தீக்கதிர் செய்தி
-------------------------
அரசு ஊழியர்களுக்கு இருந்து வந்த ஒரு முக்கிய ஆதாரம், 60 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வாழ்க் கையைச் சந்திக்க ஓய்வூதியம் உண்டு என்பதுதான். அந்த நம்பிக்கையைக் குழிதோண்டிப் புதைக்கிற கைங்கரியத் தில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. ஊழியர்களைப் பாதுகாப்பற்றவர்களாக் குகிற பத்தாம்பசலித்தனமான கொள் கைக்கு ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது! பொதுத் துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர் கள் சுமார் 40 லட்சம் பேரும், 28 மாநில அரசுகளின் 60 லட்சம் ஊழியர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார் கள் - அவர்களது ஒப்புதல் இல்லாமலே! நாடு தழுவிய அளவில் ஊழியர்களி டையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருக்கிற இத்திட்டத்தை எதிர்த்து பல கட்டப் போராட்ட இயக்கங்கள் நடந்து வரு கின்றன. இங்கே ‘தீக்கதிர்’ வினாக்க ளுக்கு மத்திய அரசு ஊழியர் மகா சம் மேளன பொதுச் செயலாளர் எம். துரை பாண்டியன், தட்சிண் ரயில்வே எம்ப்ளா யீஸ் யூனியன் செயல் தலைவர் ஆர். இளங் கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன் மூவரும் விளக்கமளிக்கின்றனர்.
ஓய்வூதியம் வழங்குவது எப்போது தொடங்கியது?
துரைபாண்டியன்: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பொதுப்பணி, வருவாய், காவல்துறை போன்ற சில துறைகளுக்கு மட்டுமேயென ஓய்வூதியம் கொண்டு வரப்பட்டுவிட்டது. 1871ல் அதற்கான சட்டத்தில் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன. ஆனாலும் இது ஒரு சமூகப் பாதுகாப்புக் கொள்கையாகவே உருவா னது 1917ல் நடந்த சோவியத் புரட்சிக்கு பிறகுதான். லெனின் தலைமையிலான சோசலிச அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் ஆகியோரின் வருங்கால பாதுகாப் புக்காக என ஓய்வூதிய சட்டத்தை அறி வித்தது.
இதை கண்டு உலக முதலாளித்துவ சக்திகளுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டது. இத்தகைய சமூக பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்யாவிட்டால் அது தங்களு டைய சுரண்டல் ஆதிக்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும், புரட்சி வெடிக்கும் என்று அஞ்சிய முதலாளித்துவ அரசுகள் தங்களது நாடுகளிலும் ஓய்வூதியத் திட் டங்களைக் கொண்டுவந்தன.
இந்தியாவில் 1950ல் மத்திய- மாநில அரசுத்துறைகளில் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1957ல் அது ரயில்வே ஊழியர்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. 1964ல் அவர்களது குடும்பத்தின ருக்கும் பயன் கிடைக்க - அதாவது ஊழியர் இறந்துவிட்டால் அவரது குடும் பத்தினருக்கு குடும்ப ஓய்வூதிய பலன் கிடைக்க - வழி செய்யப்பட்டது.
திட்டத்தை சீர்குலைக்கும் முடிவு எப்போது எடுக்கப்பட்டது?
சீனிவாசன்: வாஜ்பாய் தலைமை யில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே இதில் கை வைக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது.
துரைபாண்டியன்: 2003ல் அறிமுக நிலையிலேயே இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவாக எதிர்த்து நின்று அன்றைய சட்டமுன் வரைவு தாக்கல் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தினர். 2005ல் மன்மோகன் சிங் அரசின் முதல் தவணை ஆட்சி இந்தச் சட்டத்தை கொண்டுவர முயன் றது. இடதுசாரிகள் வலுவான நிலையில் இருந்த வரையில் இந்த சட்டத்தை நிறை வேற்ற முடியவில்லை. இரண்டாம் தவணை ஐமுகூட்டணி அரசு இந்தச் சட்டத்தை மறுபடியும், பாஜக ஆதரவுடன் நிறை வேற்ற முயல்கிறது.
