16/11/2010 தீக்கதிர்செய்தி
தில்லி பேரணி எச்சரிக்கை
புதுதில்லி, நவ. 15-
பிஎஸ்என்எல் நிறுவனத் தைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஒருபோதும் அனுமதி யோம் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலா ளர் அபிமன்யு கூறினார்.
பிஎஸ்என்எல் நிறுவனத் தில் உள்ள பிஎஸ்என்எல் எம்ப் ளாயீஸ் யூனியன் (நம்பூதிரி), என்எப்டிஇ, எப்என்டிஓ, தொமுச உட்பட அனைத்து ஊழியர் சங்கங்களும் அதிகாரி கள் சங்கமும் இணைந்துள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் தலைநகர் தில்லியில் மாபெரும் பேரணி நடைபெற் றது. பேரணி புதுதில்லி, ஜன்பத் சாலையில் உள்ள பிஎஸ் என்எல் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, நாடாளுமன்ற வீதி நோக்கி வந்தது. அங்கு நடை பெற்ற கூட்டத்தில் பேரணி -ஆர்ப்பாட்டத்தை வரவேற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனர் விஏஎன். நம்பூதிரி உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடா ளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் (நம்பூ திரி) சங்கத்தின் பொதுச் செய லாளர் அபிமன்யு உட்பட அனைத்து சங்கங்களின் தலை வர்களும் உரையாற்றினர். பேரணியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருவதைக் கண்டித் தும், பிஎஸ்என்எல் நிறுவனத் தைப் பாதுகாத்திடவும் வரும் டிசம்பர் 1 முதல் 3 தேதி வரை 72 மணி நேரம் வேலை நிறுத் தத்தில் ஈடுபடப் போவ தாக அறிவிக்கப்பட்டது.
பேரணியில் உரையாற்றிய அபிமன்யு கூறியதாவது:
இந்தப் பேரணி பிஎஸ் என்எல் நிறுவனத்தைப் பாது காப்பதற்காகவும், வலுப்படுத் துவதற்காகவும் ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டுள்ள போராட் டத்தின் ஒரு பகுதியேயாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிரான மத்திய அரசின் தவ றான கொள்கைகள்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரண மாகும். கடந்த ஐந்தாண்டு களாகவே அரசாங்கம், புதிய உபகரணங்களை வாங்குவதற் கான அனுமதியை பிஎஸ் என்எல் நிறுவனத்திற்குத் தர மறுத்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் 45 மில்லியன் லைன் கள் பெற்றிட டெண்டர் வெளி யிட்டிருந்தோம். அதனை அர சாங்கம் ரத்து செய்தது. பின்னர் 93 மில்லியன் லைன்கள் பெற டெண்டர் விட்டிருந்தோம். அதனையும் அரசாங்கம் ரத்து செய்தது. இப்போது சமீபத்தில் 5.5 மில்லியன் லைன்களுக்கான டெண்டரும் விட்டிருந்தோம். இதனையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அதே சமயத்தில் தனியார் கம்பெனிகள் ஒவ் வோராண்டும் புதிதாக உபகர ணங்கள் மற்றும் கருவிகள் வாங்கவும் புதிய தொழில்நுட் பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்து வருகிறது. இதுவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரண மாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கிராமங்களில் சேவை செய் வதற்காக தனியார் நிறுவனங் களிடமிருந்து இழப்பீடு பெற்று வந்தது. ஒவ்வோ ராண்டும் ஆறாயிரம் ரூபாய், ஏழாயிரம் ரூபாய் என பெற்று வந்தது. இதனைத் தரவேண் டாம் என்று தனியார் நிறுவ னங்களுக்கு டிராய் அமைப்பு மூலம் அரசு கூறிவிட்டது. இத் தகைய பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு எதிரான அரசின் கொள் கையை அனுமதிக்க முடியாது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆர்டர்களைப் பெற ஒரு டெண்டரை இறுதிப்படுத்தியி ருந்தது. ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனு மதி தரவில்லை. சர்வதேச எல்லையில் அப்பணிகள் நடப் பதால் அதற்கு அனுமதி தரப் படவில்லை என்று காரணம் கூறியிருந்தது. ஆனால் அதே சீன நிறுவனமானது ரிலை யன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந் தம் செய்து கொள்ள அனுமதி தரப்பட்டிருக்கிறது. தனியா ருக்கு என்றால் ஒரு கொள்கை, பிஎஸ்என்எல்க்கு என்றால் வேறொரு கொள்கையா? பிஎஸ்என்எல்-க்கு எதிரான அரசின் இத்தகைய கொள் கைகளால்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வரு கிறது.
அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனப் பங்குகளில் 35 விழுக்காட்டைத் தனியாருக்குத் தந்திட முடிவு செய்துள்ளது. மேலும் ஒரு லட்சம் ஊழியர்க ளையும் வீட்டிற்கு அனுப்பிட திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக மேற் கொள்ளப்படும் நடவடிக்கை களே.
இதனை நாங்கள் அனுமதி யோம். இதனை எதிர்த்துத்தான் வரும் டிசம்பர் 1,2,3 தேதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழி யர்களும், அதிகாரிகளும் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம்.
இவ்வாறு அபிமன்யு கூறி னார். (ந.நி.)