ஆர்ப்பாட்டம்
தீக்கதிர் செய்தி
ரிலயன்ஸ் ஜியோ தனியார் நிறுவனத்துக்கு சலுகைகள்
ரத்து செய்ய வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரத்து செய்ய வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, மார்ச் 9-
தொலை தொடர்பு துறையில் ரிலயன்ஸ் ஜியோ தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.பிஎஸ்என்எல் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அரசின் கொள்கையை உடனடியாக கைவிட வேண்டும், 4ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இலவசமாக அலைக்கற்றை வழங்க வேண்டும், ரிலயன்ஸ்ஜியோ தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் சார்பில் கே.சந்திரசேகரன், ராபர்ட், பட்டாபிராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், நிர்வாகிகள் பிரசன்னா, வேலுச்சாமி, செம்மல் அமுதம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உறையாற்றினர். இதில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொன்டனர்.