சீனிவாசன்: புதிய திட்டத்தின் கீழ் ஊழி யர்களிடமிருந்து மாதாமாதம் பணம் பிடிப்பது என்பதை ஏற்கெனவே ஆரம் பித்து விட்டார்கள். ஏற்கெனவே இருந்து வரும் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வராமலே, அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் முதலமைச்சர் மாநாட்டைக் கூட்டி ஒப்புதல் பெற முயன்றார். மாநி லங்களைப் பொறுத்தவரையில் முதலில் இதைச் செயல்படுத்தியது தமிழ்நாடு தான். மேற்குவங்கம், கேரளம், திரிபுரா மூன்று அரசுகளும் இந்தச் சட்டத்தை தங் களது மாநிலங்களில் செயல்படுத்தப் போவதில்லை என்று உறுதிபட அறி வித்தன.
ஓய்வூதியத்திற்கு நீதிமன்றங் களின் பாதுகாப்பு இருக்கிறதா?
துரைபாண்டியன்: 1983ல் நகரா-எதிர்-மத்திய அரசு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “ஓய்வூதியம் என்பது ஊழியர்களுக்கு அரசு போடுகிற பிச்சை அல்ல. அது அவர்களுக்குக் கொடுபடாத ஊதியம். அது அவர்களது சட்டப்பூர்வ உரிமை,” என்று தெளிவுபடுத்தியது. ‘பலன் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம்’ என்பதே பழைய சட்டம். இதன் கீழ் ஒரு ஊழியர் கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 50 விழுக்காடு அவருக்கு ஓய்வூதியமாக கிடைத்தது. இப்போது, ‘வரையறுக்கப் பட்ட பங்களிப்பு ஓய்வூதியம்’ என்று பெயரை மாற்றியிருக்கிறார்கள். அதாவது ஊதியத்திலிருந்து 10 விழுக்காடு பிடித் தம் செய்யப்படும். ஊழியர்களிட மிருந்து எடுத்துக் கொள்ளப்படுவது பற்றித்தான் புதிய சட்டம் பேசுகிறது, அவர்களுக்கு அரசிடமிருந்து என்ன கிடைக்கும் என்பதற்கு அதில் எந்த உறுதியும் இல்லை.
இளங்கோவன்: பொது வைப்பு நிதி என்பதும் கிடையாது. ஊழியர் ஊதியத்தி லிருந்து 10 விழுக்காடு, அரசின் பங்காக 10 விழுக்காடு என இந்த நிதி சேமிக் கப்படும். 60 வயதில் ஒரு ஊழியர் ஓய்வு பெறுகிறபோது, அவர் கையில் மொத்த சேமிப்பிலிருந்து 60 விழுக்காடு மட்டுமே தரப்படும். 40 விழுக்காடு ‘அன்யூட்டி பிளான்’ என்ற திட்டத்தில் போடப்பட்டு, அதன் அடிப் படையில் ஓய்வூதியம் வழங்கப்படும்.
துரைபாண்டியன்: ஓய்வூதிய நிதியை கையாளுவதற்கென்று சில நிறுவனங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஊழியர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு நிறுவனத்தின் திட்டத்தில் சேர்ந்தாக வேண்டும்.
சீனிவாசன்: இந்த நிறுவனம் குறிப் பிட்ட ஆண்டில் லாபகரமாக செயல்பட்டி ருந்தால் அதற்கு கிடைக்கும் லாபத்தி லிருந்து ஊழியர்களுக்கு பங்கு கிடைக் கும். நிறுவனத்திற்கு நட்டம் என்றால் ஊழியர்களுக்கு பட்டை நாமம் தான்.
இளங்கோவன்: தனியார் நிறுவனங் களிடம் ஒப்படைக்கப்படுகிறபோது, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அபாயங் கள் இருக்கும் என்பதால், சேமிப்புக்கான ஈவுத்தொகை வருவதற்கு உத்தரவாதம் இல்லை. ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையாவது வருமா என் றால் அதற்கும் உத்தரவாதம் இல்லை.
சீனிவாசன்: பொதுவாகவே அரசு ஊழியர்கள் பொதுமக்களிடமிருந்து பிரித்து வைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களது சொந்த அரசியல் கருத்துகளை பேச முடியாது. வேறு எவ்விதமான தொழி லிலும் ஈடுபட முடியாது. ஆகவேதான் ஓய்வூதியம் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வந்தது. அரசாணைக்குப் பிறகு மத்திய-மாநில ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட ஓய்வூதிய நிதி மட் டுமே 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசிடம் இருக்கிறது. அதை அப்படியே தனியாரிடம் தூக்கிக் கொடுக் கிற ஏற்பாடுதான் இது.
