Saturday, April 13, 2013

வெற்றி நிச்சயம்

எஸ். செல்லப்பா
--------------------------------
்ீ்்்்ி்் ்ட்்ு்ை


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஐந்து உறுப்பினர் சரிபார்ப்பு தேர் தல்களில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ரகசிய வாக் கெடுப்பு மூலம் ஏப்ரல் 16, 2013 அன்று நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் 18 சங்கங்கள் போட்டியிட்டாலும், பிரதான போட்டி என்பது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும், என்எப் டிஇ (பிஎஸ்என்எல்) சங்கத்திற்கும் இடையே தான். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிஎஸ் என்எல்-ல் உள்ள டிஇபியு, எஸ்இடபிள்யுஏ, பிஎஸ்என்எல், எப்என்டிஓபிஇஏ, பிஎஸ்என் எல்எம்எஸ்மற்றும்என்எப்டிபிஇஆகியசங்கங் களுடன் கூட்டணி வைத்து ‘செல்போன்’ சின்னத்தில் போட்டியிடுகிறது. என்எப்டிஇ சங்கம், எஸ்என்ஏடிடிஏ, பிஎஸ்என்எல் இஎஸ், பிஎஸ்என்எல் பிஇடபிள்யுஏ, ஏஐபி சிடிஇஎஸ் மற்றும் பிஎஸ்என்எல்இசி ஆகிய சங்கங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த தேர்தலில் இந்திய நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-ல் பணி புரியும் 2,04,796 ஊழி யர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 1,15,000. (இதில் கூட்டணி சங்க உறுப்பினர்களின் எண் ணிக்கை சேர்க்கப்படவில்லை). ஆனால் என்எப்டிஇ சங்கத்தின் உறுப்பினர் எண் ணிக்கை 45,000க்கும் குறைவு தான். எனவே ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ள 6-வது சங்க அங்கீகார தேர்தலிலும் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம் கம்பீரமாக வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக தொடர் வெற்றி என்ற சாதனையை படைக்க உள்ளது. வெற்றி நிச்சயம்.
ஜனநாயகத்தின் பாதுகாவலன் : பிஎஸ்என்எல்-ல் ஒரே அங்கீகரிக்கப் பட்ட சங்கமான பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம், விகிதாச்சார அடிப்படையில் சங்க அங்கீ காரம் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை நிர்வாகத்திடம் வைத்து போராடி வந்தது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பிஎஸ்என்எல் நிறுவ னம், புதிய அங்கீகார விதிகளை உருவாக்கி உள்ளது. கடந்த ஐந்து சங்க அங்கீகார தேர்தல் களிலும் அதிக வாக்குகளை பெறும் ஒரே சங் கத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடைபெற உள்ள ஆறாவது சங்க அங்கீகார தேர்தலில், 50 சத விகிதத்திற்கும் மேல் ஒரு சங்கம் வாக்கு களை பெற்றது என்றால்/ ஒரே சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். 50 சத விகித வாக்குகளை யாரும் பெறவில்லை என் றால், 35 சதமான வாக்குகளை பெறும் சங்கம் முதன்மை சங்கமாகவும், அடுத்து 15 சதமான வாக்குகளை பெறும் சங்கம் இரண்டாவது அங் கீகார சங்கமாகவும் அங்கீகரிக்கப்படுவார்கள். 2சதவிகித வாக்குகளை பெறும் சங்கங்க ளுக்கு சில தொழிற்சங்க சலுகைகள் வழங் கப்படும். ‘ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் தான்’ என்று என்எப்டிஇ சங்கம் முதலில் முழங் கியது. இரண்டாவது தேர்தலில் தோற்கும் வரை இதைத்தான் பறைசாற்றியது. தேர் தலில் தோற்றவுடன், ‘இரண்டாவது சங்கத் திற்கும் அங்கீகாரம் கொடு’ என்று நிர்வாகத் துடன் மன்றாட ஆரம்பித்தது. ஆனால் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தான் முதலில் இருந்தே, தொடர்ந்து விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என கொள்கை அடிப்படை யில் நின்று போராடி வெற்றியும் பெற்றுள்ளது. எனவே ஜனநாயகத்தின் பாதுகாவலன் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தான்.
