Saturday, February 27, 2010

பிஎஸ்என்எல் மாநில மாநாடு துவங்கியது

தூத்துக்குடி, பிப்.27-சனிக்கிழமையன்று தொடங்கிய பிஎஸ்என்எல் மாநாட்டில் காலை 9 மணிக்கு ஒட்டப்பிடாரத்தி லிருந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் கொண்டு வந்த வ.உ.சி. நினைவு ஜோதியை துணைப் பொதுச்செயலா ளர் பி.அபிமன்யு பெற்றுக் கொண்டார். அதன் தொடர்ச் சியாக எட்டையாபுரத்தி லிருந்து வந்த பாரதி நினை வுக் கொடியை பொதுச் செயலாளர் வி.ஏ.என்.நம்பூ திரி பெற்றுக் கொண்டார். மாநில உதவித் தலைவர் கே.மாரிமுத்து தியாகிக ளுக்கு அஞ்சலி அறிக் கையை சமர்ப்பித்தார். மாநாட்டிற்கு வந்திருந்தவர் களை வரவேற்புக்குழு பொதுச்செயலாளர் வர வேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து மாநில உதவிச் செயலாளர் எஸ்.முத்துக் குமாரசாமி வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலை வர் டி.ஏ.அம்புரோஸ் குழந் தைசாமி தலைமையுரை யாற்றினார். வி.ஏ.என்.நம்பூ திரி துவக்கவுரையாற்றினார். பின்னர் நடந்த கருத் தரங்கத்தில் மாநிலச் செய லாளர் செல்லப்பா, தமிழக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் டி.வரத ராஜன், அபிமன்யு ஆகி யோர் சிறப்புரையாற்றினர். அதன் பின் மாலை 5 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத் தொலைத் தொடர்பு அலுவலகம் முன் பிருந்து மாநாட்டு அரங்கம் வரை ஊழியர்களின் பேரணி நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலாளர் வி.ஏ.என். நம்பூ திரி மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:-இன்று விலைவாசி உயர் வுக்கு காரணம் மத்திய அர சின் முரண்பாடான கொள் கைகள் தான், தேவைக்கு அதிகமான சர்க்கரை கையி ருப்பு உள்ளது என்று கூறி வெளிநாடுகளுக்கு குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் மூலம் ஏற்றுமதி செய்து விட்டு, இப்பொழுது அதிக மான விலை கொடுத்து இறக்குமதி செய்கிறது. மேலும் அத்தியாவசியப் பொருட்களின் ஊக வர்த் தகம் என்ற பெயரில் பண முதலாளிகள் சூதாட்டம் நடத்துகின்றனர். இன்று பிஎஸ்என்எல் ஊழியர் நிலைமையை எடுத் துக் கொண்டால் ஊதிய மாற்றம் குறித்த பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது கலையப்பட வேண்டும். இதற்காக நாம் ஐஎன்டியுசி, பிஎம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு உள் ளிட்ட 9 சங்கங்களுடன் இணைந்து வரும் 5-ம்தேதி நாட்டின் கவனம் நம் பக்கம் திரும்பும் வண்ணம் சாலை மறியல், ரயில் மறியல் மூலம் சிறை நிரப்பும் போராட் டம் நடத்திட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறு வனத்தை கார்ப்பரேசன் ஆக மாற்ற முயன்றபோது, சில தொழிற்சங்கங்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற போது, நாம் உறுதியாக நின்று எதிர்த்தோம். இன்று இந்தியாவின் நம்பர் ஒன் ஏர்டெல், இரண்டாவதாக ரிலையன்ஸ் என்று சொல் லிக் கொள்ளத்தான் முடிகி றதே தவிர பிஎஸ்என்எல் என்று சொல்லிக் கொள் ளும் நிலைமை இல்லை. இதற்கு காரணம் அரசின் முறையற்ற செயல்பாடுகள் தான். அதுபோல் மத்திய அர சானது பன்னாட்டு முதலா ளிகளின் கைப்பாவையாக செயல்பட்டு, தொழிலாளர் சட்டங்களை முறையாக பயன்படுத்தாமல் 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். எனவே மார்ச் 5-ல் நாம் நடத்தும் போராட்டம் என்பது ஒரு பெரிய மாற்றத் திற்கான வழிகோலாக அமைய வேண்டும்.