துரைபாண்டியன்: அந்த நிறுவனங் கள் தங்களிடம் ஒப்படைக்கப்படுகிற கோடிக்கணக்கான ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும். அந்நிய நிறுவனங்களில் முதலீடு செய்ய வும் அனுமதி உண்டு. குறிப்பிட்ட ஆண் டில் நல்ல லாபம் கிடைத்திருந்தால் அதி லிருந்து ஊழியர்களுக்கு ஈவு கிடைக்கும். பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தால் ஊழி யர்களுக்கு எதுவும் கிடைக்காது. இப்படி தனியார் நிறுவனங்கள் அரசு ஊழியர் களின் வாழ்க்கைப் பணத்தை எடுத்து பங்கு சந்தையில் சூதாட்டம் நடத்துவதற் குப் பெயர்தான் புதிய ஓய்வூதிய திட்டம்.
இளங்கோவன்: கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக் கிற கதைதான்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசாங்கத்தின் செலவுகள் அதிக ரிப்பதாகக் கூறப்படுகிறதே...?
இளங்கோவன்: அது ஒரு ஏமாற்று வாதம். 1960-61ல் நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 2.7 விழுக்காடு ஓய் வூதிய நிதிக்காகச் சென்றது. இன்று வெறும் 0.53 விழுக்காடு மட்டும்தான். மொத்த ஓய்வூதியச் செலவில் 7 விழுக்காடு அஞ்சல் ஊழியர்களுக்குச் செல்கிறது; 22 விழுக்காடு ரயில்வே தொழிலாளர்களுக் குச் செல்கிறது - ஆனால் ரயில்வே பட்ஜெட் என்று தனியாகத் தயாரிக்கப் படுகிறது, அதிலேயே அவர்களுக்கான ஓய்வூதியச் செலவும் சேர்க்கப்பட்டுவிடு கிறது; 16 விழுக்காடு வரையில் இதர துறைகளின் ஊழியர்களுக்குச் செல் கிறது. பாதுகாப்புத் துறை ஊழியர்களுக் குத்தான் மொத்த ஓய்வூதியச் செலவில் 54.7 விழுக்காடு செல்கிறது. அரசின் உண்மையான நோக்கம் செலவைக் குறைப்பதுதான் என்றால் பாதுகாப்புத் துறைக்கான நிதியில்தான் கைவைக்க வேண்டும். அப்படிச்செய்தால் ராணுவத் தில் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடும் என் பதால்தான், அரசு அவர்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித் திருக்கிறது. இவர்களது ஓய்வூதியத்தை மத்திய அரசு தனது ஒருங்கிணைந்த நிதியிலிருந்தே தரும். எனவே அரசின் செலவினம் குறையப்போவதில்லை. மாறாக வரும் ஆண்டுகளில் படிப்படி யாக அரசின் செலவு அதிகரிக்கவே செய் யும் என்று புள்ளிவிவர வல்லுநர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
புதிய திட்டத்தின் நோக்கம் அனை வருக்கும் ஓய்வூதியம் கிடைக்கச் செய்வதுதான் என்று முன்பு நிதி யமைச்சராக இருந்த ப. சிதம்பரம் கூறினாரே...
சீனிவாசன்: பழைய சட்டத்தில், ஊதியத்தில் 50 விழுக்காடு ஓய்வூதியம் என்று இருந்தது. பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய பாதுகாப்புகளும் இருந்தன. புதிய சட்டத்தில் இந்த மூன் றுமே இல்லை. இப்படிப்பட்ட உத்தரவாத மற்ற நிலையிலேயே, அரசு ஊழியர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக இந்தச் சட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார் கள். மாநில அரசுப்பணிகளில் 2003 ஏப் ரல் 1 முதல் புதிதாக வேலைக்குச் சேர்ந் தவர்களுக்கும், மத்திய அரசுப் பணி களில் 2004 ஏப்ரல் 1 முதல் புதிதாகச் சேர்ந்தவர்களுக்கும் இது செயல்படுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத் தில் அந்தத் தேதியிலிருந்து அரசுப்பணி யில் இணைந்தவர்களில் காவல்துறை யினர் 3,400 பேர் இறந்துவிட்டார்கள். பலர் வெளியேறிவிட்டார்கள். ஆனால் அவர் களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்பித்தரப்படவில்லை. அதி காரிகளிடம் கேட்டால், பிடித்தம் செய் வதற்குத்தான் அரசாணை இருக்கிறது, திருப்பித் தருவதற்கு ஆணை எதுவும் கிடையாது என்கிறார்கள். தனியார் நிறு வனங்களைப் பொறுத்தவரையில் அவற் றின் ஊழியர்கள் விருப்ப அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்று உள்ளது. பிறகு எப்படி இதனால் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நம்புவது?