பிஎஸ்என்எல்-ன் பாதுகாவலன் : கார்ப்பரேட் நிறுவனங்களின், தனியார் முத லாளிகளின் கட்டுப்பாட்டில் இந்திய அர சாங்கம் இயங்குகிறது. இவர்களின் கட்ட ளைக்கு அடிபணிந்து பொதுத்துறை நிறுவ னங்களை இந்திய ஆட்சியாளர்கள் சூறை யாடுகின்றனர். ’புதிய தாராளமய பொருளாதார கொள்கை’ என்ற பெயரில் இந்திய ஆட்சி யாளர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கின்றனர். தனியாரை ஊக்கு வித்து, பொதுத்துறைகளை நஷ்டமாக்கி பின் தனியாரை கேந்திர பங்குதாரராக (ளவசயவநபiஉ யீயசவநேச) மாற்றி அவர்களுக்கு இந்த பொதுத் துறைகளை விற்கும் புதிய யுக்தியை கடைப் பிடிக்கின்றனர். இரண்டரை லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனம் 10,000 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு நஷ் டம் ஏற்படுவதற்கு அரசின் இந்த கொள்கை கள் தான் காரணம். அரசின் அனைத்து தொலை தொடர்பு கொள்கைகளும், என்டிபி 1995, என்டிபி 1999, என்டிபி 2005 மற்றும் என்டிபி 2012 ஆகிய அனைத்துமே தனியார் நிறுவனங்கள் கொழுக் கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவ டையுமே செய்துள்ளன. இப்படிப்பட்ட அரசின் கொள்கைகளை எதிர்த்து 1991 முதல் பிப்ரவரி 2013 வரை நடை பெற்ற அனைத்து 15 தேசிய பொது வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்ற பெருமை பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த காலங்களில் என்எப்டிஇ சங் கம் இது போன்ற போராட்டங்களில் ஒதுங்கி நிற்கும். தலமட்டங்களுக்கேற்ப முடிவு செய் யுங்கள் என்று என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை உபதேசம் செய்யும். தொடர்ந்து நாம் வேலை நிறுத்தங்களில் பங் கேற்றதால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக சமீபத்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை அறிவிப்பாவது வெளியிட்டது. மெல்ல பிஎஸ்என்எல் மடியும் என்று மனப் பால் குடித்த ஆட்சியாளர்களின் மனக் கோட்டை தகரும் வண்ணம், பிஎஸ்என்எல்-ஐ உயிரைக் கொடுத்தும் காத்திடுவோம் என ஊழியர்களையும், அதிகாரிகளையும், உடலை சிலிர்ப்பி, நெஞ்சுயர்த்தி நின்று போராட்ட களத்தில் போராடச்செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தான். இப்படிப்பட்ட வரலாறு ஏதாவது என்எப்டிஇ சங்கத்திற்கு உண்டா? இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில், ‘அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எதிர்க்க முடியாது’ என்பதே என்எப்டிஇ சங் கத்தின் கொள்கை முழக்கமாகும். உதாரணமாக தொலை தொடர்புத்துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். என் எப்டிஇ சங்கம் அரசின் இந்த முடிவுக்கு ஆதர வாக நின்று தொலை தொடர்புத் துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்று செப்டம்பர் 2000ல் வேலை நிறுத்தம் செய்தது. கார்ப்பரேஷன் என்பது தனியார்மயத்தின் முதல் படி என்று ஊழியர்களிடம் விளக்கி கார்ப்பரேஷன் கூடாது என்று வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தியது பிஎஸ் என்எல் ஊழியர் சங்க தலைமை. ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக என்எப்டிஇ சங்கம் செயல்பட்டதால் பிஎஸ் என்எல் நிறுவனத்தை அரசால் எளிதாக உரு வாக்க முடிந்தது. “பிஎஸ்என்எல் நிறுவனத் தின் ஐம்பது சதவிகித பங்குகள் விற்கப்பட் டால், ஊழியர்”களை மூன்று மாதம் ஊதியம் கொடுத்து (ஹசவiஉடந 25 சூ, ஐனு ஹஉவ 1947) வீட் டுக்கு அனுப்ப வேண்டும்” என கார்ப்பரேஷ னாக மாற்றும் போது உடன்பாடு போட்டது அன்றைக்கு அங்கீகாரம் பெற்றிருந்த என்எப் டிஇ தலைமை. இதுஎன்எப்டிஇ-யால் மறை க்கவும் முடியாது. ஊழியர்களால் மன்னிக்க வும் முடியாது.
