Tuesday, February 1, 2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

(நன்றி !!!தீக்க‌திர்)


-பி.அபிமன்யு

இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல்-இல் சங்க அங்கீகாரத் திற்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி முதல் தேதியன்று நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல், இதுவரை நான்குமுறை நடந் துள்ளது. 2002ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது தேர்தல் நீங்கலாக, மற்ற மூன்று தேர்தல்களிலும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வாகை சூடி “ஹாட்ரிக்” அடித்துள்ளது. 2,47,000 ஊழியர்கள் வாக் களித்த 2009 தேர்தலில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கு எதிராக ஏஐடியுசி சார்புடைய என்எப்டிஇ சங்கமும் ஐஎன் டியுசியில் இணைந்துள்ள எப்என்டிஓ சங்கமும் இணைந்து ஒரு ‘மெகா’ கூட் டணி அமைத்துப் போட்டியிட்டன. இருப் பினும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் மகத் தான வெற்றி பெற்றது.

5வது சங்க அங்கீகாரத் தேர்தல்

நடக்கவுள்ள 5வது சங்க அங்கீகாரத் தேர்தலில் 2, 29,906 ஊழியர்கள் வாக்க ளிக்க உள்ளனர். மாதா மாதம் சந்தா கொடுக்கும் 1,24,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம், 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இருப்பினும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மெத்தனமாக இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், நாக் பூரில் விரிவடைந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தை நடத்தி அதில் தனது தேர் தல் பணிகளை திட்டமிட்டது. இதன்படி கடந்த மூன்று மாதங்களாக நாடு முழு வதும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இத்தேர்தலில் தங்க ளது தோல்வி உறுதியென புரிந்து கொண்ட என்எப்டிஇ மற்றும் எப்என்டிஓ சங்கங் கள், தேர்தலுக்குத் தடை வாங்க நீதிமன் றங்களுக்குப் படையெடுத்தன. இதிலும் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.

2001ம் ஆண்டில் ஒரு சிறிய சங்கமாக ஆரம்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இன்று ஒரு ஆலமரமாக வளர்ந் துள்ளதன் ரகசியமென்ன? அது வேறொன் றுமில்லை. மத்திய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகளை எதிர்த்தும் பிஎஸ் என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்கவும் எண்ணற்ற இயக்கங்களை இச்சங்கம் நடத்தி வந்துள்ளது. இவ்வியக்கங்களில் தொடர்ச்சியாக ஊழியர்களை அணி திரட்டி வந்ததன் மூலமே பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இந்த மகத்தான வளர்ச் சியைப் பெற்றுள்ளது.

மத்திய அரசின் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக

மத்திய அரசின் மக்கள் விரோதக் தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதி ராக நடைபெற்ற வேலைநிறுத்தங்களில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் உறுதியா கக் கலந்துகொண்டு வந்துள்ளது. ஆரம் பத்தில் இப்போராட்டங்களில் பிஎஸ்என் எல் ஊழியர் சங்கம் தன்னந்தனியாகவே கலந்துகொண்டது. இருப்பினும் அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளுக்கு எதி ரான தனது பிரச்சாரத்தை ஊழியர்கள் மத்தியில் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருந்தது. இதன்மூலமாக இப்போராட் டங்களில் கலந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை மற்ற சங்கங்களுக்கு ஏற் படுத்தியது. எனவே கடந்த ஆண்டு செப் டம்பர் 7ம் தேதி நடைபெற்ற வேலை நிறுத்தம், பிஎஸ்என்எல்-இல் மகத்தான வெற்றியடைந்தது. பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்துடன், என்எப்டிஇ, எப்என்டிஒ சங்கங்களும், எஸ்என்இஏ எனப்படும் அதிகாரிகளின் சங்கமும் இப்போராட்டத் தில் கலந்துகொண்டன. வருங்காலங் களில் இத்தகைய போராட்டங்களை மேலும் வலுவாக நடத்திட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் முயற்சி செய்யும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்க..

கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கீ கரிக்கப்பட்ட சங்கமாக செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாது காப் பதற்கான போராட்டங்களில் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங் கங்களையும் ஒன்றிணைத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பங்கு மார்க்கெட்டில் பதிவு செய்திடவும், பங்கு விற்பனையைத் துவக்கிடவும் கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு பலமுறை முயற்சி செய்துள்ளது. எனினும் ஊழியர் கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களின் காரணமாக அரசின் எண்ணம் ஈடேறவில்லை.