இது அரசமைப்பு சாசனத்துக்கே விரோதமானது என்று குற்றம்சாட் டப்படுகிறதே?
இளங்கோவன்: ஆம், பழைய ஓய் வூதிய விதிகள் நாட்டின் குடியரசுத்தலை வர் கையெழுத்திட்டு, அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன. அரசமைப்பு சாசனத் தில் இருப்பதைத் திருத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்படாமல், குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட விதியை ஒரு சுற்றறிக்கை மூலம் மாற்றுவது விரோதச் செயல்தான்.
சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஓய் வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார் கள். சட்டப்படி ஏற்படுத்தப்படாத இந்த அமைப்பு எல்ஐசி பென்சன் ஃபண்டு, எஸ்பிஐ பென்சன் ஃபண்டு, யுடிஐ சொல் யூசன்ஸ் என்ற பெயரில் ஏற்படுத்தி யிருக்கிற ஓய்வூதிய மேலாளர் நிறுவனங் கள் மட்டும் எப்படி சட்டப்படி செல்லு படியாகும்?
துரைபாண்டியன்: எல்ஐசி, எஸ்பிஐ, யுடிஐ என்பதைப் பார்த்து இவை ஏதோ பொதுத்துறை நிறுவனங்கள், இவற்றிடம் ஒப்படைக்கப்படுகிற நிதி பாதுகாப் பானதாக இருக்கும் என்று எண்ணி விடக்கூடாது. இவை தனியார் பங்குக் கூட்டாளிகளைக் கொண்ட நிறுவனங் கள்தான்.
இளங்கோவன்: அரசமைப்பு சாசனம் 31வது சட்டப்பிரிவின்படி இந்த ஓய்வூதிய நிதி ஒவ்வொரு ஊழியரின் சொத்து. இதை எடுப்பதென்றால், சொத்தின் உடைமை யாளராகிய ஊழியரிடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும். ஊழியருக்குக் கொடுத்தாக வேண்டிய ஓய்வூதியப் பணத்தை, எந்த வொரு காரணத்திற்காகவும் நீதிமன்றமே கூட ஜப்தி செய்ய முடியாது!
புதிய சட்டத்தின் நோக்கம்தான் என்ன?
துரைப்பாண்டியன்: எல்லாம் தனி யார்மயம் என்பதே நோக்கம். முதலாளி கள் பங்குச்சந்தை சூதாட்டத்தில் பணயம் வைக்க ஊழியர்களின் பணத்தை வாரி யிறைப்பதுதான் நோக்கம்.
சீனிவாசன்: ஊழியர்களின் ஓய்வூ திய நிதியைத் தனியாரிடம் ஒப்படைக்கிற பரிசோதனையைச் செய்துபார்த்த நாடு கள் எல்லாம் தோல்வியடைந்து, பழைய நடைமுறைக்கு மாறிவிட்டன.
இளங்கோவன்: புதிய திட்டத்தால் ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதாயம் வரும் என்கிறார்கள். கூடுதல் ஆதாயம் வரும் என்றால் அதை அரசாங்கமே வைத்துக்கொள்ளட்டும், எங்களுக்கு பழைய பலன்களே போதும் என்கிறோம்...
பொதுசேவைகளுக்கான நிதி மத்திய அரசிடம் பல லட்சம் கோடி குவிந்திருக் கிறது. இது பெரும் வர்த்தகச் சூதாடி களின் கண்களை உறுத்துகிறது, அவர் களுக்குச் சேவகம் செய்யும் ஆட்சியாளர் களின் கையில் நமைச்சலை ஏற்படுத்து கிறது. உறுத்தலுக்கும் நமைச்சலுக்கும் ஒரு நிவாரணியாக இந்தப் புதிய ஓய் வூதியச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. தற்போதைய ஆணைகளின் படி, 2003, 2004க்குப் பின் நியமிக்கப்பட்டவர்கள் தான் இதற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தாலும், சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதற்கு முன்பே நியமிக்கப்பட்ட ஊழியர்களுடை ஓய்வூதிய நிதியும் வழிப்பறி செய்யப்படும் நிலை ஏற்படும். உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் இந்த வஞ்சகத் திற்கு முடிவுகட்டும்.
-அ.குமரேசன்