பாஜக- ஐ.மு.கூட்டணி வித்தியாசம் ஏதும் இல்லை : முந்தைய பாஜக ஆட்சியில் ஜக்மோகன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார். தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அமைச்சரை சந்தித்து ‘இந்திய அரசாங்கத் திற்கு லைசென்ஸ் முறையில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளது, வருவாய் பங்கீடு (சுநஎநரேந ளாயசiபே) முறையில் கட்டணம் செலுத்துகிறோம்’ என்று மகஜர் கொடுத்தனர். “கட்டண முறையை மாற்றினால் அரசுக்கு 50,000 கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்படும். பிஎஸ்என்எல் நஷ்டம் அடையும்” என்பதால் ஜக்மோகன் மறுத்தார். தனியார் கம்பெனிகள் பாரத பிரதமர் வாஜ்பாயை பார்த்தனர். பாரத பிரதமர் தனியார் கம்பெனிகளின் கோரிக் கையை ஏற்றுக் கொண்டார். இந்திய அரசுக்கு 50,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. அதோடு தொலைத் தொடர்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து ஜக்மோகன் தூக்கியடிக் கப்பட்டார். தனியார்களின் செல்வாக்கு புரிகிறதா? ஐ.மு.கூட்டணிஅரசாங்கத்தின்நிதியமைச்சராக பிரணாப்முகர்ஜி இருந்த போது, வோடோ போன்நிறுவனம்2007ஆம்ஆண்டு7,000கோடி ரூபாய்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற வரு மான வரித்துறை (ஐnஉடிஅந கூயஒ) குறிப்பினை ஏற் றார். 4,000 கோடி அபராதத்துடன், 11,000 கோடி ரூபாய்களை கட்ட வேண்டும் என வோடா போன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்தார். வோடாபோன் 11,000 கோடியை கட்ட மறுத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றமோ ‘முன் தேதி யிட்டு வரிபிடித்தம் செய்ய வருமானவரித் துறையின் சட்டங்களில் இடம் இல்லை’ என்று கூறியது. பிரணாப் முகர்ஜி நாடாளு மன்றத்தில் வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கூறினார். வோ டோபோன், பிரதமரை சந்தித்து முறையிட்டது. காங்கிரஸ் கட்சியும் சமயம் பார்த்து தனியார் கம்பெனிகளுக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் சிதம்பரத்தை நிதி அமைச்சராகவும், கபில் சிபலை தொலை தொடர்புத்துறை அமைச்சராகவும் மாற்றியது. பின்பு ’பார்த்த சாரதி ஷோம்’ தலைமையில் ஒரு கமிட்டி போட்டு வோடோபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய்களை கட்டாமல் பார்த்துக் கொண்டனர். பன்னாட்டு பகாசுர கம்பெனி களின் பலம் புரிகிறதா?ஆனால் பிஎஸ்என்எல் என்ற பொதுத் துறை நிறுவனத்திலிருந்து பிடபிள்யுஏ ஸ்பெக்ட்ரம் கட்டணம் என்றும் லைசென்ஸ் கட்டணம் என்ற வகையிலும், 18,500 கோடி ரூபாய்களை இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் கை யிருப்பு இல்லாமல் தவிக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தான் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம், அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஒன்று படுத்தி “FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS OF EXECUTIVES / NON EXECUTIVES” என்ற அமைப்பின் மூலமாக தொடர்ந்து போராடி வருகிறது.
காப்பர் கேபிளை காத்தோம் : பிஎஸ்என்எல்-ன் மார்க்கெட் ஷேர் செல் போன் சேவையில் 11சதவீதமாகவும், ப்ராட் பேண்ட் சேவையில் 65ஆகவும் இருக்கிறது என்று சமீபத்தில் தொலை தொடர்பு அமைச் சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ப்ராட் பேண்ட் சேவைக்கு மிகவும் அத்தியாவசிய தேவையான கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயற்சித்தபோது, பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் அதிகாரிகளின் சங் கங்களையும் ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு 2006ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்தது. அதனால் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி கேபிளை தனியாருக்கு விடும் திட்டத்தை கைவிட்டு தோழர் நம்பூதி ரியிடம் ஒப்பந்தம் போட்டது. இதன் காரண மாகத்தான் இன்று ப்ராட் பேண்ட் சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதலிடத்தை வகிக்கிறது.
பங்கு விற்பனை : பிஎஸ்என்எல்-ன் பங்குகள் விற்பனை செய்வதை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்து போராடி தடுத்து வரு கிறது. ஆனால் என்எப்டிஇ சங்கம் ‘50சத வீதப் பங்குகள் விற்றாலும் பரவாயில்லை. பென்சன் வேண்டும்’ என்றே பிரச்சாரம் செய் கிறது. அங்கீகரிக்கப்பட்ட எட்டு ஆண்டு களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு சத விகித பங்குகளை கூட விற்க விடாமல் தடுத்த பெருமை பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்திற்கு மட்டுமே உண்டு.
