-தாஸ்
------(நன்றி தீக்கதிர்)--------
“மனித குலத்தின் நலனுக்காக கம்யூனிஸ்ட்கள் தங்களது கடைசி மூச்சு உள்ள வரை பாடுபடுவார்கள் என்றுதான் நான் வெகு காலமாக நம்பி வந்தேன். அவர்கள் இறப்புக்குப் பின்னும் மனித இனத்துக்கு உழைக்க முடியும் என்பதை இன்று நான் அறிந்துகொண்டேன்” என்று ஜோதிபாசு மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஒருவர் இறந்தபின் அவருடைய உடலை ஆராய்ச்சிக்காக மருத்துவக்கல் லூரிகளுக்கும் ஆராய்ச்சிக் கூடங்களுக் கும் அர்ப்பணிக்கப்பட்டு வருவதை இன்று செய்தித்தாள்களில் வெகுவாகக் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு இது போன்ற விழிப்புணர்வு மக்களிடம் காணப்பட வில்லை. இறந்தவருக்கு சாதிய, மத ரீதியில் இறுதிச்சடங்குகள் நடத்தப்படு வது அன்றைய காலகட்டங்களில் கட்டா யமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இறந்தவரின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க பல பொதுநல அமைப்புகள் அரும்பாடுபட்டுவந்தன. கொல்கத் தாவில் செயல்பட்டு வந்த கன தர்பன் (ழுஹசூஹ னுஹசுஞஹசூ) என்ற அமைப்பும் அத்தகையதொன்றாகும்.
மனித உடல்தான விழிப்புணர்வு மாநாட்டை தொடக்கி வைக்கும்படி கன தர்பன் அமைப்பின் பொதுச்செயலா ளர் புரோஜோ ராய், ஜோதிபாசுவை அணு கினார். அவரும் அதற்கு உடனடியாக இசைவு தெரிவித்தார். “என்னுடைய உடலை தானமாக அளிக்காமல், அந்த மாநாட்டை நான் எப்படி தொடங்கி வைக்க முடியும். எனக்கும் ஒரு ஒப்ப டைப்புப் படிவத்தைக் கொடுங்கள்” என்ற கேள்வியை எழுப்பி ஒரு படிவத் தையும் பெற்றுக்கொண்டார் என்று ராய் கூறுகிறார்.
உடல்தான விழிப்புணர்வு மாநாடு 2003ம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜோதிபாசு மாநாட்டைத் தொடக்கி வைத்தார். தொடக்கவுரை முடிந்தவுடன் தன்னுடைய உடலைத் தானமாக அளிக்கும் உறுதிப்பத்திரத்தை பூர்த்தி செய்து மாநாட்டு அமைப்பாளர் களிடம் அளித்தார். அத்தொடக்க வுரையில் ஜோதிபாசு குறிப்பிட்ட வாசகம் தான் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்களாகும். அந்த வாசகங்கள் இன்றுவரை கனதர்பன் அமைப்பின் முத்திரை வாசகங்களாக நீடித்து வருகின்றன.
ஜோதிபாசு போன்ற அபூர்வமான மனிதர் எங்களுடைய நோக்கங்களுக் காக முதல் அடி எடுத்து வைத்தபின் எங்களுக்கு வேறு என்ன உந்துதல் தேவைப்படுகிறது. அவர் அவருக்கே உரித்தான வழியில் எங்களுடைய செயல் பாடு குறித்து பலரிடம் கூறி வருகிறார் என்று பின்னர் பலர் தன்னிடம் கூறிய தாக ராய் ‘பிரண்ட் லைன்’ இதழிடம் தெரிவித்து உள்ளார்.
2010 ஜனவரி 17 அன்று ஜோதிபாசு இறவாப்புகழ் அடைந்தார். அவருடைய உடல் தகனம் செய்யப்படவோ, புதைக் கப்படவோ இல்லை. அவருடைய உடல் முதுநிலைப்பட்ட மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திடம் ஒப் படைக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய ஒன்பது பெருந்தலைவர்களில் இறுதியாக மறைந்தவர் ஜோதிபாசு. இந்திய மக்களின் குறிப்பாக வங்க மக் களின் எழுச்சிக்குரலாக கருதப்பட்ட அருந்தலைவர் அவர். 1977 ஜூன் 21 முதல் 2000 நவம்பர் 6 வரை 23ஆண்டு களாக தேர்தல் நடைமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றிய கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற சாதனை யைப் படைத்தவர் ஜோதிபாசு. பார்வர்டு பிளாக் தலைவர் தேவபிரதா பிஸ்வாஸ் வார்த்தைகளில் கூறுவதென்றால் “வர லாறு ஜோதிபாசுவை உருவாக்கியது. ஜோதிபாசு வரலாற்றைப் படைத்தார்” என்பது பொருத்தமாகும்.
