Saturday, August 31, 2013
Sunday, August 25, 2013
Thursday, August 22, 2013
திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தககண்காட்சி
திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL ஊழியர் சங்கம், மற்றும் பின்னல் புத்தகாலயம் ஆகியவைகள் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.12-08-2013 அன்று பல்லடத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் நமது துறை சம்பந்தமாக சிம் விற்பணை மேளாவும் நடத்தப்பட்டது. புத்தகக்கண்காட்சியில் பல்லடம் [ 12-08-2013 ] மற்றும் திருப்பூரில் [14-08-2013 ] தலா ரூ.20,000 க்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. தொழிலாளர்கள் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் வரவேற்பு அமோகமாக இருந்தது. திருப்பூரில் நடந்த கண்காட்சியில் நமது துறையின் துணைப்பொதுமேலாளர். திரு.ராமசாமி, அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். . உடுமலை தளியில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ. 12,000 /- ம், வெள்ளக்கோவில் நடந்த புத்தககண்காட்சியில் ரூ. 15,000 /- ம் விற்பனையானது. புத்தககண்காட்சியை நடத்திய தோழர்களுக்கு மாவட்டச்சங்கம் மனதார பாராட்டுகிறது.
Sunday, August 18, 2013
திருப்பூரில் புத்தொளி பாய்ச்சிய புத்தகக் கண்காட்சிகள்
திருப்பூர், ஆக. 17-மனிதநேயத்தை போற்றும் மாற்றுப் பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புத்தகக் கண்காட்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சிகளில் அமோகமாக புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது.
பாரதி புத்தகாலயம், பின்னல் புத்தகாலயம் ஆகியவை இணைந்து புத்தகங்களோடு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் என்ற முழக்கத்தோடு 50 இடங்களில் புத்தகக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சுதந்திரத் திருநாளான 15ம் தேதி திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலும், அவிநாசி, மங்கலம், பொங்கலூர், மடத்துக்குளம், குடிமங்கலம், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
ஆசிரியர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வாலிபர் சங்கம், தமுஎகச உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே புத்தகக் கண்காட்சி நடத்தும் பணியில் இணைந்து செயல்பட்டனர்.திருப்பூர் காங்கயம் சாலை சிடிசி கார்னரில் அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியை ஈசா கார்மெண்ட்ஸ் எஸ்.சாதிக் அலி தொடக்கி வைத்தார். இதில் ஏ ஒன் பிரா எஸ்.மோகனசுந்தரம் தலைமை வகித்தார். முன்னதாக மருத்துவர் டி.தங்கவேல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
லிங்க்ஸ் சௌகத் அலி புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார். ஓடக்காடு பகுதியில் வாலிபர் சங்கம், சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கம் நடத்திய புத்தகக் கண்காட்சியை டீமா சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு பனியன் சங்கத் தலைவர் கே.காமராஜ், பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, நிர்வாகிகள் வி.நடராசன், கே.நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியுடன் ஓடக்காட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இரண்டாவது ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டுப் போட்டியும் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது.கே.தங்கவேல் எம்எல்ஏ கலந்து கொண்டு பரிசளித்து சிறப்புரை ஆற்றினார். வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.பாலா கலந்து கொண்டார். திருப்பூர் கலைக்குழுவின் தப்பாட்டமும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.மடத்துக்குளத்தில் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.எம்.வீரப்பன் தலைமை வகித்தார்
. எழுத்தாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.பி. சி.கிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர் துரையரசன், வட்டாட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள்
காங்கயம் புத்தக கண்காட்சி: ரூ.1 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை!
________________________________________
காங்கயத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் மகிழ்ச்சியுடன் புத்தகம் வாங்கிச் சென்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள்.
திருப்பூர், ஆக. 17-திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ரூ.1 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நாடந்துள்ளதாக கண்காட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக திருப்பூர் பின்னல் புத்தகாலயம் உதவியோடு காங்கயத்தில் வியாழக்கிழமை காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.சுதந்தர தினத்தை புத்தகங்களுடன் கொண்டாடுவோம் என்றமுழக்கத்தை முன்னிறுத்தி திருப்பூர் பின்னல் புத்தகாலயம், காங்கயம் கிளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இக் கண்காட்சியில் குழந்தை இலக்கியம், அறிவியல், கல்வி, சமூகம், பொருளாதாரம், உலகப் புகழ்பெற்ற இலக்கியங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ரூ.1லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கண்காட்சியின் பொறுப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவருமான தோ.ஜாண் கிறிஸ்துராஜ் கூறியபோது, காங்கயத்தில் ஒருநாள் மட்டுமே நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு 2ஆயிரம் மாணவர்கள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் வாசகர்கள் வந்திருந்தனர்.இதில், சுமார் 6 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். காங்கயம் நகரில் முதன்முறையாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டதால், குறைவான எண்ணிக்கையிலேயே புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வரும் ஆண்டுகளில் நடத்தப்பட உள்ள இக் கண்காட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள், பதிப்பகங்கள், அரங்குகள் இடம்பெறுமாறு திட்டமிடஉள்ளோம்.இந்த கண்காட்சிக்கு வந்திருந்த வாசகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் விருப்பம் தெரிவித்த தலைப்புகளில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்றார்.மங்கலம்திருப்பூர் அருகே மங்கலத்தில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கமும், பின்னல் புத்தக நிலையமும் இணைந்து வியாழக்கிழமை புத்தகக் கண்காட்சியும், கருத்தரங்கமும் நடத்தின.மங்கலம் நால் ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல் புத்தக விற்பனையைத் தொடங்கினார்.
முன்னாள் மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் வே.முத்துராமலிங்கம் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். ஏராளமானோர் இந்த புத்தகக் கண்காட்சியை கண்டுகளித்தனர்.நிறைவாக மாலையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச்செயலாளர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் அ.பழனிசாமி வரவேற்றார்.ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருணாகரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்கண்ணன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினர். நிறைவாக மங்கலம் சிஐடியு நிர்வாகிகளில் ஒருவரான குட்டி என்கிற மோகனசுந்தரம் நன்றி கூறினார்.
Wednesday, August 14, 2013
செய்தியும் புகைபடமும்
ஜெய்வாபாய் ஈஸ்வரன் அவர்கள்
ஜெய்வாபாய் ஈஸ்வரன் அவர்கள்
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பின்னல் புத்தகாலயம் சார்பாக இன்று நடைபெற்ற புத்தக கண்காட்சியை வாழ்த்தி, நஞ்சப்பா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சரசுவதி அவர்கள் பேசுகிறார்...சுவாமி விவேகானந்தர் கூறுவார்.. “ முகமது மலையைத்தேடி செல்ல வேண்டும்.. அப்படி செல்லாவிட்டால் மலை முகமதுவைத்தேடி வரவேண்டும்” என்பார்.. அது போல மக்கள் புத்தகம் வாங்க கடைகளுக்கு செல்லவேண்டும்..செல்லாவிட்ட ால்... புத்தகக்கடையே தொலைபேசி நிலையத்திற்கு வரவேண்டும்... திருப்பூர் மாவட்டத்தில் 50 இடங்களில் புத்தகம் மக்களை நோக்கி படையெடுக்கிறது...
Thursday, August 1, 2013
திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூலை 30-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை
செய்யும் ஊழியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர்
வாலீசன் தலைமை வகித்தார். இதில்
போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர்
சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர்
உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில்
சங்க நிர்வாகி எஸ்.சுப்பிரமணியம் உள்பட
பலர் திரளாகக் கலந்து
கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)