விருப்ப ஓய்வுத் திட்டம் : முதல் சங்க அங்கீகார தேர்தலுக்கு பின் னர் பிஎஸ்என்எல்-ல் உள்ள 50,000 ஊழியர் களை விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வீட் டுக்கு அனுப்பலாம என்கின்ற நிர்வாகத்தின் முன்மொழிவினை என்எப்டிஇ சங்கம் ஏற்றுக் கொண்டது. அதனை நியாயபடுத்தும் வகை யில், இது விருப்ப ஓய்வு திட்டம் கிடையாது. விருப்ப மாற்றியமைக்கும் திட்டம் என்று வியாக்கியானம் பேசியது. ஆனால் பிஎஸ்என் எல் ஊழியர் சங்கம் இரண்டாவது சங்க அங் கீகார தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கடு மையான எதிர்ப்பின் மூலம் அதனை முறி யடித்தோம். அதே போல 2012ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் நியமித்த சாம் பிட்ரோடா கமிட்டியும், ஒரு லட்சம் ஊழியர்களை வீட் டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்று பட்ட போராட்டங்கள் மூலமாக அரசின் முயற் சிகளை எல்லாம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து முறியடித்து வந்துள்ளது.என்எப்டிஇ சங்கம் 25 ஆண்டு காலத் திற்கு முன்பு போட்ட பதவி உயர்வு திட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மாற்றி புதிய பதவி உயர்வு திட்டத்தை புகுத்தியது. 98 சதவிகித ஊழியர்களுக்கு பல பத்தாயிரக் கணக்கான ரூபாய்கள் நிலுவைத் தொகையாகவும் பெற்றுத் தந்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தான். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசு பென்சன் வழங்கப்படுவதை உறுதி செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அது மட்டுமல்லாமல் ஐடிஏ ஊதிய விகிதத் தில் பென்சன் மாற்றம் செய்ய முடியாது என்று இருந்ததை மாற்றி அமைத்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
ஒப்பந்த ஊழியர்கள் : பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். இவர்களை நிர் வாகம் சுரண்டுவதை தடுக்க ஒப்பந்த ஊழி யருக்கான அகில இந்திய/ மாநில அமைப்பு களை உருவாக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம் தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத் தில் 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களை திரட்டி மாநில சங்கம் அமைத்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறது. அதன் விளைவாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத் தரவின் படி ஊதியம் பெற்றுத் தந்துள்ளோம். அவர்களுக்கான சட்ட சலுகைகள் அமலாக் கப்பட்டு வருகின்றன. அவர்களின் நிரந் தரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகஇந்திய நாட்டில் பல நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்களுக்கெதி ரான கொடுமைகளுக்கு எதிராக போராடி வரும் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி யில் அங்கம் வகிப்பதோடு, அவர்களுக்கு ஆத ரவாக பல இயக்கங்களையும் நடத்தி வருகி றோம். தர்மபுரியில் தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்களுக்கு வழக்கு நிதியாகவும் ஒரு லட்ச ரூபாயினை தீண்டாமை ஒழிப்பு முன்ன ணிக்கு வழங்கியும் உள்ளது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடுவது... ஊழியர் நலனில் அக்கறை..... சமுதாய பார்வையோடு செயல் படுவது......தேசத்தை பாதுகாக்கும் போராட்டத் தில் உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து போராடுவது..... என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வாக்குறுதி அளிக்கிறது. 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றி பெறப்போவது நிச்சயம். இன்னமும் அதிக மான வாக்குகளை பெற்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தை வெற்றி பெற செய்யவேண் டுமென பிஎஸ்என்எல் ஊழியர்களை தோழ மையுடன் கேட்டுக் கொள்கிறோம். கட்டுரையாளர், மாநிலச் செயலாளர்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ் மாநிலம்.


Tuesday, April 9, 2013

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

கோவை மாவட்ட தேர்தல் சிறப்பு கூட்டத்தின் புகைப்படம் ,வீடியோ உதவி தோழர் அண்ணாத்துரை பி பி புதூர்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !
கோவையில் நடைபெற்ற UNITED FORUM சங்கங்கங்களின் தேர்தல் சிறப்புக்கூட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 350க்கும் மேற்பட்ட பெண் தோழியர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அலைகடலென திரண்டு இருந்த கூட்டத்தை பார்த்த தலைவர்கள .இந்தக்கூட்டம் நமது சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இபொழுதே நமது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ,நமது வெற்றியில் என்றைக்கும் கோவைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு என்று பெருமிதப்பட்டார்கள். கீழே புகைப்படங்கள் சிலவற்றை தந்துள்ளோம்