சாதாரண காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்கொண் டவர்கள் பெரும்பாலோர். ஆனால் கட்சி, அரசால் தடை செய்யப்பட்டிருந்த காலத் தில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1984ல் இந்திரா காந்தி கொலையுண்டபோது, கொல்கத்தாவில் ஒரு சீக்கியரின் நகம் கூட பெயராது பார்த்துக்கொண்ட அற்புத மான நிர்வாகி இவர்.
முதல்வரான பின்னும் அவர் மக்க ளை விட்டுப் பிரியவில்லை. அவரைச் சுற்றி என்றுமே காவல்துறையின் மெய்க் காவலர்களோ, கமாண்டோக்களோ நின்றதில்லை. மக்களே அவருக்குப் பாதுகாவலர்களாகவும் அவர் மக்களுக் குப் பாதுகாவலராகவும் திகழ்ந்தார். முதல்வரான பின்பும் சைக்கிளில் ஏறி கடைகளுக்குச் சென்று மீனும் காய்கறி யும் வாங்கி வருவதை அவர் நிறுத்த வில்லை. அவருக்குப் பின் யாரும் பாது காப்புக்குச் சென்றதில்லை. அதுபற்றி செய்தி வெளியிட்டு வியக்காத செய் தித்தாள்களே இல்லை.
ஜோதிபாசு கட்சிக்காரர்களால் மட்டுமல்ல, அவருடைய அரசியல் எதிரி களாலும் மதிக்கப்பட்டவர். இன்றைய நாட்களில் மேற்கு வங்கத்தில் இடது சாரிக் கட்சிகளை எட்டிக்காயாய் நினைக் கும் மம்தா பானர்ஜி கூட ஜோதிபாசுவை நேருக்கு நேர் சந்தித்தால் பாசுவின் காலைத் தொட்டு வணங்கிச் செல்வார்.
சித்தார்த்த சங்கர்ரே மேற்குவங்கத் தில் அரைப்பாசிச ஆட்சியை நடத்திய காங்கிரஸ் முதல்வர் ஆவார். 1972 முதல் 1977 வரை மேற்குவங்கத்தில் நடந்த இருண்ட ஆட்சிக்கு அவர்தான் தலை மையேற்றார். “நாங்கள் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டோம். ஆனால் கொடூரமாக மோதிக்கொண்ட தில்லை” என்று கூறியதுடன் இத்த கைய மனிதருடன் இணைந்து செயல் படக்கிடைத்த வாய்ப்பால் பெருமை அடைவதுடன், அது ஒரு அளப்பரிய அனுபவம் என்றும் அவர் சொல்கிறார்.
மேற்குவங்கத்தில் நடந்த நிலச்சீர் திருத்தம் வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததில்லை. ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அவருடைய மதியூகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் வெறுமனே உரையாற்றவில் லை; அவர்களை வழிநடத்திச் சென்றார் என்று வங்கத் திரையுலகப்பிரமுகர் சௌமித்ரா சாட்டர்ஜி நினைவு கூர்கிறார்.
ஒரு முன்னணி அரசை எப்படி நடத்திச் செல்ல வேண்டுமென்பதை அவர் நன்கறிந்தவர். காவல்துறை, அதிகாரவர்க்கம், நிர்வாகம் அனைத்தும் அரசியல் அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் திடமாக இருந்தார். எந்தவொரு மக்கள் நலன், தொழிலாளர் நலன் குறித்த போராட்டங் களில் காவல்துறை தலையிடக்கூடாது என்பது அவர் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் எடுத்த முதல் முடிவாகும்.
மக்களுக்கு உழைப்பதை அவர் மூச்சாகக் கொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய இறுதி ஊர்வலத்தின்போது கொல்கத்தா வீதிகளில் அரசியல் கட்சி பேதமின்றி திரண்ட இந்திய மக்களின் திரளே சாட்சி.
“வாழ்க்கையில் மக்களின் அன்பைக் காட்டிலும் விலை மதிப்புடைய வேறு எதுவும் இருக்க முடியாது. மிகப்பெரிய லட்சியத்துக்காக உயிரையும் தியாகம் செய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருந்தோம்... ஒரு பயனற்ற வாழ்வை வாழ்ந்தோம் என்ற வருத்தம் எப்போதும் இருந்ததில்லை. அதுதான் என்னுடைய ஆழமான நம்பிக்கையாக இருந்தது”
ஜோதிபாசு சொன்னவர் மட்டுமல்ல.. வாழ்ந்து காட்டியவர்...