அதே சமயம் அரசின் தவறான கொள் கை முடிவுகளின் காரணமாக, பிஎஸ்என் எல் இன்று நஷ்டத்தில் செயல்படும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளது. 2004-05ஆம் நிதியாண்டில் ரூ.10,000 கோடி நிகர லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல், கடந்த நிதியாண் டில் ரூ.1800 கோடி நஷ்டமடைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்ந்த பிஎஸ்என்எல், இன்று நான்காவது இடத்துக்குத் தள்ளப் பட்டுள்ளது. மொபைல் சேவையில் 11 சதவீத இணைப்புகள் (ஆயசமநவ ளுாயசந) மட்டுமே பிஎஸ்என்எல் வசம் உள்ளன. இந்த பின்னடைவிற்குக் காரணம் என்ன?

அசுரவேகத்தில் வளர்ந்து வரும் மொபைல் சேவை விரிவாக்கத்தில் பிஎஸ்என்எல் மிகவும் பின்தங்கியுள்ளது. சந்தையின் வளர்ச்சியைப் பயன்படுத்தி வளர்வதற்கான வகையில் பிஎஸ்என் எல்-இன் நெட்வொர்க் விரிவாக்கம் நடை பெறவில்லை. இதற்குக்காரணம், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பிஎஸ்என் எல்க்கான கருவிகள் சப்ளை நின்றுபோ னதே. கருவிகளைக் கொள்முதல் செய்வ தற்கு பிஎஸ்என்எல் வெளியிட்ட டெண் டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரத்து செய் யப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் -ஐ திட்ட மிட்டு முடக்குவதற்கான சதியின் ஒரு பகுதியாகவே இப்படி டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன என்பது தொழிற்சங்கங் களின் குற்றச்சாட்டு. பிஎஸ்என்எல்-க்கு கருவிகள் கொள்முதல் தடுக்கப்பட் டதால் பயனடைந்தது தனியார் நிறுவனங் களே! மொபைல் சந்தை வளர்ச்சியினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுனங்கள், தங்களது வாடிக் கையாளர்களின் எண்ணிக்கையைக் கோடிக்கணக்கில் பெருக்கிக்கொண்டன. எனவே, தனியார் நிறுனங்களின் வளர்ச் சிக்காகவே பிஎஸ்என்எல்-இல் கருவி கள் சப்ளை தடுக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது.

சமீபத்தில் வெளியான நீரா ராடியா வின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான டேப்புகள் பல விஷயங் களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந் துள்ளன. தனியார் நிறுவனங்களின் தரக ரான இந்த பெண்மணி முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கும் தொலைத் தொடர்புத்துறையின் உயர் அதிகாரிக ளுக்கும் மிகவும் நெருக்கமானவர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனங்களின் ஆதாயத்துக்காக பிஎஸ் என்எல் நிறுவனம் திட்டமிட்டு முடக்கப் பட்டுள்ளது என்ற நமது குற்றச்சாட்டும் உறுதிப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட போராட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்கு வதற்கான சதியை முறியடித்திட, குறிப் பாக கருவிகள் கொள்முதலை உத்தர வாதப்படுத்திட பல ஒன்றுபட்ட போராட் டங்களுக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் முன்கையெடுத்துள்ளது. அதிகாரி கள், ஊழியர்கள் ஆகிய அனைவரின் சங் கங்களையும் ஒன்றிணைத்துப் போராடிய தன் விளைவாகத்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி துவங் கிய காலவரையற்ற வேலைநிறுத்தத் தையும், டிசம்பரில் நடைபெற்ற இரண்டு நாள் வேலை நிறுத்தத்தையும் குறிப்பிட் டுச் சொல்ல முடியும். பிஎஸ்என்எல் நிறு வனத்தின் 30 சதவீத பங்குகளை தனி யாருக்கு விற்பது மற்றும் ஒரு லட்சம் ஊழி யர்களை ஆட்குறைப்பு செய்வது என்ற சாம்பிட்ரோடா கமிட்டியின் சிபாரிசுகள், ஒன்றுபட்ட போராட்டங்களின் காரண மாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பிஎஸ்என்எல்-இன் பாதுகாவலன்

அனைத்து சங்கங்களையும் ஒன்றி ணைத்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்கவும், பலப்படுத்தவும் போராடி வரும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தைத் தங்களது பாதுகாவலனாகவே ஊழியர்கள் பார்க்கின்றனர். மிகச்சிறந்த ஊதிய உடன்பாட்டையும் பெரியஅள வில் ஊழியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள புதிய பதவி உயர்வு திட்டத்தை யும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சாதித் துள்ளது. இதனால் சங்கத்தின் மதிப்பும் மரியாதையும் ஊழியர்களிடையே அதிக ரித்துள்ளது. தன்னலமற்ற, போர்க்குண மிக்க, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தலைமையே தங்களது எதிர்காலத் தையும் நிறுவனத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வல்லது என்பதில் ஊழியர் கள் தெளிவாக உள்ளனர். எனவே பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தேர்தலில் வெல்லப்போவது உறுதி.

கட்டுரையாளர், பொதுச்செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.



(நன்றி !!!தீக்க‌திர்)