரன், மதி, சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் சிற்றம்பலம் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். உழைக் கும் பெண்கள் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆதி லட்சுமி, ராமதாஸ், எல்ஐசி ஊழியர் சங்க செயலாளர் விஜயகுமார், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் மாரிமுத்து, தமுஎகச நிர் வாகி சுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் பாக்கியம், மாணவர் சங்க மாவட்ட அமைப்பாளர் துரை.அரு ணன் ஆகியோர் ஆர்ப்பாட் டத்தை ஆதரித்துப் பேசி னர்.
பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகி செல்லபாண் டியன் நன்றி கூறினார்.ஜெயங்கொண்டம் பூங்கா முன்பு தையல் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.என்.துரை ராஜ் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் சி.உத்திராபதி, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் பி.பத்மாவதி, கைத் தறித் தொழிலாளர் சங்க நிர் வாகிகள் பிஅழகுதுரை, ஏ.ஜி.தங்கராசு, பி.செல்வ ராஜ், வி.சேப்பெருமாள், ஜி.பாபு, ஆர்.கௌரி, எஸ். சம்பத், எஸ்.எம்.செல்வ ராஜ், எம்.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் : பெரம்பலூரில் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டப் பொருளாளர் பி.கிருஷ் ணசாமி தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் ஆர்.அழகர் சாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்ட நிர் வாகிகள் ராஜகுமாரன், கணேசன், அகஸ்டின், எஸ். கே.சரவணன், ரங்கராஜ், வேல்முருகன், மணிமேக லை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி : திருச்சியில் ஜங்சன் காதி கிராப்ட் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.சி.பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ். சம்பத், அழகப்பன், மாவட்ட துணைச்செயலாளர்கள் பக்ரூதீன்பாபு, எஸ்.எம். அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வி.கே.ராஜேந்திரன், ராமர், சிவக்குமார், ஆரோக் கியம், மாவட்ட துணைச் செயலாளர் செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம்
5 மையங்களில் சிஐடியு ஆர்ப்பாட்டம்



சென்னை, ஜூன் 11
-நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்த ஊழி யர்களுக்கும் ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் சென்னையில் 5 மையங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் ஜூன் 11 அன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக வட சென்னை மாவட்டத்தில் 4 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய துணைச் செயலாளர் மாலதி சிட்டி பாபு பேசுகையில், தமிழக அரசு இலவசங்களை வழங்கு வதை விட, தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்க வேண்டும். விலை வாசி உயர்வு நடுத்தர மக்க ளின் வாழ்வாதாரத்தை கேள் விக்குறியாக்கி வருகிறது என்று கூறினார்.மூலதனத்தால் மட்டும் தொழில் வளர்ச்சி ஏற்படாது. தொழிலாளர்களின் உழைப்பே பொருளா தாரத்தை மேம்படுத்தும். தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதிக்கச் செய்யும் அரசை, ஆட்டம் காணச் செய்ய சிஐடியு அடுத்தக்கட்ட போராட்ட வியூகத்தை வகுத்து வரு கிறது என்றும் அவர் கூறி னார்.இந்தப் போராட்டத் தில் மாவட்டத் தலைவர் பி.என்.உண்ணி தலைமை தாங்கினார். பா.கருணா நிதி (ஆட்டோ), சி.திரு வேட்டை (சுமைப்பணி), எம்.பகவதி, கவிமணி (உழைக்கும் பெண்கள்) உள்ளிட்டோர் பேசினர்.திருவொற்றியூர்: அஜாக்ஸ் பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தங்க சாமி (அமைப்புசாரா) தலைமை தாங்கினார். வீர அருண் (மீன்பிடி), வெங் கட்டயா (மின் ஊழியர் மத்திய அமைப்பு), செங் குட்டுவன் (போக்குவரத்து), அம்சவேணி (ஆட்டோ) ஆகியோர் பேசினர்.மணலி: சிஐடியு பகுதிச் செயலாளர் சிட்டி பாபு தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ஆர். ஜெயராமன், செல்வராஜ், இரா.ராஜவர்மன் உள்பட பலர் பேசினர்.



ஆவடி: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலை வர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். சி.சடையன், ராமமூர்த்தி (அமைப்புசாரா), ஜெய பாலன் (கட்டுமானம்), தமி ழரசி (தையல்) ஆகியோர் பேசினர்.அம்பத்தூர் உழவர் சந்தை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பால் சாமி தலைமை தாங்கி னார். லெனின் சுந்தர் (சிஐ டியு), ஏ.ராயப்பன் (மோட் டார் வாகனம்), ரவிச்சந்தி ரன் (மின் ஊழியர் மத்திய அமைப்பு) உள்ளிட்டோர் பேசினர்.தென்சென்னைதென்சென்னை மாவட் டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.முனுசாமி தலைமை தாங்கினார். மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம் எல்ஏ, மாநிலக்குழு உறுப் பினர் இ.பொன்முடி, மாவட்ட பொருளாளர் பா.பாலகிருஷ்ணன், நிர் வாகிகள் வி.தாமஸ் (முறை சாரா), எம்.குமார் (சுமைப் பணி), ப.சுந்தரம் (சலவை), பி.நாகேந்திரன் (ஆட் டோ), எம்.பாண்டியன், இ.மூர்த்தி (கட்டுமானம்) உள்ளிட்டோர் பேசினர்.காஞ்சிபுரம்: காஞ்சி புரம் மாவட்டத்தில் மது ராந்தகம், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய 3 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.



மதுராந்தகத்தில் தபால் நிலையம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.மாசிலாமணி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு நிர்வாகிகள் எம். ஆர் சங்கர், இ.கோவலன், இளங்கோவன், சிபிஎம் மதுராந்தகம் பகுதி செய லாளர் கே.வாசுதேவன் ஆகியோர் பேசினர். ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ் பேசி னார். முன்னதாக மதுராந்த கம் பேருந்து நிலையத்திலி ருந்து தபால் நிலையம் வரை ஊர்வலம் நடை பெற்றது. செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கே.வேலன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு நிர்வாகிகள் ஜி. கண்ணன், என்.பால்ராஜ், எ.புருசோத்தமன், கே. சேஷாத்திரி, என்.அன்பு உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் பேசினார்.காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத்தலை வர் எ.வாசுதேவன் தலைமை தாங்கினார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன், மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதர் எம். ஆறுமுகம், ஜி.வசந்தா உட் பட பலர் பேசினர். ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் சிங்கார வேலு பேசினார்.


திருவள்ளூர்: திரு வள்ளுர் மாவட்டத்தில் 2இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிஐ டியு மாநில துணை பொதுச் செயலாளர் வி. குமார், மாவட்ட பொருளாளர் ஆர். பூபாலன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா ளர் எம். சந்திரசேகரன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் சி. நாகேஷ்ராவ், கைத்தறி நெசவு தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. செல்வ ராஜ் மாவட்ட குழு உறுப் பினர் சீனிவாசன் உட்பட பலர் பேசினர். சிஐடியு நிர் வாகி கே. அர்ஜூனன் நன்றி கூறினார்.திருவள்ளூர் அருகில் உள்ள மணவாளன் நகரில் நடைபெற்ற ஆர்ப் பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் பால குமார் தலைமை தாங் கினார். இதில் சிஐடியு மாவட்டச்செயலாளர் கே. ராஜேந்திரன், வடசென்னை மாவட்டச்செயலாளர் ஏ.ஜி. காசிநாதன் உட்பட பலர் பேசினர்.


நன்றி
தீக்கதிர்