செய்தி தீக்கதிர்

Thursday, February 11, 2010

அவினாசியில் TNTCWUஅமைப்பு தின கொண்டாட்டம்


தொழர் உசேன்கான் கொடியேற்ற தோழர் கணேசன் கோசமிட்டு தலைமையேற்க விழாவை தோழர் கிருஷ்ணன் உன்னி துவைக்கிவைதார் மாநில நிர்வாகி தொழர் செல்லத்துரை அவர்கள் சிற‌ப்புரை நிகழ்த்தினார் ,அவ‌ர் பேசுகையில் இந்த அமைபினை நாம் ப‌ல‌ப்ப‌டுத்த வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ளோம்,க‌ட‌ந்த 10 ஆண்டுக‌ளாக ப‌ல்வேறு போராட்ட‌ங்க‌ளை நாம் மேற்கொண்ட‌த‌ன் காராண‌மாக‌தான் ரூ 700,900 மும் ச‌ம்ப‌ள‌மாக‌ வாங்கிக்கொண்டிருந்த ஒப்ப‌ந்த ஊழிய‌ர்க‌ள் இன்று ரூ 3000 வரை ச‌ம்ப‌ள‌ம் பெறும்சூழ்நிலைமை உருவாகிஉள்ள‌து,ந‌ம‌துப‌ய‌ண‌ம் இன்னும் முடிய வில்லை இன்னும் நீண்ட நெடிய ப‌ய‌ண‌த்தை நாம் க‌ட‌க்க‌வேண்டியது உள்ள‌து.ந‌ம‌து இல‌க்கு குரூப் டி க்கு உண்டான ச‌ம்ப‌ள‌த்தை பெருவ‌து ம‌ட்டும‌ல்லாது நிர‌ந்த‌ர‌ம் ஆவ‌தும்தான்.வேலை நிர‌ந்தரமாக உள்ளது ஆனால் பணி நிரந்தரமாகாமல் இத்தனை வருடம் ஆகிவிட்டது இருந்தபோதிலும் நிரந்தரம் என்பது நமது லட்சியமாக கொண்டு முழுமூச்சாக செயல்படுவோம் .அந்த‌வ‌கையில் ப‌ல‌போராட்ட‌ங்க‌ளை செய்து பாண்டிச்சேரியில் போன‌ஸ் பெற்றுள்ள‌ன‌ர்அதுபோல் நாமும் பெற்வேண்டும்,நாகர்கோயிலில் முருகப்பன் என்ற‌ தோழ‌ர் இற‌ந்த‌த‌ற்கு குரூப் இன்சூர‌ன்ஸ்சில் ரூ.100000 பெற்றுத‌ந்த‌து ந‌மது ச‌ங்க‌ம்தான்,அதும‌ட்டும‌ல்லாது ரூ.1921 ஐ மாத‌பென்ச‌னாகவும் ரூ44,000 அரிய‌ர்சாக‌வும் பெற்றுத‌ன்த‌து ந‌ம‌து ச‌ங்க‌த்தின் பெருமையே ஆகும் இதில் நாக‌ர்கோயில் எம் பி தோழ‌ர் பெல்லார்மின் அவ‌ர்க‌ளின் பணியும் உதவியும் மகத்தானது பாராட்டத்தக்கது! நவம்பர் 2008 லிருந்து ஈபிஎஃப் ஈ எஸ் ஐ என சுமார் 21 ல‌ட்ச‌த்திற்கு மேல் பிடித்துள்ளன‌ர் இதுவ‌ரையில் க‌ணக்கு காட்ட‌ப‌ட‌வுமில்லை கொடுக்க‌ப‌ட‌வும் இல்லை இந்த‌பிர‌ச்சினை யை முக்கிய‌மாக ச‌ரிசெய்ய‌ப‌ட‌வேண்டும் இவ்வாறு கூரினார்
தோழ‌ர் க‌ணேச‌ன் ந‌ன்றி கூறி விழாவினை நிறைவுசெய்தார்

Monday, February 8, 2010

BSNLEUTIRUPUR: திருப்பூரில் TNTCWUஅமைப்பு தின கொண்டாடங்கள்

BSNLEUTIRUPUR: திருப்பூரில் TNTCWUஅமைப்பு தின கொண்டாடங்கள்
07/02/1999 ல் திண்டுக்கல்லில் சுமார் மூவாயிரம் பேர்முன்னிலையில் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆரம்பித்து இன்று 11 வருடம் ஆகிறது அதன் அமைப்பு தினமானது தமிழக மெங்கும் வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது.
கோவை மாவட்டத்தில் அனைத்து கிளைகளுக்குட்பட்ட மெயின் தொலைபேசி
நிலையங்களில் வெகு விமர்சையாக இன்று (08/02/2010)கொண்டாட பட்டது.விழாமுடிவில் அனைவ‌ருக்கும் இனிப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

கோவை :
--------------
கோவை மெயின் தொலைபேசிநிலையத்தில் தோழர் பாரதி தலைமையில் தோழர் மனோகரன்கோசமிட நமது சங்கத்தின் மூத்த தோழியர் மரகதம் அவர்கள் கொடியேற்ற மாவட்ட செயலர் தோழர் ராஜேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார்,அவர் பேசுகையில் இரண்டு சங்கங்களுமே ஒப்பந்த ஊழியர்களின் நலனில் அக்கரை கொண்டு செயல்பட்டு வருகின்றதுஇருந்தாலும் சம்பளத்தினை அதிகம் பெருவதே நமது தலையாய நோக்கமாக கொண்டு செயல்படவேண்டும் ,உண்மையான உணர்வோடு சங்கவேலைகளில் நாம் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை!.போராட்டம் இல்லாமல் யாராட்டமும்இல்லை என்பதை புரிந்துகொண்டு நாம் செயல்படவேண்டும் என உள் உணர்வோடு பேசியதுநெகிழ்ச்சியாக இருந்தது. மேலும் BSNLEUமாவட்ட முன்னாள் செயலர் தோழர் வெங்கட்ராமன்,தோழர் ஜேசுதுரை ,தோழர், பாலசண்முகம் அகியோர் கலந்து கொண்டு விழா வினை சிறப்பித்தனர் இறுதியில் மாநில நிர்வாகி தோழியர் ராஜாமணி நன்றி கூறி விழாவினை முடித்து வைத்தார் .பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

