தீக்கதிர் செய்தி
பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம்
பொள்ளாச்சி,நவ. 21-
பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்கள்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆகியோரின் நலன் சார்ந்த கோரிக்கைகள் சில ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளாத போக்கினை கடைபிடித்து வருகிறது. கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரி வரும் நவ.27 ம் தேதிஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்ய அறைகூவல் விடுக்கப்பட்டு உள்ளது. அதன்முன்னறிவிப்பாக பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். குறைந்த பட்ச போனஸ் வழங்கவேண்டும், 78.2 ஊதிய மாற்றத்தை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
ஊதிய தேக்கத்தை நீக்க வேண்டும். ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 30அம்சக் கோக்கைகள் இவ்வார்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்குஜெயமணி தலைமை தாங்கினார்.நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்.பிரபாகரன், எஸ்.மனோகரன், வி.சசிதரன், எம்.பிட்டோ அலெக்சாண்டர், இ.அருள்குமார், ஜி.சந்திரசேகர், எ.ரவிசந்திரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
தினகரன் செய்தி
தின மலர் செய்தி