---(கட்டுரை தீக்கதிர்)----
Wednesday, January 19, 2011
Wednesday, January 12, 2011
BEST BEST TELEPHONE EXCHANGE AWARDS
கோவை மாவட்ட இரண்டாம் நிலை தொலைபேசி நிலையங்களில் முதன்மை இடத்தை (BEST TELEPHONE EXCHANGE AWARD) திருப்பூர் பெருமாநல்லூர் தொலைபேசி நிலையம் பெற்றுள்ளது
இது நமக்கும் பெருமையே !!!
புகைப்பட உதவி
தோழர் தங்கராஜ்
பி பி புதூர் கிளை
செயலர்
TNTCWU
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோவை மாவட்ட இரண்டாம் நிலை தொலைபேசி நிலையங்களில் முதன்மை இடத்தை (BEST TELEPHONE EXCHANGE AWARD) திருப்பூர் பெருமாநல்லூர் தொலைபேசி நிலையம் பெற்றுள்ளது
இதை போற்றுகினற வகையில்
BSNLEU மாநில ,கொவை மாவட்ட ,முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
இது நமக்கும் பெருமையே !!!
புகைப்பட உதவி
தோழர் தங்கராஜ்
பி பி புதூர் கிளை
செயலர்
TNTCWU
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோவை மாவட்ட இரண்டாம் நிலை தொலைபேசி நிலையங்களில் முதன்மை இடத்தை (BEST TELEPHONE EXCHANGE AWARD) திருப்பூர் பெருமாநல்லூர் தொலைபேசி நிலையம் பெற்றுள்ளது
இதை போற்றுகினற வகையில்
BSNLEU மாநில ,கொவை மாவட்ட ,முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
Thursday, January 6, 2011
" தொலைத் தொடர்பு தோழன் "
நம் வாக்கு உயர்ந்தால்
செல்வாக்கும் உயரும்
"செல்"வாக்கு உயர்ந்தால்
சொல்வாக்கும் உயரும்
பல்லாக்கு உயர்ந்தால்
பலர் ஏக்கமும் உயரும்!!!
***********************
வரிசை எண்ணோ எட்டு !
பார்த்து போடவேண்டும் ஓட்டு !
எதிராழிகளை ஈக்கள் போல் ஓட்டு
புரட்சிக்கரங்களை ஒற்றாகத் தட்டு
எதிராக இணைந்த பல கரங்களை
அன்புக்கரம் கொண்டு ஓட்டு
கறைபடிந்த கரங்கள் பல இணைந்தாலும்
="செல்"..... ஜெயிக்கும் எனக் காட்டு
வெற்றிப்பா.... மாலையை
நம் தலைவனுக்குச் சூட்டு !
தேர்தல் சிறப்பு தொலைத் தொடர்பு தோழன்
-------------------------------------------------------------------
"நன்றி"
http://www.tncirclebsnleu.com/
ஆசிரியர் S.செல்லப்பா
cel
"நன்றி"
http://www.tncirclebsnleu.com/
செல்வாக்கும் உயரும்
"செல்"வாக்கு உயர்ந்தால்
சொல்வாக்கும் உயரும்
பல்லாக்கு உயர்ந்தால்
பலர் ஏக்கமும் உயரும்!!!
***********************
வரிசை எண்ணோ எட்டு !
பார்த்து போடவேண்டும் ஓட்டு !
எதிராழிகளை ஈக்கள் போல் ஓட்டு
புரட்சிக்கரங்களை ஒற்றாகத் தட்டு
எதிராக இணைந்த பல கரங்களை
அன்புக்கரம் கொண்டு ஓட்டு
கறைபடிந்த கரங்கள் பல இணைந்தாலும்
="செல்"..... ஜெயிக்கும் எனக் காட்டு
வெற்றிப்பா.... மாலையை
நம் தலைவனுக்குச் சூட்டு !
தேர்தல் சிறப்பு தொலைத் தொடர்பு தோழன்
-------------------------------------------------------------------
"நன்றி"
http://www.tncirclebsnleu.com/
ஆசிரியர் S.செல்லப்பா
cel
"நன்றி"
http://www.tncirclebsnleu.com/
Subscribe to:
Posts (Atom)