செய்தி தோழியர் ராஜாமணி
---------------------------------------------



திருப்பூர் :
------------
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய‌த்தில் தோழ‌ர் வாலீச‌ன் முன்னிலையில்
தோழ‌ர் சாமிய‌ப்ப‌ன் த‌லைமையில் தொழ‌ர் முத்துமாணிக்க‌ம் கோச‌மிட தோழ‌ர்.ர‌மேஷ்
கொடியேற்றினார்.அத‌ன்பின் தோழ‌ர் ராம‌சாமி,தோழர் அண்ணாத்துரை,சிற‌ப்பு அழைப்பாள‌ர் கோவை தோழ‌ர் மாரிமுத்து அவ‌ர்க‌ள் ப‌ல்வேறு விச‌ய‌ங்க‌ளை விள‌க்க‌மாக‌வும் சுருக்க‌மாக‌வும்,தெளிவாக‌வும்
எடுத்திய‌ம்பிய‌து பாராட்ட‌த்த‌க்க‌து!, தீண்டாமை ஒழிப்பு முன்ன‌ணி தோழ‌ர்.பி.ராம‌மூர்த்தி அவ‌ர்க‌ள் சிற‌ப்புரை யாற்றிய‌து மிக‌வும் சிற‌ப்பாக இருந்த‌து!அர‌சின் த‌வ‌ரான‌ பொருளாதார கொள்கை ப‌ற்றியும் ஒப்ப‌ந்த‌ம் என்றும் ப‌திலிஎன்றும் ப‌ல்வேறு பெய‌ர்க‌ளின் ஏழை ம‌க்க‌ளின்
உழைப்பு சுர‌ண்ட‌ப்ப‌டுவ‌தை தெள்ள‌த்தெளிவாக எடுத்துரைதார். தோழ‌ர்
ர‌மேஷ் ந‌ன்றி உரையோடு விழா இனிதே நிரைவடை‌ந்த‌து,இறுதியில் அனைவ‌ருக்கும் இனிப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து!


















Saturday, February 6, 2010

CMDக்கு மனு


--
--
--
--
--
--

--
--
--
--

--

------நன்றி தினமலர்-------


23/01/2010 அன்று 3G சேவை துவக்க விழா கோவையில்நடைபெற்றது. அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளவேண்டுமென கோவைமாவட்ட சங்கம் அறைகூவ‌ல் விடுத்த‌த‌ன் பேரில் ஆயிர‌க்க‌ண‌க்கான ஊழிய‌ர்க‌ள் திர‌ண்ட‌ன‌ர். மாண்புமிகு தொலைதொட‌ர்பு துறை அமைச்ச‌ர் ஆ.ராசா அவ‌ர்க‌ள் 3G சேவையை துவ‌க்கி வைத்தார்.பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் தோழ‌ர்.PRந‌ட‌ராஜ‌ன்,CMDதிரு குல்தீப் கோய‌ல், CGMம‌ற்றும் ப‌ல‌ர் உரையாற்றின‌ர்.PGMதிரு மேத்யூ ந‌ன்றி கூறி முடித்துவைத்தார். அவ்விழாவில் மாவட்ட சங்கம் சார்பில் BSNL,CMDதிரு.குல்தீப் கோயல் அவர்களை சந்தித்து மனு கொடுத்தோம்." ஊதிய மாற்றம் ,அனாமலி , பதவி உயர்வு கொள்கை ஆகியவற்றை காலதாமதமின்றிஅமலாக்கவேண்டும், BSNLல் பணிபுரியும் ஒப்பந்தஊழியருக்குநீதிமன்ற தீர்பின் படி ஊதியம் அளிக்கபடவேண்டும் "ஆகிய கோரிக்கைகளைமுன்வைத்தோம்.மனுவை பெற்றுக்கொண்ட ஆவன செய்வதாக உறுதியளித்தார்.மாவட்ட சங்கநிர்வாகிகள் தோழர்கள் வெங்கட்ராமன்ஜேசுதுரை ,சந்திரசேகரன்,மாரிமுத்து,ராஜேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்


வாழ்த்துக்களுடன்
செய்தி வழங்கியவர்
Sசுப்ரமணியம்
BSNLEU
கோவை மாவட்ட செயலர்

Monday, February 1, 2010

புகைப் படங்கள்















































































































































































BSNLEUகோவை


மாவட்ட செயலர் தோழர் சுப்ரமணியம்





--
--
--
--
--





மூன்று கிளை செயர்லர்கள்
தோழர் அண்ணாதுரை
தோழர் ஜோதிஸ்TTA
தோழர் ராமசாமி